என் மேகம் ???

Sunday, April 5, 2009

குட்டி நிலவுக்குப் பிறந்தநாள்

பால் போன்றதொரு முழுநிலவு தினத்தில்
ஒரு நிலவில் ஒளிர்ந்த வானம்
இன்னொரு முழு நிலவாக
உன் வரவில் மேலும் ஒளிர்ந்தது...

டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...

பொம்மையுடன் விளையாடி
களைத்த குட்டிப் பெண்ணுக்கு
குட்டித் தங்கையாக நீ வர
குடும்பம் முழுமை பெற்றது...

கண்ணே மணியே...
மாணிக்கமே மரகதமே...
என்று தொடங்கி
ஐஸ்க்ரீமே, ரசகுல்லாவே
என்று தொடர்ந்து
முடிவே இல்லை உனை
கொஞ்சும் வார்த்தைகளுக்கு...

எங்கள்...
குட்டி தேவதைக்கு
குட்டி நிலவுக்கு
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
மலர்ந்து சிரிக்கும் வாடாமலருக்கு..
(யாழினிக்கு)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

22 comments:

நட்புடன் ஜமால் said...

மனமார்ந்த வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

குட்டி நிலவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

நட்புடன் ஜமால் said...

டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...\\

ஹா ஹா ஹா

மிகவும் இரசித்து சிரித்தேன்.

ச.பிரேம்குமார் said...

உங்கள் குட்டி நிலவிற்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் :)

Arasi Raj said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

ஆயில்யன் said...

யாழினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

//டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...///

ரசித்தேன்! :)

கணினி தேசம் said...

தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கவிதா | Kavitha said...

குட்டி நிலாவிற்கு - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

நானும் வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன்.

கவிதை மிக அழகு..!!

தமிழ் அமுதன் said...

//டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...////

.....அழகு!

குட்டி நிலவிற்கு எங்கள் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு....

அட்சய நந்தினி
அமிர்த வர்ஷினி
வனிதா தமிழ் அமுதன்
தமிழ் அமுதன் (ஜீவன் )

அப்துல்மாலிக் said...

என்னுடைய வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நிலவுக்கு.
நிலவோட அம்மாவுக்கும் தான்.

ஆதவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!!

ஃபார்வர்ட் பண்ணிடுங்க!!

தமிழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பாச மலர் / Paasa Malar said...

பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி நிலவுக்கு..

அமுதா said...

வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ் குட்டிக்கு.

டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...

ரசிப்பின் எல்லை.....

Dhiyana said...

பிறந்த நாள் வாழ்த்துகள் யாழினிக்கு. என் கணவருக்கும் நேற்று தான் பிறந்த நாள்.

அகநாழிகை said...

யாழினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஹேமா said...

பிந்தினாலும் மனதார வாழ்த்துகின்றேன் சின்னக் குட்டியை.

அமுதா said...

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி