என் மேகம் ???

Friday, February 25, 2011

ட்வீட்ஸ்

கடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி மெயிலை டெலீட் செய்வதில் இல்லை

பெளர்ணமி... பூரண நிலவு... நிலவொளி பூரணமாகவில்லை... தெருவெங்கும் மின்விளக்குகள்

நீலக்கடல்; நீல வானம்; செவ்வானம்; வெண்மேகம்; மீண்டும் பூமிக்கு தான் திரும்ப வேண்டும் கண்கள்...

வாழ்க்கையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும்

கேள்வி கேட்கும் குழந்தையின் சுட்டித்தனம்; அதற்கு சளைக்காது பதில் அளிப்பவரின் பொறுமை - இரண்டுமே சுவாரசியம் தான்

ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

காலையில் கடற்கரையில் தான் நடைபயிற்சி என்றாலும் சூர்யோதயத்தை இரசிப்பது மிஸ்ஸிங்... வாழ்வின் ஓட்டத்தில் இப்படி மிஸ்ஸாவது நிறைய....

வெளிச்சம் பொறுத்து சுற்றுகிறது நிழல்... நீண்டோ, குறுகியோ... காலடியில் ஒட்டிக்கொண்டிருந்த வரை கவனித்ததில்லை...

பால்யத்திற்கு திரும்ப வாய்ப்பிருந்தால்... இதமான கனவு, ஆனால் படித்து , பரீட்சை எழுத வேண்டும் என நினைத்தால் அது டெரர் கனவு...

பிள்ளைங்க முன்னாடி பெத்தவங்க சண்டை போடக்கூடாதுனு சொன்னால், முதல்ல பிள்ளைங்க கூட பெத்தவங்க சண்டை போடக்கூடாதாம்#நான் வளர்கிறேனே அம்மா

10 comments:

ராமலக்ஷ்மி said...

//மீண்டும் பூமிக்கு தான் திரும்ப வேண்டும் கண்கள்...//

ரொம்பச் சரி:))!

டெரர் கனவும், ‘நான் வளர்கிறேனே அம்மா’வும்:)))!

Chitra said...

கடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி மெயிலை டெலீட் செய்வதில் இல்லை


... The best! :-)

Philosophy Prabhakaran said...

// வாழ்க்கையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும் //

இது சூப்பர்... இன்னும்கூட மெருகேற வேண்டும் மேடம்... என்னாமா எழுதுறாங்க தெரியுமா..? ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

VELU.G said...

இனிமையான பிதற்றல்கள்

"உழவன்" "Uzhavan" said...

super :-)

ஹுஸைனம்மா said...

//கடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி//

"Block sender" போட்டா கொஞ்சம் பக்கத்துல வருமோ? :-)))


//ஆனால் படித்து , பரீட்சை எழுத வேண்டும் என நினைத்தால் அது டெரர் கனவு...//

அதே அதே.. எல்லாப் படிப்பும் முடிஞ்சப்புறமே, அப்பப்போ பரிச்சை எழுதுற மாதிரி கனவு வந்து தூக்கிவாரிப்போடுது!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, சொல்லிட்டீங்களே எல்லாத்தையும்.

நடை பழக்ச் சூரியனை மறப்பதில்லை நான்.
ஆனால் தெரு விளக்கில் நிலவைத் தொலைத்திருக்கிறேன்.
ராமலக்ஷ்மியின் லின்க் மூலம் உங்களைப் படிக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்த்துகள் அமுதா.

Anonymous said...

காலை சுற்றும் நிழல்களை நாம் கண்டு கொள்வதில்லை என்பது உண்மை.

ஆயிஷா said...

எல்லாம் நல்லா இருக்கு.

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி