என் மேகம் ???

Wednesday, April 29, 2009

பயம்

"பே" என்ற சத்தத்தில்
திடுக்கிட்டு திரும்பினேன்
பயந்தது நான் மட்டுமே
கலகலவென்று அருகில்
சிரித்தது மழலை...

முன்னொரு பொழுதில்
நானும் இருந்திருக்கலாம்
பயம் அறியாமல் சிரித்தபடி...

தனிமையின் துணையில்
அடிவயிற்றில் சுருள்கிறது
ஆளில்லா இடத்தில்
நெஞ்சில் மிதிக்கிறது
அரவமில்லா பொழுதில்
மூச்சை அடைக்கிறது

எப்பொழுது என்னுள்
நுழைந்தது என்று தெரியவில்லை
ஆனால் எப்படியோ
என்னுடன் இருக்கிறது

தனிமையான நாளில்
இருளின் அடர்த்தியில்
நிசப்தம் நுழையும் பொழுது
என்னுள் படர்கிறது

வெளிச்சத்தில் வந்து
கூட்டத்துடன் கலந்தேன்
யாரும் கவனிக்கவில்லை என
என்னுள் மீண்டும் எழுந்தது

இப்பொழுது எல்லோரும்
என்னைப் பார்க்கிறார்கள்
என்று மீண்டும்
என்னுள் துளிர்க்கின்றது

எப்பொழுதும் இல்லாவிடினும்
அவ்வபொழுது வந்து
என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ...

பயமுறுத்தினாலும் சிரிக்கும்
மழலையைக் கண்டு யோசிக்கிறேன்
எப்போழுது என்னுள்
நுழைந்திருக்கும் என்று...

13 comments:

அ.மு.செய்யது said...

செழுமையான வார்த்தை கோர்ப்புகள்.

//தனிமையான நாளில்
இருளின் அடர்த்தியில்
நிசப்தம் நுழையும் பொழுது
என்னுள் படர்கிறது//

சிறந்த எடுத்துக்காட்டு...அருமை அமுதா.

அமுதா said...

நன்றி செய்யது

ராமலக்ஷ்மி said...

//முன்னொரு பொழுதில்
நானும் இருந்திருக்கலாம்
பயம் அறியாமல் சிரித்தபடி...//

அப்படித்தான் இருந்தோம்.

//பயமுறுத்தினாலும் சிரிக்கும்
மழலையைக் கண்டு யோசிக்கிறேன்
எப்போழுது என்னுள்
நுழைந்திருக்கும் என்று...//

எங்களையும் யோசிக்க வைக்கிறது வரிகள்.

அருமை அமுதா.

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்

ஆ.சுதா said...

எப்பொழுதும் இல்லாவிடினும்
அவ்வபொழுது வந்து
என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது //

வரிகள் நல்லா எழுதியிருக்கீங்க
நல்ல கவிதைங்க.

அமுதா said...

கருத்துக்கு நன்றி முத்துராமலிங்கம்

அப்துல்மாலிக் said...

பே.. பயந்துட்டேங்க‌

ஹா ஹா அழகான வரிகளில் பயமில்லாமல் உங்க எழுத்துக்கள் மிளிர்கிறது

வாழ்த்துக்கள்

தமிழ் said...

/பயமுறுத்தினாலும் சிரிக்கும்
மழலையைக் கண்டு யோசிக்கிறேன்
எப்போழுது என்னுள்
நுழைந்திருக்கும் என்று... /

அருமை

Dhiyana said...

//பயமுறுத்தினாலும் சிரிக்கும்
மழலையைக் கண்டு யோசிக்கிறேன்
எப்போழுது என்னுள்
நுழைந்திருக்கும் என்று... //

அருமையான வரிகள் அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

//எப்பொழுதும் இல்லாவிடினும்
அவ்வபொழுது வந்து
என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது //

எல்லா வரிகளுமே அருமைங்க.. பயம் இல்லாமல் படிக்க முடிந்தது :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தனிமையின் துணையில்
அடிவயிற்றில் சுருள்கிறது
ஆளில்லா இடத்தில்
நெஞ்சில் மிதிக்கிறது
அரவமில்லா பொழுதில்
மூச்சை அடைக்கிறது

எப்பொழுது என்னுள்
நுழைந்தது என்று தெரியவில்லை
ஆனால் எப்படியோ
என்னுடன் இருக்கிறது


ரொம்பச் சரியா விவரிச்சிருக்கீங்க
அமுதா...

தமிழ் அமுதன் said...

பட்ட பகல்ல வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல பழைய '''நெஞ்சம் மறப்பதில்லை'''
டிவி ல ஓடுது! பூர்வ ஜென்ம நினைவு வரும் காட்சில உள்ளே ''அது'' கொஞ்சம் எட்டி
பார்க்குது! நான் போய் வெளிக்கதவை தொறந்து வைச்சுட்டு வந்து படம் பார்க்குறேன்!
இது நடந்தது இப்போ இல்ல சில வருடங்கள் முன்னாடி!
ஆனாலும் பயம் எல்லாம் இல்ல! ;;)))

Joe said...

//
எப்பொழுது என்னுள்
நுழைந்தது என்று தெரியவில்லை
ஆனால் எப்படியோ
என்னுடன் இருக்கிறது
//
அருமையான வரிகள்.