என் மேகம் ???

Saturday, April 4, 2009

சின்ன சின்ன ஆசை

பத்து மணி வரை
படுக்கையில் புரள ஆசை

சுவையான உணவு பரிமாறப்பட்டு
சுடச் சுட உண்ண ஆசை

நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி
நாளொன்று கழிக்க ஆசை

என் அம்மாவுக்கும் இருந்திருக்கலாம்
சின்ன சின்ன ஆசைகள்
இன்று வரை இயலவில்லை
இன்று...
என் குழந்தைகளுக்கும் அவள் அம்மா!!!

9 comments:

ஆயில்யன் said...

சூப்பரூ!

அதுவும் நீங்க என்னாதான் சொல்லிப்பாருங்க நான் பாத்துக்கிறேன்ம்மா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுன்னு நோ சான்ஸ் வாய்ப்பு கொடுக்கவே விடமாட்டாங்க!

ஆயில்யன் said...

இனிமையான நிர்ப்பந்தங்களோ....!?

நட்புடன் ஜமால் said...

நல்ல

ஆசை.

கணினி தேசம் said...

சில ஆசைகள்... :))

சில நிராசைகள் :((

அப்துல்மாலிக் said...

எல்லா பொருப்பையும் அம்மாகிட்டே கொடுத்துட்டு ரொம்ப ஜாலியா பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்க என்பது தெளீவா தெரிந்துவிட்டது

ம்ம் இதுமாதிரி எத்தனை அம்மாக்கள்தான் கிடைப்பாங்க‌

ராமலக்ஷ்மி said...

//என் குழந்தைகளுக்கும் அவள் அம்மா!!!//

முடிவில் திருப்பம் அருமை.

இயலாது போனதை இனியாவது நிறைவேற்ற இயலுகிறதா பார்க்கலாமே.

அமுதா said...

/* ஆயில்யன் said...
சூப்பரூ!

அதுவும் நீங்க என்னாதான் சொல்லிப்பாருங்க நான் பாத்துக்கிறேன்ம்மா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுன்னு நோ சான்ஸ் வாய்ப்பு கொடுக்கவே விடமாட்டாங்க!*/

/* ஆயில்யன் said...
இனிமையான நிர்ப்பந்தங்களோ....!?*/
ஆமாம்.. ஆமாம்


/* நட்புடன் ஜமால் said...
நல்ல ஆசை.*/
:-)

/* கணினி தேசம் said...
சில ஆசைகள்... :))
சில நிராசைகள் :(( */
:-))

அமுதா said...

/*அபுஅஃப்ஸர் said...
எல்லா பொருப்பையும் அம்மாகிட்டே கொடுத்துட்டு ரொம்ப ஜாலியா பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்க என்பது தெளீவா தெரிந்துவிட்டது

ம்ம் இதுமாதிரி எத்தனை அம்மாக்கள்தான் கிடைப்பாங்க‌*/
ஆகா, நான் எல்லாம் குழந்தைகளைத் தூங்க வச்சிட்டு தான் படிவு எழுதுவேன்... ஆனால் நீங்க சொன்ன மாதிரி... பேரக்குழந்தைகளையும் வளர்க்கிற இதுமாதிரி எத்தனை அம்மாக்கள்தான் கிடைப்பாங்க‌. I am lucky


/* ராமலக்ஷ்மி said...
//என் குழந்தைகளுக்கும் அவள் அம்மா!!!//
முடிவில் திருப்பம் அருமை.
இயலாது போனதை இனியாவது நிறைவேற்ற இயலுகிறதா பார்க்கலாமே. */
ம்ஹூம்... இப்ப பேரனும் வந்துட்டான். ஆனால் ஒண்ணு பாட்டி தாத்தா எல்லாம் ரொம்ப விருப்பமா சுறுசுறுப்பா இருக்காங்க :-))

சந்தனமுல்லை said...

//இன்று...
என் குழந்தைகளுக்கும் அவள் அம்மா!!!//

:-)