என் மேகம் ???

Wednesday, April 8, 2009

குழந்தைகளை க்ளாஸுக்கு அனுப்பலாமா?

இது போன்ற கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்ற நேரடி பதில் கிடையாது என்பது எனது அனுபவ பாடம். இதற்கான பதில் குழந்தைகளின் விருப்பம் மற்றும் பெற்றோரின் புரிந்து கொள்ளுதலுடன் தொடர்புடையது.

குழந்தைகள் படிப்பைத் தவிர வேறு ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் மற்றும் அவர்களுக்கு ஒரு வடிகாலாகக் கூட இருக்கலாம். என் கல்லூரி தோழிக்கு நடனம் விருப்பம். மகிழ்ச்சி என்றாலும் வேதனை என்றாலும் அவளுக்கு நடனம் ஒரு வடிகாலாக இருப்பதை கவனித்து நான் வியந்துள்ளேன். எனவே என் குழந்தைகளுக்கும் அது போன்ற ஒரு exposure தேவை என்று எண்ணிணேன்.

ஆனால் க்ளாஸ் எப்பொழுது அனுப்புவது ? எந்த க்ளாஸ் அனுப்புவது? முதலில் அவளுக்கு நடனத்தில் விருப்பம் உண்டு என்று நடனத்தில் சேர்த்தேன். முதலில் ஆசையாகச் சென்றவள், பின் மறுத்து விட்டாள். சரி என்று நிறுத்திவிட்டேன். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சேர்கிறேன் என்றாள் சேர்த்துவிட்டேன். இப்பொழுது நடனம், இசை, வரைதல் என அவளுக்கு விருப்பமானவற்றை அவளே கேட்டு கற்றுக் கொள்கிறாள். சில நேரங்களில் அவளே தன்னை நடனத்திலோ, இசையிலோ ஈடுபடுத்திக் கொள்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கும். அவள் தோழியின் தாயாரும் இது போல், வரைதல் மட்டுமே அவளுக்குப் பிடிகிறதென மற்ற க்ளாஸ்களை எடுத்துவிட்டு வரைதலில் மட்டும் சேர்த்துள்ளார்.

இங்கு அவர்களின் விருப்பத்துடன் க்ளாஸில் சேர்ப்பதால் அவர்கள் அதை விருப்புடன் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் இதில் சிறக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாது, அவர்களது திறனுக்கு என்ற புரிந்து கொள்ளலுடன் பெற்றோர் அனுப்புவதால், பிரச்னைகள் இல்லை.

இதையே சிலர், "அவள் என்ன க்ளாஸ் போகிறாள்" என்று கேட்டு தம் குழந்தைகளிடம் திணிக்கும்பொழுது அழுத்தம் ஏற்பட்டு எதிர்ப்பு ஏற்படுகிறது. நாம் குழந்தைகளிடம் எதையும் எதிர்பார்க்காது அவர்கள் விருப்பம் அறிந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காது மகிழ்ச்சி கொடுக்கும் என்ற புரிந்து கொள்ளலுடன் தாராளமாக க்ளாஸ் அனுப்பலாம் என்பது எனது கருத்து.

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\குழந்தைகள் படிப்பைத் தவிர வேறு ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் மற்றும் அவர்களுக்கு ஒரு வடிகாலாகக் கூட இருக்கலாம்\\

சர்வ நிச்சியமாய்


(நமக்கு ப்லாக் இருப்பது போல்)

Dhiyana said...

என் தோழி தன் இரு பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிடுவதைத் தடுக்க க்ளாஸுக்கு அனுப்புகிறாள். அவர்களை உற்சாகப்படுத்துகிறது என்றும் சொல்கிறாள். அவர்களே விரும்புவதற்கு நிச்சியமாக அனுப்பலாம்.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு அமுதா! திணிக்கும்போதுதான் வெறுப்பு உண்டாகும்..அதே விருப்பத்தை ஊக்குவித்தாலே போதும்! :-)

ராமலக்ஷ்மி said...

//இதில் சிறக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாது, அவர்களது திறனுக்கு என்ற புரிந்து கொள்ளலுடன் பெற்றோர் அனுப்புவதால்..//

உண்மைதான் அமுதா. இது கவனிக்க வேண்டிய விஷயம். அவர்கள் விருப்பத்துடன் அனுப்புவது அதிமுக்கியம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கற்றுக்கொள்ளுதலில் குழந்தைகளின் விருப்பமும் மகிழ்ச்சியே முக்கியம்

அமுதா said...

கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜமால், தீஷு, முல்லை, ராமலஷ்மி மேடம், அமித்து அம்மா

pudugaithendral said...

நல்ல பதிவு அமுதா! திணிக்கும்போதுதான் வெறுப்பு உண்டாகும்..அதே விருப்பத்தை ஊக்குவித்தாலே போதும்! //

இதை நானும் வழிமொழிகிறேன்.

அமுதா said...

கருத்துக்கு நன்றி புதுகைத்தென்றல்

narsim said...

நல்லா எழுதி இருக்கீங்க அமுதா.

திணிப்பு எங்கும் எதிலும் கூடாது.

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்சிம்

ஹேமா said...

திணிப்பு என்பது உண்மையில் வெறுப்பு.நாமும் அந்த வெறுப்புக்களைக் கடந்தே பயணித்திருக்கிறோம்.உணர்ந்து செயல்பட்டால் நல்லது.