என் மேகம் ???

Monday, April 20, 2009

சின்ன சின்ன தருணங்கள்

பெண்கள் இருவரும் வளர்கிறார்கள் என்று அவர்களது வார்த்தைஜாலம் சொல்கிறது. அவர்களது அலுப்பு, நம்பிக்கை, உற்சாகம் அனபை வெளிப்படுத்தும் விதம், சில சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள் என்று எல்லாமே பூரிக்க வைக்கின்றன.

சின்ன சின்ன புத்திசாலித்தனம்?
குட்டிப்பெண் விலங்குகளைக் கண்டுபிடித்து பொருத்தும் விளையாட்டு விளையாடினாள். பொருத்தியதும் தனியாக வைக்கச் சொன்னேன். முதலில் பொருத்தி பொருத்தி தனியாக அடுக்கியவள், பின்பு அந்த அடுக்கியதன் மீதே வைத்து பொருத்த ஆரம்ப்பித்தாள்.

சின்ன சின்ன குறும்புகள்?
என்னை மறைந்து வந்து அடிக்கிறாள். "யாருடா அடிச்சது" என்றால், "அம்மா நீயே அடிச்சுகிட்ட தெரியலையா?" என்கிறாள்.

சின்ன சின்ன அலுப்புகள்?
லொக் லொக் என்று இருமிக் கொண்டிருந்தாள் குட்டிப்பெண்
நான்: "கஷாயம் போட்டு தரவா?"
கு.பெ: வேண்டாம்
நான்:வெந்நீர் வச்சு தரவா?
கு.பெ:வேண்டாம்
நான்:விக்ஸ் போட்டு விடவா?
கு.பெ:பேசாமல் அந்த பாயாசத்தையே தா!!!

சின்ன சின்ன நம்பிக்கைகள்?
தலைவலித்தது. ஆனாலும் டி.வி சத்தம் குறையவில்லை.
நீங்கள் எல்லாம் என்னை பார்த்துக்கவே மாட்டீங்க என்றேன். உடனே குட்டிப் பெண் "நான் உன்னை பார்த்துக்குவேன் அம்மா" என்றாள். "சும்மா சொல்லாதே" என்றேன். "நம்பிக்கை வைம்மா. ஒரு முறை முயற்சி பண்ணி பாரேன். அப்புறம் சொல்லு" என்றாள். சுட்டி டி.வி அவளது நம்பிக்கையை நல்ல ரேட்டிங்கில் வைத்துள்ளது.

சின்ன சின்ன கலாய்ப்புகள்?
கைகால் எல்லாம் வலிக்குது, எனக்காக கொஞ்சம் எக்ஸர்சைஸ் பண்ணேன் என்றவுடன் குட்டிப்பெண் தீவிரமாக எக்ஸர்சைஸ் செய்தாள். அம்மா இது உனக்கு ஓவரா இல்லை என்று கலாய்க்கிறாள் பெரியவள்

நாங்க ஆபீஸ்ல ஒரு "வாக்கிங் க்ளப்" ஆரம்பிச்சிருக்கோம் என்றால், பெரியவள் "அம்மா, தப்பா சொல்ற.. உனக்கு டாக்கிங் க்ளப் தான் ஒத்து வரும்" என்கிறாள்.

குழந்தைகளிடையே காணும் அன்புத்தருணங்கள் மனதை நனைக்கின்றன

இப்பொழுது நந்து வளர வளர சீண்டல் வளர்கிறது; யாழ் வளர வளர அடம் அதிகமாகிறது. சித்திரை பிறக்க கண்ணாடி, காசு, பழம் எல்லாம் வைத்திருந்தேன். காலையில் கண்ணை மூடி அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். அதன்படி நந்துவுக்கு செய்தேன். சற்று நேரத்தில் யாழ் விழிக்க, "யாழ் கண் திறக்காதே" என்று கூறி நந்து அவள் கண்ணை மூடி அழைத்துச் சென்றது அழகு. இந்த அன்பிற்காகவே வருடா வருடம் வைக்க வேண்டும் சித்திரை கனி.

இந்த அன்பு கொஞ்ச நேரம் தான். மீண்டும் சண்டை. இருவரையும் ஒரு அறையுள் அனுப்பிவிட்டு, சமாதானம் ஆகி இருவரும் சேர்ந்து வெளியே வந்தால் ஒழிய என்னுடன் பேச வேண்டாம் என்றேன். இரண்டு நிமிடம் கூட இல்லை இரண்டு பேரும் வெளியே வந்து "வெவ் வெவ் வெவ்.." என்று முகம் காட்டிவிட்டு கூடி விளையாடினார்கள். அழகு. மீண்டும் சண்டை என்பது வேறு விஷயம். சண்டையிடும் பொழுது விலக்கி வைக்காது சேர்த்து வைத்து சேர்ந்து வந்தால் தான் உண்டு என்ற முறையே அவர்களிடையே அன்பை வளர்ப்பதை உணர முடிகிறது.

15 comments:

Dhiyana said...

//நாங்க ஆபீஸ்ல ஒரு "வாக்கிங் க்ளப்" ஆரம்பிச்சிருக்கோம் என்றால், பெரியவள் "அம்மா, தப்பா சொல்ற.. உனக்கு டாக்கிங் க்ளப் தான் ஒத்து வரும்" என்கிறாள்.
//

சூப்பர் அமுதா. LOL

ராமலக்ஷ்மி said...

புன்னகைக்க வைத்தன அத்தனையும்.

//பேசாமல் அந்த பாயாசத்தையே தா!//

இது எனக்கு LOL.

நிகழ்காலத்தில்... said...

குழந்தைகள் நல்ல பாசத்தோடு வளர்கின்றன...

வாழ்த்துக்கள்...

அப்துல்மாலிக் said...

//சண்டையிடும் பொழுது விலக்கி வைக்காது சேர்த்து வைத்து சேர்ந்து வந்தால் தான் உண்டு என்ற முறையே அவர்களிடையே அன்பை வளர்ப்பதை உணர முடிகிறது/


நல்ல முடிவுரை

அழகான சின்ன சின்ன தருணங்களை அழகான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

குழந்தைச்செல்வம் என்பதே ஒரு தனிஉலகம்தான்..

Dominic RajaSeelan said...

நல்ல படைப்பு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அழகு தருணங்கள்..

Unknown said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) அழகு தருணங்கள்..//

Repeatuuuuuuu... :))))

//"நம்பிக்கை வைம்மா. ஒரு முறை முயற்சி பண்ணி பாரேன். அப்புறம் சொல்லு" என்றாள்.//

So cute.. :))))))))))

சந்தனமுல்லை said...

எல்லாமே அசத்தல்! :-))

ஆயில்யன் said...

//நாங்க ஆபீஸ்ல ஒரு "வாக்கிங் க்ளப்" ஆரம்பிச்சிருக்கோம் என்றால், பெரியவள் "அம்மா, தப்பா சொல்ற.. உனக்கு டாக்கிங் க்ளப் தான் ஒத்து வரும்" என்கிறாள். ///


பெரிய பொண்ணு சொல்றதும் கரீக்ட்தான்! நான் அந்த கிளப் இன்னொரு மெம்பர்கிட்ட கேட்டேன்

உண்மைதான்னு சொன்னாங்க
:)))

(ஹப்பாடா எதோ என்னால ஆனது!)

ஆயில்யன் said...

//நான்:விக்ஸ் போட்டு விடவா?
கு.பெ:பேசாமல் அந்த பாயாசத்தையே தா!///

அவ்ளோ பவர்ஃபுல் மருந்தா அது :)))))

ஆயில்யன் said...

//சித்திரை பிறக்க கண்ணாடி, காசு, பழம் எல்லாம் வைத்திருந்தேன். காலையில் கண்ணை மூடி அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன்//

எண்ட தெய்வமே!!!

ஆயில்யன் said...

//இரண்டு நிமிடம் கூட இல்லை இரண்டு பேரும் வெளியே வந்து "வெவ் வெவ் வெவ்.." என்று முகம் காட்டிவிட்டு கூடி விளையாடினார்கள். ///

வெவ் வெவ் வெவ் - இல்லை இப்படி வராதுன்னு நான் ஃபீல்பண்றேன்
அனேகமா வவ்வ்வ்வவ்வவ் இப்படி இருக்கலாம் எதுக்கும் நீங்க நெக்ஸ்ட் டைம் கொஞ்சம் கரீக்டா பாருங்க :))))

அ.மு.செய்யது said...

//குழந்தைகளிடையே காணும் அன்புத்தருணங்கள் மனதை நனைக்கின்றன//

உண்மை தான்.

அழகான நடையில் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.

Deepa said...

எல்லாமே சூப்பர்! ஆனா “அந்த பாயாசத்தையே தா” மேட்ட்ர் சான்ஸே இல்ல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

chanceless

பாயாசம் & டாக்கிங் க்ளப் ரசித்து சிரித்தேன்.

சுத்தி போடுங்க குட்டீஸுக்கு....