என் மேகம் ???

Friday, January 23, 2009

வயதும் மரணமும்..

மரணம் என்பது...
வண்ணத்துப் பூச்சி
பிடிக்கும் வயதில்
சாமிகிட்ட போய்ட்டாங்க
சற்றே..
விவரம் தெரியும்பொழுது
வருத்தமான நிகழ்வு

மரணத்தின் தாக்கம்
புரியும் வயதில்
இளமை மரணம்
மிக வருத்தம் அளிக்கும்
முதுமை மரணம்
வயதாகிவிட்ட காரணம்
என மனம் வருந்தும்

வாழ்வில் மேலும்
பரிமாணங்களைக் காணும் வயதில்
இளமை மரணம்
மனதைப் பிசையும்
இழந்த குடும்பததை நினைத்து...
முதுமை மரணம்
இளமையாகத் தெரியும்
மனது கனக்கும்...
பெற்றோரின் முதுமையால்

15 comments:

அ.மு.செய்யது said...

////வாழ்வில் மேலும்
பரிமாணங்களைக் காணும் வயதில்
இளமை மரணம்
மனதைப் பிசையும்
இழந்த குடும்பததை நினைத்து...
//

உண்மை..உண்மை..

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை.

நட்புடன் ஜமால் said...

\\மரணம் என்பது...
வண்ணத்துப் பூச்சி
பிடிக்கும் வயதில்
சாமிகிட்ட போய்ட்டாங்க
சற்றே..
விவரம் தெரியும்பொழுது
வருத்தமான நிகழ்வு\\

ஆமாம்.

நட்புடன் ஜமால் said...

வயதாகி இறந்தாலும் அவர்கள் இல்லையே என்ற அந்த வெறுமை

நெஞ்சை பிசையும்.

முதுமையாக இருக்கும் பெற்றோரை எண்ணி மனது கனத்துதான் இருக்கு

நிஜமா நல்லவன் said...

/ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை./


ராமலக்ஷ்மி அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்!

அமுதா said...

நன்றி அ.மு.செய்யது

நன்றி மேடம்

நன்றி ஜமால்

நன்றி திகழ்மிளிர்

நன்றி நிஜமா நல்லவன்

பழமைபேசி said...

சரியாச் சொன்னீங்க...நன்று!

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..

Anonymous said...

நிஜமா நல்லவன் said...
/ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை./


ராமலக்ஷ்மி அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்!
//
நானும் அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்.

மேவி... said...

வார்த்தைகளை அருமையா use பண்ணி இருக்கிங்க....

நல்ல இருக்கு.

Unknown said...

//முதுமை மரணம்
இளமையாகத் தெரியும்
மனது கனக்கும்...
பெற்றோரின் முதுமையால்//

கொடியது மரணம்,அதை விட கொடியது முதுமை.என்பதை புரிய வைத்த வரிகள்.

chandru / RVC said...

பகிர்ந்துகொள்ள முடியாத அனுபவம் மரணம் மட்டுமே..! வண்ணத்துப்பூச்சிகள் கொண்டாட்டத்தின் குறியீடு. நன்றாக இருக்கிறது.

தமிழ் அமுதன் said...

''மரணம்'' நல்ல விளக்கம்

ஒருவரின் மரணம் தனக்கும் ரண மில்லாமல்

தன்னை சுற்றி இருப்பவருக்கும் ரண மில்லாமல்

நிம்மதியான விடுதலையாக இருக்க வேண்டும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சத்தியமான வார்த்தைகள் அமுதா.

அருமை.

ஹேமா said...

அமுதா...மரணம்,முதுமை,இழப்பு,பிரிவு வார்த்தைகளுக்குள் அடங்காத வேதனை தரும் விஷயங்கள்.