என் மேகம் ???

Tuesday, April 14, 2009

சென்னை டூ குருவாயூர் (2)

தண்ணீர் விளையாட்டுக்கள் வீகாலேண்ட்ல கலக்கலா இருக்கும்னு சொன்னதால் எங்கள் பெரும்பான்மை நேரம் தண்ணீர் தான். தண்ணியை நல்ல பராமரிச்சு வச்சிருக்காங்க. நேரம் ஆனதால் ஒரு வழியா தண்ணியை விட்டு வெளியேறினோம். இரவு உணவுக்கு "பத்திரி" அப்படினு அரிசி மாவுல மெல்லிசா சப்பாத்தி மாதிரி பண்ணி ஒரு ஐட்டம், நல்லா இருந்தது. அலைச்சலும் உண்ட களைப்பும் தூக்கத்தை வாவானு சொல்லிடுச்சு.

மறுநாள் கொச்சின் படகு பயணம் போக முடிவு பண்ணினோம். நிறைய பேர் போனதால் ஒரு படகை ஒரு மணி நேர வாடகைக்கு அமர்த்தி ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம். பாட்டெல்லாம் போட்டதால் குட்டீஸ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

நாங்க போன படகு

அன்னம் போல ஒரு படகு (பின்னாடி கொச்சின் ஷிப் யார்டு)


கப்பல்ல கன்வேயர் வழியாக சரக்கு ஏற்றுகிறார்கள்

கப்பல்ல ப்ளூ கலர் கண்டய்னரை லோட் பண்றாங்க (மேல ஒரு கண்ணாடி கூண்டுல ஆபரேட்டர் போல..)


கப்பல்ல இந்த குழாய் வழியாக தான் எண்ணெய் ஏற்றுவாங்களாம்...



படகில் இருந்து தெரிந்த சில கட்டடங்கள்


போல்காட்டி பாலஸ். இது டச்காரங்க 1774-ல் கட்டின அரண்மனை, இப்போ KTDC ஹெரிடேஜ் ரிசார்ட்டாம்.


கரையோரமா... ஏசியோட போல்காட்டி பாலஸ்ல ஒரு காட்டேஜ்


அடுத்த பதிவுல குருவாயூர் விசிட்...

12 comments:

சந்தனமுல்லை said...

ஆகா..செமையா படம் போட்டுக் கலக்கறீங்க அமுதா! ந்ல்ல பதிவு!!

Dhiyana said...

படங்கள் அருமையாக இருக்கிறது அமுதா.

அமுதா said...

நன்றி முல்லை
நன்றி தீஷு அம்மா

துளசி கோபால் said...

சூப்பர்!!!

அமுதா said...

நன்றி துளசி மேடம்

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பயணக்குறிப்பு அருமை. தொடருங்கள்:)!

தராசு said...

படங்கள் சூப்பர்.

தொடருங்கள், தொடர் அருமையாக உள்ளது.

ஆ.சுதா said...

நானும் ஒரு முறை கொச்சின் போய் உள்ளேன் அந்த படகுகளில் பயணித்திருக்கின்றேன்.
உங்கள் பகிரவு அதை மீண்டும்
நினைவுகூர்ந்து கொண்டது.
படங்கள் அழக்கா எடுத்திருக்கீங்க

Rithu`s Dad said...

புகைப்படங்கள் என்னை மீண்டும் எர்னாகுளத்திற்க்கு அழைத்துச்செல்கின்றன.. நண்றி...தொடரட்டும் உங்கள் பயணம்..

அமுதா said...

ஊக்கத்திற்கு நன்றி தராசு, முத்துராமலிங்கம் & ரிது அப்பா

mp said...

படங்களுடன் பயணக்குறிப்பு ந்ல்ல பதிவு!!

அமுதா said...

நன்றி mp