என் மேகம் ???

Tuesday, May 18, 2010

பூ வாசம் வீசும் ...

"பூ வாசம் வீசும் பெண்ணே நான் பூ வரைந்தால்..." என்பது போல்...
படத்தில்...
பூ மலரும் பொழுது வாசமும் வந்தால்... அருவி கொட்டும் பொழுது சில்லென்ற காற்று வீசினால்.... இப்படி தான் கவனம் ஈர்த்தது 4D சினிமா... சென்னை அபிராமி மாலில்....

என்ன தான் என்று பார்க்க முடிவு செய்தோம். கொஞ்சம் வித்யாசமான அனுபவம் தான்.

திரைக்கு முன்னால் மூன்று வரிசை இருக்கைகள் இருந்தன. அமர்ந்த சற்று நேரத்தில்...இனிய மணம். ஹ்ம்... இதெல்லாம் பெரிய விஷயமா என்று எண்ணும் பொழுதே 3D... சாரி 4D படம் தொடங்கியது. கேமரா ஜூம் இன்... நம் சேர் கொஞ்சம் முன்னால் நகரும்... ஜூம் அவுட்...நம் சேர் கொஞ்சம் பின்னால் நகரும். அட!! என்று 4D அனுபவத்திற்கு தயாராகும் மனம். 3D படத்துடன் உண்மை அனுபவங்களும் இணைத்தால் 4D... (அப்ப 5D????)

எறும்பொன்றுடன் காட்டில் துவங்கும் பயணம் காட்டுத்தீயைக் கடந்து முடியும். எறும்பின் கரடுமுரடான பயணத்தின் பொழுது இருக்கை கட கடவென்று ஆடியது... இலையில் ஜிவ்வென்று பறக்கும் பொழுது விஷ் என்று காற்று முகத்தில் அறைய இருக்கை ஸ்லோ மோஷனில் நகர்ந்தது. ஆறொன்றைக் கடக்கும் பொழுது சில்லென்று காற்று வருடிச் சென்றது.

சிலந்திப் பூச்சியிடம் மாட்டும் பொழுதும், சில உருளல்களின் பொழுதும் இருக்கை முதுகிலும் காலிலும் லேசாகக் குத்தியது. 3D-ல் மலர் மெல்ல அருகில் தெரிந்து தொட முயன்ற பொழுது வாசம் வீசி மறைந்தது. காட்டுத்தீயின் ஓசை காதருகில் சடசடவென்று பொரிந்தது (நல்ல வேளை வெப்ப காற்று வரவில்லை... ஒரு நிமிடம் காட்டுத்தீக்கு காரணமான அந்த சிகரெட் சுட்டு விடுமோ என்ற பயம் இருந்தது). அழகான காட்சிகளுடன் முடிவு வந்தது பத்து நிமிடத்தில்...

அடுத்த பத்து நிமிடத்திற்கு "பாழடைந்த சாலை" என்று ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல் இருக்கைகள் ஆட 4D சினிமா தொடர்ந்தது. அவ்வப்பொழுது இருக்கைகள் குத்த... சில் காற்று வீச என்று ஒரு வழியாக முடிந்தது. பரவாயில்லை... கொஞ்சம் வித்யாசமான அனுபவம் தான்.

5 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

ம் க‌ல‌க்குங்க‌

VELU.G said...

நல்லஅனுபவம் தான்

பகிர்விர்க்கு நன்றி

ஹுஸைனம்மா said...

இங்கயும் “டைனமிக் தியேட்டர்”ங்கிற பேர்ல இந்த மாதிரி உண்டு; ஆனா காற்று, ஓசை, வாசனையெல்லாம் வராது. சீட் மட்டும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கேத்த மாதிரி ஆடும்.

4டி இன்னும் நல்லாருந்திருக்கும் இல்லியா?

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. பதிவை வாசித்து முடிக்கையில் லேசா பூ வாசம்..! நன்றி அமுதா:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட குட்டீஸ் எஞ்சாயா :)