என் மேகம் ???

Monday, April 13, 2009

தொலைந்து போன கவிதைகள்

உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்

சிரிக்கும் பொழுதும்
சிந்திக்கும் பொழுதும்

சமைக்கும் பொழுதும்
துவைக்கும் பொழுதும்

வெளியில் சென்றாலும்
வீட்டில் இருந்தாலும்

விலகி நில் என்றாலும்
ஒட்டி நிற்கும் குழந்தை போல

என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ஏதேனும் ஒரு கவிதை

மனம் மூடிக் கிடந்ததால்
ஒவ்வொருமுறையும்...
தொலைந்து போனது

19 comments:

நட்புடன் ஜமால் said...

தொலைந்தது வைத்தே

மீட்டெடுப்பு ...

அ.மு.செய்யது said...

அருமைங்க..

நம்ம பிஸியா இருக்கும் போது பீறிட்டெழும் கற்பனை, ஆணிகள் இல்லாத போது மறந்து போய்விடும்.

அதனால எப்பவுமே ஒரு துண்டு சீட்டு,பேனா கைவசம் வைத்து கொள்ளுதல் நலம்.

அமுதா said...

/* நட்புடன் ஜமால் said...
தொலைந்தது வைத்தே
மீட்டெடுப்பு ...
*/
:-)) நன்றி ஜமால்

வாங்க செய்யது. ரொம்ப நாளா காணோம். நன்றி.

ராமலக்ஷ்மி said...

//என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ஏதேனும் ஒரு கவிதை//

ஆம்.

//மனம் மூடிக் கிடந்ததால்
ஒவ்வொருமுறையும்...
தொலைந்து போனது//

மனக் கதவைத் திறக்க நேரம் வாய்க்கும் போது தொலைந்ததை தேடிப் பிடித்துக் கூட்டி வருகையில் விளையாட வெண் உடையில் போன குழந்தை திரும்பி வரும் தோற்றத்தில்..:(! இது என் அனுபவம்.

pudugaithendral said...

அருமை அமுதா,

தொலைந்து போனதாக கூறி அதையும் அழகான கவிதையா கொடுத்திருக்கீங்க.

மனமார்ந்த பாராட்டுக்கள்

சென்ஷி said...

:-))

கலக்கல்.... ஆனாலும் வாழ்வின் தருணத்தில் கவிதை சேரும் கணங்களை இன்னும் சற்று ஆழமாய் விதைத்திருக்கலாமோ என்று தோணவைக்கிறது கவிதையின் உட்கரு!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமுதா..இனிமே ஆன் தி ஸ்பாட் சொல்லி அசத்திடுங்க! :-)

அமுதா said...

/*ராமலக்ஷ்மி said...
மனக் கதவைத் திறக்க நேரம் வாய்க்கும் போது தொலைந்ததை தேடிப் பிடித்துக் கூட்டி வருகையில் விளையாட வெண் உடையில் போன குழந்தை திரும்பி வரும் தோற்றத்தில்..:(! இது என் அனுபவம்.*/
ம்.. ஆமாம் தொலைந்தது கிடைத்தால் :-((. சில சமயங்களில் மட்டுமே செதுக்கப்பட்டு அழகாகிறது

நன்றி தென்றல்


/*சென்ஷி said...

ஆனாலும் வாழ்வின் தருணத்தில் கவிதை சேரும் கணங்களை இன்னும் சற்று ஆழமாய் விதைத்திருக்கலாமோ என்று தோணவைக்கிறது கவிதையின் உட்கரு!
*/
ம். இருக்கலாம்... தொலைந்து போகும்முன் போட்டுவிட்டேன் இக்கவிதையை :-))


நன்றி முல்லை. செய்யது சொன்ன மாதிரி /*எப்பவுமே ஒரு துண்டு சீட்டு,பேனா கைவசம் வைத்து கொள்ளுதல் நலம்.*/ :-))

தமிழ் said...

/என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ஏதேனும் ஒரு கவிதை

மனம் மூடிக் கிடந்ததால்
ஒவ்வொருமுறையும்...
தொலைந்து போனது/

உண்மை தான்

அமுதா said...

நன்றி திகழ்மிளிர்

ஹேமா said...

அமுதா,மனம் மூடிக்கிடக்கையிலும் கவிதையின் கரு விழித்திருக்கும்.

அப்துல்மாலிக் said...

அருமையான வரிகள், எதுகையும் மோனையும் இருக்கு

சின்ன சின்ன நிகழ்வுகள் அப்பப்போ கவிதையா மனதில் உருவெடுக்கும், எழுத உக்காரும்போது மறந்துப்போகும்....?

அமுதா said...

/*ஹேமா said...
அமுதா,மனம் மூடிக்கிடக்கையிலும் கவிதையின் கரு விழித்திருக்கும்.*/
ஆமாம். நன்றி ஹேமா

நன்றி அபுஅஃப்ஸர்

Dhiyana said...

நல்லா எழுதுறீங்க அமுதா...எல்லாருடைய ஐடியாக்களால், உங்கத் தளத்தில இனிமே கவிதைகள் அதிகமா வரும் என்று எதிர்பார்கிறோம் அமுதா.

அமுதா said...

நன்றி தீஷு அம்மா..

பூங்குழலி said...

உண்மை தான் மனம் மூடி கிடந்தததால் தொலைந்த கவிதைகள் பல .ஆனால் அந்நேரமே அந்த கவிதையில் ஆழ்ந்திருந்தால் மனம் திறந்தே கிடந்திருக்கும்

அமுதா said...

நன்றி பூங்குழலி

ஆ.சுதா said...

நல்லா இருக்கு கவிதை.

அமுதா said...

நன்றி முத்துராமலிங்கம்