என் மேகம் ???

Tuesday, February 1, 2011

மரணம்

குறுஞ்செய்தி வந்தவுடன்
தொடர்பு எல்லைக்கப்பால்
மரணம்

---------------------------

பல நாள் கழித்து
பல நட்புகளின் சந்திப்பு
புன்னகை பரிமாற்றமில்லை
துக்க வீடு

----------------------------
மிகச் சில நேரமே ...
காத்திருப்பு
ஆறுதல்
மனவலி
பகிர்வு

நீங்கியவுடன்
காத்திருக்கும்
அவரவர் உலகம்
நிற்காமல்
சுழன்று கொண்டே!!!

----------------------------
உயிரற்ற உடல் சுற்றி
உற்றார் உறவினர்
உடல் சுமந்து சென்றபின்
இழப்பை சுமப்போருக்கு
இழப்பின் ஆழத்தில்
இழுக்கும் இரவொன்று
விழுங்கக் காத்திருக்கும்
தனிமையில்....

--------------------------

7 comments:

ராமலக்ஷ்மி said...

ரணம்:(!

அத்தனை வரிகளும் நிதர்சனம்.

Chitra said...

உயிரற்ற உடல் சுற்றி
உற்றார் உறவினர்
உடல் சுமந்து சென்றபின்
இழப்பை சுமப்போருக்கு
இழப்பின் ஆழத்தில்
இழுக்கும் இரவொன்று
விழுங்கக் காத்திருக்கும்
தனிமையில்....


.....உண்மையான மன வலி ... அருமையாக எழுதி இருக்கீங்க.

ஆயிஷா said...

அத்தனை

வரிகளும மனவலி

அன்புடன் மலிக்கா said...

அத்தனை வரிகளும் உணர்வுகளால் பின்னப்பட்டது .அருமையாக எழுதியுள்ளீர்கள்..

Philosophy Prabhakaran said...

// பல நாள் கழித்து
பல நட்புகளின் சந்திப்பு
புன்னகை பரிமாற்றமில்லை
துக்க வீடு //

இந்த கவிதை பிரமாதம் மேடம்...

Anonymous said...

நிதர்சனம்..

பின்னோக்கி said...

வலி