கவலைப்படும் காலம் போய்
பேஜாரான பொழுது புரிந்தது
சென்னை வாழ்க்கையின் ஆக்ரமிப்பு
*****************
பட்டாணி உரிக்கும் பொழுது
நெளிகின்ற புழுவை
அம்மாவை நினைத்துக் கொண்டே
தோலோடு தள்ளும் பொழுது
ஒலிக்கிறது மகளின் குரல்
இதற்கு தான் நான்
பட்டாணி உரிப்பதில்லை என்று
வாழ்க்கை சக்கரம் தான்...
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள்
****************
சக்கரம் போல் தானோ வாழ்க்கை?
ஓயாது பாரமிழுத்து
பழுதானால் ஒட்ட வைத்து
இற்றுப் போகும் வரை
ஓடிக் கொண்டிருக்கும்
இற்றுப் போனால்
மற்றொன்று பாரமிழுக்க
ஒதுங்கிக் கொள்ளும்
****************
ஏசியின் குளிர்ச்சியில்
பழகிக்போன சில மனங்களுக்கு
வெயிலில் துவளும் கால்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
சில நேரங்களில்...
வெயிலில் துவண்ட கால்கள்தான்
ஏசிக்கு செல்லும்
ஊக்கம் கொடுத்தது என்பதும்
சிலருக்குத் தெரிவதில்லை
*******************
25 comments:
அம்மாப் பொண்ணு கதை எல்லார் வீட்டுலயும் நடக்கிற உண்மையான விசயம்..:) இப்ப புரிஞ்சு என்ன செய்ய?
கலக்கல் கவிதை..!
//கவலைப்படும் காலம் போய்
பேஜாரான பொழுது புரிந்தது
சென்னை வாழ்க்கையின் ஆக்ரமிப்பு//
அர்த்தமுள்ள வரிகள். கவலைகளை சுமந்து சுமந்து அதையே பழக்கப்படுத்திக்கொள்ளும் சிரம மனநிலை அழகாய் வடிந்துள்ளது எழுத்துக்களில் :-)
//சக்கரம் போல் தானோ வாழ்க்கை?
ஓயாது பாரமிழுத்து
பழுதானால் ஒட்ட வைத்து
இற்றுப் போகும் வரை
ஓடிக் கொண்டிருக்கும்
இற்றுப் போனால்
மற்றொன்று பாரமிழுக்க
ஒதுங்கிக் கொள்ளும்//
அருமை!
//ஏசியின் குளிர்ச்சியில்
பழகிக்போன சில மனங்களுக்கு
வெயிலில் துவளும் கால்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
சில நேரங்களில்...
வெயிலில் துவண்ட கால்கள்தான்
ஏசிக்கு செல்லும்
ஊக்கம் கொடுத்தது என்பதும்
சிலருக்குத் தெரிவதில்லை///
வரிகள் பற்றி சொல்ல வார்த்தைகளில்லை !
நிதர்சனத்தை சொல்கிறது
/*முத்துலெட்சுமி-கயல்விழி said...
அம்மாப் பொண்ணு கதை எல்லார் வீட்டுலயும் நடக்கிற உண்மையான விசயம்..:) இப்ப புரிஞ்சு என்ன செய்ய?*/
:-)) நன்றி முத்துலெட்சுமி
நன்றி சென்ஷி, நன்றி ஆயில்யன்
//சக்கரம் போல் தானோ வாழ்க்கை?//
ஆமாம் நடைமுறையில் பார்ப்பதால் அடிக்கடி இதை கூறுவதுமுண்டு. வாழ்க்கையின் யதார்த்தம் யாவும் வரிகளாய்...
அருமை அமுதா.
நன்றி ராமலஷ்மி மேடம்
பட்டாணி உரிக்கும் பொழுது
நெளிகின்ற புழுவை
அம்மாவை நினைத்துக் கொண்டே
தோலோடு தள்ளும் பொழுது
ஒலிக்கிறது மகளின் குரல்
இதற்கு தான் நான்
பட்டாணி உரிப்பதில்லை என்று
வாழ்க்கை சக்கரம் தான்...
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள் //
nalla irukku amudha ella kavidhaigalum, particularly this.
சில நேரங்களில்...
வெயிலில் துவண்ட கால்கள்தான்
ஏசிக்கு செல்லும்
ஊக்கம் கொடுத்தது என்பதும்
சிலருக்குத் தெரிவதில்லை //
enakku romba piditha varigal..
(sorry to type in english)
நன்றி அமித்து அம்மா
முதல் கவிதை..செம!
பட்டாணி மேட்டர் - ஹ்ம்ம்ம்! :-)
நல்ல கவிதைகள் அமுதா!
நன்றி முல்லை
//சில நேரங்களில்...
வெயிலில் துவண்ட கால்கள்தான்
ஏசிக்கு செல்லும்
ஊக்கம் கொடுத்தது என்பதும்
சிலருக்குத் தெரிவதில்லை
//
நெத்தியடி என்பது இதுதானோ
நல்லயிருக்கு வரிகள் அனைத்தும்
நன்றி அபுஅஃப்ஸர்
//நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள்//
இந்த வரிகள் அருமை ...வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது பொருந்தும் நேற்று அம்மா ...பிறகு நாம் பிறகு மகள் ...சக்கரம் தான் ...சுழல்கிறது .
வருகைக்கு நன்றி மிஸஸ். தேவ்.
இரண்டாவது கவிதை
பிடித்திருந்தது.
//பட்டாணி உரிக்கும் பொழுது
நெளிகின்ற புழுவை
அம்மாவை நினைத்துக் கொண்டே
தோலோடு தள்ளும் பொழுது
ஒலிக்கிறது மகளின் குரல்
இதற்கு தான் நான்
பட்டாணி உரிப்பதில்லை என்று
வாழ்க்கை சக்கரம் தான்...
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள் //
வாழ்வின் இயல்பு கவிதையாய்.ஒரு புள்ளியில்தானே வாழ்வு.சுற்றிச் சுற்றி வந்தேதான் ஆக வேணும் அமுதா.
என் அம்மாவின் நினைவும் வரச் சிரித்துக்கொண்டேன்.
ஹேமா said...
/*வாழ்வின் இயல்பு கவிதையாய்.ஒரு புள்ளியில்தானே வாழ்வு.சுற்றிச் சுற்றி வந்தேதான் ஆக வேணும் அமுதா.
*/
ஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா
நன்றி முத்துராமலிங்கம்
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள்
arumai
nitharsanama varigal
நன்றி சக்தி
//சக்கரம் போல் தானோ வாழ்க்கை?
ஓயாது பாரமிழுத்து
பழுதானால் ஒட்ட வைத்து
இற்றுப் போகும் வரை
ஓடிக் கொண்டிருக்கும்
இற்றுப் போனால்
மற்றொன்று பாரமிழுக்க
ஒதுங்கிக் கொள்ளும்//
கடைசியில போகி அன்று எரித்தும் விடுவார்கள். மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை வெலிப்படுத்தும் இயல்பான வரிகள். அருமை!
கருத்துக்கு நன்றி உழவன்
//பட்டாணி உரிக்கும் பொழுது
நெளிகின்ற புழுவை
அம்மாவை நினைத்துக் கொண்டே
தோலோடு தள்ளும் பொழுது
ஒலிக்கிறது மகளின் குரல்
இதற்கு தான் நான்
பட்டாணி உரிப்பதில்லை என்று
வாழ்க்கை சக்கரம் தான்...
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள்//
யதார்த்தத்தை இவ்வளவு அழகாக உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது.
அருமை அமுதா.
நன்றி செய்யது
முதலும் கடைசியும் கலக்கல்:)
Post a Comment