என் மேகம் ???

Monday, April 13, 2009

சென்னை டூ குருவாயூர் (1)

யுகாதி ஒட்டி லீவு இருந்தததால தம்பி பையனுக்கு குருவாயூரில் சோறு ஊட்டறதுனு முடிவாச்சு. கொச்சின்ல உறவினர் இருக்கிறதால் ஒரு மினி டூர் ப்ரோக்ராம் போட்டோம். இந்த மாதிரி டூரெல்லாம் ஒரு கும்பலா போனால் தான் கலகலப்பே. கலகலப்புக்கு குறைச்சல் இல்லாமல் கைக்குழந்தையில் இருந்து கொள்ளுப்பாட்டி வரை எல்லா வயதிலேயும் மக்களோட ஆலப்பே எக்ஸ்ப்ரஸ்ல ஏறினோம்.

ட்ரய்ன்ல போறதுல என்ன பிரச்னைனா, எல்லாரும் கீழ் பெர்த் தேவைப்படற ஆளாத்தான் இருப்பாங்க. இப்பவும் அப்படிதான், கைக்குழந்தையோட ரெண்டு பேர், மூட்டு வலியோட மூணு பேரு, பாட்டி ஒருத்தங்க, குட்டீஸ் ரெண்டு பேரு; ஆனாலும் அப்படி இப்படி சமாளிச்சிட்டோம். நைட் திடீர்னு ஒரு குழந்தை அழுது. என்னடானு பார்த்தால் என் பொண்ணு மேல் பெர்த்ல படுத்திருந்தவள் அதைப் பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்காள். அப்படியே தூக்கி திரும்ப மேல் பெர்த்ல படுக்க போட்டோம்.அவள் தூக்கத்திலேயே இந்த விஷயம் நடந்ததால விழுந்து எந்தரிச்சு ஏறப்பார்த்து தொங்கினாளா இல்லை விழும்போதே பிடிச்சிக்கிட்டாளானு கடைசி வரைக்கும் புதிராவே போய்டுச்சு. ரெண்டு பக்கமும் கம்பி இருக்கிறதால் கீழ விழ மாட்டானு மேல் பெர்த்ல போட்டால் இந்த கதி. (வரும்பொழுது ஒரு வேட்டியை குறுக்கே கட்டிட்டோம்)

தூங்கி எந்தரிச்சு பார்த்தால் சிலுசிலுனு காத்து கேரளாவில இருக்கீங்கனு சொல்லுது.கொஞ்ச நேரத்தில எர்ணாகுளம் வந்திடும்னாங்க. அங்க இருந்து கொச்சின் எவ்ளோ தூரம்னு கேட்டேன். ஒரு மாதிரி பார்த்துட்டு ரெண்டும் ஒண்ணுதான்னாங்க. (நான் இஸ்டரி ஜாக்ரபி எல்லாம் வீக்கு..). ஒரு வழியா எர்ணாகுளம்ல இறங்கினோம். கேரளானா பச்சை பசேல்னு எதிர்பார்த்தால், அங்கேயும் இண்டு இடுக்கு விடாமல் கடையும் வீடுமாத்தான் தெரிஞ்சுது. ஆனா சில இடங்கள்ல ஒவ்வொரு வீடும் ஒரு கவிதையா தனித்துவத்தோட ஓவியம் போல அழகா தெரிஞ்சுது.

சில தென்னை மரங்கள்ல தென்னை மட்டையை வச்சே ஏதோ செடியை மரத்தோட சேர்த்து கட்டி இருந்தாங்க. இங்கே ஆர்கிட் பூக்கள் நல்லா வருமாம். அதனால் தென்னை மரத்தில் எல்லாம் இந்த ஆர்க்கிட் கொடியை படர விடறாங்க அழகுக்காக. அது தென்னை மரத்திலேயே வேர் பிடிச்சு படர்ந்துக்குமாம்.

வீகாலேண்ட் போகும் முன்னாடி எங்கேயாவது பக்கத்தில சும்மா போகலாம்னு பார்த்தோம். அங்கே இருந்த நல்ல விஷயங்கள்:

1. பேரம் கிடையாது. ஆட்டோ என்றாலும் சரி கடை என்றாலும் சரி எல்லாரும் ஒரே விலை, சரியான விலை தான் சொல்லுவார்களாம்.

2. பக்கத்தில் சுய சேவை கடைக்குச் சென்றிருந்தோம். கையில் பையில்லை, அங்கும் ப்ளாஸ்டிக் பையில்லை, ஒத்த ரூபா கொடுத்தால் "eco friendly reusable bag" என்று மெல்லிய துணிப்பை போன்ற பை கொடுக்கிறார்கள். நல்ல பழக்கம். எல்லோரும் இதைப் பின் பற்றினால் ப்ளஸ்டிக் பைகள் சில நாட்களில் காணாமல் போகும்.




அப்புறம் வீகாலேண்ட் போனோம். வாங்கிற காசுக்கு வஞ்சனை இல்லாம நிறைய ரைட்ஸ் இருந்தது. பாதிநாள் குட்டீஸை வச்சு ரங்க ராட்டினம் முடிஞ்ச வரை சுத்திட்டு கடைசில தண்ணில போய் விழுந்தோம். "வேவ் பூல்" சூப்பரா இருந்தது. அது போக இரண்டு மூணு நீச்சல் குளம் இருந்தது. எல்லாம் நடக்கிற உயரத்தில தண்ணி. அதனால் தைரியமா குட்டீஸை உள்ளே இறக்கி விட்டுட்டு வேடிக்கை பார்த்தோம். கொஞ்ச நேரத்தில சறுக்குறது, குழாய்ல சறுக்கிறது வளைஞ்சு வளைஞ்சு சறுக்கிறதுனு குட்டீஸ் கொளுத்தற வெயிலுக்கு தண்ணில வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாங்க.

நட்பு பாராட்டும் மீன்கள்


(பதிவு ரொம்ப பெரிசா ஆகுது. அதனால் மீதி அடுத்த பதிவில்...)

18 comments:

ஆயில்யன் said...

//தூங்கி எந்தரிச்சு பார்த்தால் சிலுசிலுனு காத்து கேரளாவில இருக்கீங்கனு சொல்லுது//


சூப்பரேய்ய்ய்ய் இதைத்தான் நான் எல்லார்கிட்டயும் சொல்றது!

கனவு தேசமய்யா கனவு தேசம்ன்னு :)))

ஆயில்யன் said...

//நான் இஸ்டரி ஜாக்ரபி எல்லாம் வீக்கு///

பரவாயில்ல !

கேரளா டூர் அப்படிங்கறதால பெரிய மனசு பண்ணி மன்னிக்கிறோம்!

பட் வரலாறு ரொம்ப முக்கியமாச்சே!

Rithu`s Dad said...

ஐயோ.. கொச்சின் போனீங்களா? ரெம்ப நல்ல ஊராச்சே!! பத்து வருடங்களுக்கு முன் அங்கு தான் என் முதல் " வேலை " ஆரம்பமாச்சு!! " கொச்சின்" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. !! சீக்கிரம் மீதத்தையும் எழுதுங்க.. !! அப்புறம் அங்க இருக்க பெண்கள் பற்றியும் எழுதுங்களேன்..!!

அமுதா said...

வாங்க ஆயில்யன். நீங்க பயணம் பத்தி எல்லாம் எழுதணும்னு சொன்னதால் நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கேன். எப்படி வருதுனு பார்க்கிறேன்.

ஆயில்யன் said...

//சில இடங்கள்ல ஒவ்வொரு வீடும் ஒரு கவிதையா தனித்துவத்தோட ஓவியம் போல அழகா தெரிஞ்சுது.
//

ரசித்தேன்!

ஆயில்யன் said...

//வீகாலேண்ட் போனோம். வாங்கிற காசுக்கு வஞ்சனை இல்லாம நிறைய ரைட்ஸ் இருந்தது//

தண்ணி ஆட்டமும் (பாட்டுக்கு ஆடும்)
3டி தியேட்டரில் ஆட்டமும் ரசிக்கவில்லையா :(

ஆயில்யன் said...

வீகா லேண்ட்னால நாங்க தண்ணியில போட்ட ஆட்டம்தான் ஞாபகத்துக்கு வருது 12 மணி ஆரம்பிச்சு சாயங்காலம் 5 மணி வரைக்கும் திரும்ப திரும்ப ரைடிங்க் அப்புறம் ஒரு ரைடர் செங்குத்தா மேலேஏஏஏ போய் நாம தலை கீழா நிப்போமே - அதுவும் மேல போன பெறவுதான் அந்த செக்யூரிட்டி லாக் ஆகும் டக்குன்னு ஒரு சவுண்டி - கதி கலங்கி போய்டும்

எல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது :(

ஆயில்யன் said...

//அமுதா said...
வாங்க ஆயில்யன். நீங்க பயணம் பத்தி எல்லாம் எழுதணும்னு சொன்னதால் நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கேன். எப்படி வருதுனு பார்க்கிறேன்
//

தாங்க்ஸ்க்கா! பை தி பை இதுல ”பயணம்” அப்படிங்கற இடத்துல கேரளான்னு எழுதியிருந்தா நான் கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் பண்ணியிருந்திருப்பேன் பரவாயில்ல! :))))

சந்தனமுல்லை said...

நல்ல அனுபவத் தொகுப்பு அமுதா!

அமுதா said...

/* Rithu`s Dad said...
ஐயோ.. கொச்சின் போனீங்களா? ரெம்ப நல்ல ஊராச்சே!! பத்து வருடங்களுக்கு முன் அங்கு தான் என் முதல் " வேலை " ஆரம்பமாச்சு!! " கொச்சின்" பேரை கேட்டதுமே சந்தோசமா இருக்கு.. !! சீக்கிரம் மீதத்தையும் எழுதுங்க.. !! அப்புறம் அங்க இருக்க பெண்கள் பற்றியும் எழுதுங்களேன்..!!*/
ரித்துவோட அம்மாவைக் கூப்பிடுங்க... சொல்றேன் ...

அமுதா said...

ஆயில்யன் said...
/தண்ணி ஆட்டமும் (பாட்டுக்கு ஆடும்)
3டி தியேட்டரில் ஆட்டமும் ரசிக்கவில்லையா :(*/
/*வீகா லேண்ட்னால நாங்க தண்ணியில போட்ட ஆட்டம்தான் ஞாபகத்துக்கு வருது 12 மணி ஆரம்பிச்சு சாயங்காலம் 5 மணி வரைக்கும் திரும்ப திரும்ப ரைடிங்க் */
ம் இந்த 3-டி தியேட்டரை மிஸ் பண்ணிட்டேன். தண்டர் ஃபால் போய்ட்டு வரதுக்குள்ளே கடைசி ஆட்டம்னுட்டாங்க. அப்புறம் நாங்களும் 1 மணில இருந்து தண்ணில தான் இருந்தோம். அதுவும் இந்த யாழ்குட்டி திரும்ப திரும்ப பெரிய சறுக்கு ஏறி குதிக்கிறதை நான் இரசிச்சுட்டே இருந்தேன். வெளியே வந்த பிறகு தான் தோணிச்சு நாமளும் ஒரு தடவை போயிருக்கலாமேனு..

அமுதா said...

/*சந்தனமுல்லை said...
நல்ல அனுபவத் தொகுப்பு அமுதா!*/
நன்றி முல்லை

கணினி தேசம் said...

டூர் போறதூனாலே சந்தோசம்தான்.

பகிர்வுக்கு நன்றி

மகிழ்வான பயணத்தின் இரண்டாம் பாகம் சீக்கிறமா பதிவிடுங்க

துளசி கோபால் said...

நல்லா இருக்குங்க அமுதா ஆரம்பம்.

என்னைக் கொசுவத்தி ஏத்த வச்சுட்டீங்களே:-))))

அமுதா said...

வாங்க துளசி மேடம். ம்.. உங்க கொசுவத்தியை ஏத்துங்க. சுவாரசியமா இருக்கும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல காமெடியா எழுதி இருக்கீங்க..
நிஜம்மாவே இந்த லோயர் பெர்த் ப்ரச்ச்னை பெரும் ப்ரச்சனை..

Rithu`s Dad said...

கண்டிப்பா ரிதுவோட அம்மாட்ட படிக்க சொல்றேன் அமுதா!! அனால் நான் எழுத சொன்ன காரணம், அங்கு பெண்கள் மற்ற இடங்களைப் போல வீட்டிற்குள்ளேயே பிணைத்து வைக்கப்படுவதில்லை..(long long ago itself) அனைவரும் படிக்கிறார்கள்.. இதன் பயனை அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களிலே அங்கு கான முடியும்.... அதை பத்தி தன் சொன்னேன் தவிர.. !! வேறொன்றும் இல்லை :)

அமுதா said...

நன்றி முத்துலெட்சுமி

/*Rithu`s Dad said...
கண்டிப்பா ரிதுவோட அம்மாட்ட படிக்க சொல்றேன் அமுதா!! அனால் நான் எழுத சொன்ன காரணம், அங்கு பெண்கள் மற்ற இடங்களைப் போல வீட்டிற்குள்ளேயே பிணைத்து வைக்கப்படுவதில்லை..(long long ago itself) அனைவரும் படிக்கிறார்கள்.. */
நீங்கள் சொல்வது பொதுவாக கேரளப் பெண்களுக்கு பொருந்தும்னு நினைக்கிறேன். இருந்தாலும் என்னால் இருந்த ஒன்றிரண்டு நாள்ல இதைக் கவனிக்க முடியவைல்லை. தகவல் பகிர்வுக்கு நன்றி