என் மேகம் ???

Monday, June 15, 2009

அலுக்காத கணங்கள்

திரும்ப திரும்ப கேள்விகளும்
எனது அதே பதில்களும்
என் மகளுக்கு அலுப்பதில்லை..

அம்மாவின் முந்தானை வாசமும்
அப்பாவின் கைபிடித்த நடையும்
அக்காவிடம் சின்ன சின்ன சீண்டல்களும்
என் மகளுக்கு அலுப்பதில்லை..

அன்றாட பயணத்தில்
விரைந்தோடும் வாகனங்களும்
பசுமை தொலைத்த சாலைகளும்
சச்சரவு மிகுந்த தெருக்களும்
எனக்கு அலுத்துப் போனபொழுது

நாய்குட்டியும் மானும் முயலும்
விமானமும் மரங்களும் மீனும
விண்ணில் அவள் தேடிய பொழுது
அவளது புதுப்புது தேடல்கள்
எனக்கு அலுக்கவில்லை

19 comments:

மயாதி said...

எனக்கும் தான் ....
அலுக்கவில்லை ஆனால் பிடிச்சிருக்கு.

அமுதா said...

நன்றி மயாதி

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பர்.

ஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.

நடக்கட்டும், நடக்கட்டும்.

எம்.எம்.அப்துல்லா said...

alagu :)

அமுதா said...

/* அமிர்தவர்ஷினி அம்மா said...
சூப்பர்.ஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.
நடக்கட்டும், நடக்கட்டும்.*/
விட்டதைப் பிடிக்க வேண்டாம்? நன்றி

நன்றி அப்துல்லா

நேசமித்ரன் said...

அருமையான கவிதை
இப்படி அலுக்காத கணங்கள்தான்
வாழ்வை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கின்றன

pudugaithendral said...

ஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.//

ஆஹா என் கூட போட்டி போட ஆள் கிடைச்சாச்சு. சந்தோஷம். வாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுகிட்டு பதிவுகளா போட்டுத்தாக்கலாம்.

:))) சொல்ல மறந்திட்டேனே பதிவு அழகு

நட்புடன் ஜமால் said...

மகளோடது சொல்லி
உங்கள் நிலையையும் சொல்லி
நல்லாயிருக்குங்க


அலுக்காத கணங்கள் தாம் ...

ராமலக்ஷ்மி said...

எத்தனை முறை வாசித்தாலும் அலுக்கவே இல்லை இக்கவிதை:)!

அமுதா said...

நன்றி நேசமித்திரன்
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி ஜமால்

அமுதா said...

நன்றி திகழ்மிளிர்

ஊர்சுற்றி said...

இதெல்லாம் பெரியவங்களுக்கானது..... ஹிஹிஹி..ஆனாலும் பிடிச்சிருக்கு.

அ.மு.செய்யது said...

உங்கள் கவிதைகளும் எங்களுக்கு எப்போதும் அலுப்பதில்லை.

நல்லா எழுதியிருக்கீங்க அமுதா.

அமுதா said...

நன்றி ஊர்சுற்றி
நன்றி செய்யது

Dhiyana said...

அலுக்காத கவிதை அமுதா. அருமை.

anbudan vaalu said...

நல்லாயிருக்கு அமுதா...

அமுதா said...

நன்றி தீஷு
நன்றி அன்புடன் வாலு

"உழவன்" "Uzhavan" said...

எப்படி அலுக்கும்? அதுதான் குழந்தையியலின் சிறப்பு.

தமிழ் அமுதன் said...

அருமை!! உங்க கவிதைகளும் அப்படித்தான் அலுக்கவே அலுக்காது!!