
மழலை முகத்தில் சிரிப்பு
பட்ட வலிகள் மறந்து
மனதில் வந்தது பூரிப்பு

மலர்ந்து மின்னும் பூக்கள்
மரங்களிலும் சுவர்களிலும்
சீரியல் மின் விளக்குகள்

தொலைந்து போனது கனவு
தேடிச் சென்றதில்
கலைந்து போனது நனவு

பரந்து கிடக்கும் புல்வெளி
அழகாக சிரிக்கும்
பூவின் மீதொரு பனித்துளி
<படங்கள்: இணையம்>
11 comments:
அருமையான எண்ணங்களின் வரிகள்..
அருமையாக இருக்கிறது.
தங்களின் ஆர்வமும் ஆவலும் தங்களின்
பாக்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளது.
படங்களும் பாக்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன்.
/மழலை முகத்தில் சிரிப்பு
பட்ட வலிகள் மறந்து
மனதில் வந்தது பூரிப்பு/
வேதனைகள் எல்லாம் வந்த இடம் தெரியாமல் செல்லும் கள்ள கபடமற்ற்
குழந்தையின் புன்னகைக்கு பொன்னகையும் ஈடு இல்லை என்று இயம்புகின்றது தங்களின் வரிகள்
/மலர்ந்து மின்னும் பூக்கள்
மரங்களிலும் சுவர்களிலும்
சீரியல் மின் விளக்குகள்/
விளக்குகளை எல்லாம் பூக்கள் புனைந்து பாக்களுக்கு புது வடிவம் தந்துள்ளது தங்களின் வரிகள்
/தொலைந்து போனது கனவு
தேடிச் சென்றதில்
கலைந்து போனது நனவு
/
நிதர்சனத்தை விட்டு நிழலுடன் போராடுவது எத்தனை முட்டாள் தனம் என்பதை இடித்துரைக்கிறது
உங்களின் பாக்கள்.
/பரந்து கிடக்கும் புல்வெளி
அழகாக சிரிக்கும்
பூவின் மீதொரு பனித்துளி/
கம்பனின் வார்த்தைகளை கண் முன்னே காட்டுகிறது .
வார்த்தை வடம் பிடித்து இதயங்களில்
இடம் பிடித்து உள்ளீர்கள்
மாதம் ஒரு முறை ஏனும் இது போன்ற இடுகை இட்டு தமிழ் இன்பத்தை அளிக்க வேண்டுகின்றேண்.
அன்புடன்
திகழ்
\\தொலைந்து போனது கனவு
தேடிச் சென்றதில்
கலைந்து போனது நனவு\\
\\பரந்து கிடக்கும் புல்வெளி
அழகாக சிரிக்கும்
பூவின் மீதொரு பனித்துளி\\
மிக அழகு
நன்றி ஞானசேகரன்
ஊக்கத்திற்கு மிக்க நன்றி திகழ்
நன்றி ஜமால்
பாராட்டுக்கள் அமுதா!
அத்தனையும் அருமை. படங்களும் மிகச் சிறந்த தேர்வு.
கியூட்டான வரிகள்...
அனைத்தும் அழகு !!!
அருமை அமுதா. பாராட்டுக்கள்!!!
படம் பார்த்து கதை சொல்லுவதைத்தான் பார்த்திருக்கிறேன். படம் பார்த்து பா எழுதுவதை இங்குதான் பார்க்கிறேன். அழகு தோழி!
ரொம்ப நல்லா இருக்குங்க!
அத்தனையும் பிடித்திருந்தது.
அதிலும் முதலும் மூனவதும் மிகவும் அருமை.
//தொலைந்து போனது கனவு
தேடிச் சென்றதில்
கலைந்து போனது நனவு//
வெகு அழகு :)
நன்றாக இருகிறது நண்பரே!
Post a Comment