என் மேகம் ???

Thursday, April 9, 2009

கணங்களின் கனம்

இன்று மட்டும் வீட்டில் இரேன்
என்ற மகளின் கெஞ்சலும்
ஐ! இன்று நீ வீட்டிலா?
என்ற மகளின் குதூகலமும்
சொல்கிறது...
நான் இல்லாத
கணங்களின் கனத்தை!!!

என் கண்கள் வழியே
என் குடும்பத்தினர் தேவதைகள்
எனக்கு என் குடும்பமே சிறந்தது
என்ற மகளின் கவிதை
சொல்கிறது...
சேர்ந்து இருந்த
கணங்களின் கனத்தை!!!

22 comments:

சந்தனமுல்லை said...

நல்ல கவிதைக்கணங்கள் அமுதா!

அமுதா said...

நன்றி முல்லை

ஆதவா said...

கொஞ்சம் கனமாகத்தான் இருக்கிறது..

குழந்தைகளின் வேண்டல் புதிரானது... எப்போதும் அது நிலையாக இருப்பதில்லை!

வாழ்த்துக்கள் சகோதரி

சென்ஷி said...

:-))

அருமையா இருக்குது.

பூங்குழலி said...

தேவைகளுக்கான ஓட்டத்தில் நாம் பலவற்றை இழக்கிறோம் .கவிதை அருமை

நட்புடன் ஜமால் said...

மிக அழகான வரிகளில் எதார்த்தம்.

அமுதா said...

நன்றி ஆதவா
நன்றி சென்ஷி
நன்றி பூங்குழலி
நன்றி ஜமால்

ஆயில்யன் said...

//கணங்களின் கனத்தை!!!//

ரசிக்க வைத்த கனங்களின் தருணங்கள்!

ராமலக்ஷ்மி said...

மனம் உணர்ந்த கணங்களின் கனம் அருமை அமுதா.

அமுதா said...

நன்றி ஆயில்யன்
நன்றி ராமலஷ்மி மேடம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று மட்டும் வீட்டில் இரேன்
என்ற மகளின் கெஞ்சலும்
ஐ! இன்று நீ வீட்டிலா?
என்ற மகளின் குதூகலமும்
சொல்கிறது...
நான் இல்லாத
கணங்களின் கனத்தை!!!

கனமான கணங்கள் தான்!!!

நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

யதார்த்த உலகில் அனைத்துமே கனத்துப் போகிறதோ. நல்ல கவிதை அமுதா.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா
நன்றி வல்லிசிம்ஹன் மேடம்

புதியவன் said...

//இன்று மட்டும் வீட்டில் இரேன்
என்ற மகளின் கெஞ்சலும்
ஐ! இன்று நீ வீட்டிலா?
என்ற மகளின் குதூகலமும்
சொல்கிறது...
நான் இல்லாத
கணங்களின் கனத்தை!!!//

கணங்களின் கனத்தை கவிதையில் உணர
முடிகிறது...அருமை...

தீஷு said...

யதார்த்தமான வரிகள் அமுதா.

அமுதா said...

நன்றி புதியவன்
நன்றி தீஷு

அபுஅஃப்ஸர் said...

எதார்த்தமான மனவலியை உணர்த்தும் வரிகள்

குழந்தைகளின் தேடலில் நம் தேவையை ஒத்திவைப்பது என்பது சிரமம்தான்...

அமுதா said...

நன்றி அபுஅஃஸர்

ஹேமா said...

தேவைகள் சிலசமயம் தேவதைகளைப் பிரிய வைக்கிறது அமுதா.

ஆ.ஞானசேகரன் said...

கணங்களின் கனம் ..... புதிய முகம்

நமது தேவைகளையும் தாண்டி பிள்ளைகளின் தேவை .. அருமை...

ஆ.ஞானசேகரன் said...

உள்ளத்தில் அனுபவித்து எழுதியதாக தெரிகின்றது..

அமுதா said...

நன்றி ஹேமா
நன்றி ஆ.ஞானசேகரன்