என் மேகம் ???

Friday, May 14, 2010

விடுமுறை காலம்

புத்தகம் வாசிக்க
ஏகாந்தம் உண்டு
நினைத்ததை செய்ய
நிறைய நேரமுண்டு
என்றாலும்....
வீட்டில் இருக்க இயலவில்லை


இறைந்த பொருட்களை
ஒதுக்க தேவையில்லை
உணவு வகைகள் தேடி
சமைக்க தேவையில்லை
என்றாலும்....
வீட்டில் ஓய்வெடுக்க மனதில்லை

இது...
விடுமுறை காலம்
சுட்டி டி.வி ஓடவில்லை
சுட்டிகளின் சத்தமில்லை
என் குரல் எதிரொலிக்கும்
வீட்டில் இருக்க விருப்பமில்லை

6 comments:

தமிழ் அமுதன் said...

///இது...
விடுமுறை காலம்
சுட்டி டி.வி ஓடவில்லை
சுட்டிகளின் சத்தமில்லை
என் குரல் எதிரொலிக்கும்
வீட்டில் இருக்க விருப்பமில்லை..//

இதே நிலைமைதான் இங்கேயும்..!!!

கிளம்புரேன் இன்னிக்கு ஊருக்கு...!

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

அருமையான கவிதைங்க.. வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்

VELU.G said...

கவிதை நல்லாயிருக்குங்க

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு அமுதா கவிதை:)! விரும்பும் யாவும் செய்ய முடிந்தாலும்
//என் குரல் எதிரொலிக்கும்
வீட்டில் இருக்க// யாருக்கு இருக்கும் விருப்பம்? அருமை.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமுதா!

நட்புடன் ஜமால் said...

தனிமை ...