என் மேகம் ???

Tuesday, January 20, 2009

சின்ன சின்ன ஆசை

பேரனுக்கு பனை ஓலை கிலுகிலுப்பை வைத்து விளையாட்டு காட்ட சின்னதாக ஆசைப்பட்டார் என் தாயார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் கிடைக்கும் என்று சென்றேன். புது மண்டபம் நெடுக பாத்திரக் கடைகளும், துணி கடைகளும், வளையல் கடைகளும் கண்ணைக் கவர்ந்தன. பனை ஓலைப் பொருட்கள் கோயிலுள் மட்டுமே கிடைத்தன. பனை ஓலையில் செய்த பெட்டிகள், கூடைகள், கிலுகிலுப்பை, பூக்கூடை மற்றும் சிறு வயதில் விளையாடிய கலீடாஸ்கோப், கோலாட்டக் கோல்கள், சொப்பு சாமான்கள், நடை வண்டி, தாயம், பல்லாங்குழி என்று நினைவலைகளைத் தூண்டின அங்கிருந்த பல பொருட்கள்.

நான் சின்ன சின்ன ஆசையுடன் வாங்கிய பொருட்கள்:கலகல என நீ சிரிக்க
கலகலப்பாகும் வீடு என
கலகல என்று ஒலிக்கும்
பனை ஓலையில் செய்த
கிலுகிலுப்பை வாங்கி வந்தேன்
என் ஆசை மருமகனே!!!

நவ நாகரீகம் கோலோச்சும்
சிங்காரப் பட்டணத்தில்
இரட்டைப் பின்னல் ஆட
பட்டுப் பாவாடை சுற்ற
சின்ன கொலுசு ஒலிக்க
மல்லிச் சரம் சூடி
கோலாட்டம் நடக்குமா?

உள்ளே செல்லும் பொழுது இரும்பு தாயம் பத்து ரூபாய் என்றார்கள். பித்தளையில் கிடைத்தால் வாங்கலாம் என்று விசாரித்தோம். எழுபது ரூபாய் என்றார்கள். பொருளின் மதிப்பு சரியா என்று தெரியாததால் மீண்டும் இரும்புக்கு வந்தால் இருபது என்றார்கள். பிறகு அவர்களே, இப்பொழுது விசாரித்தவர்கள் தான் என்று கூறி பத்து ரூபாய்க்கே கொடுத்தார்கள்.

வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம்

13 comments:

நட்புடன் ஜமால் said...

\\கலகல என நீ சிரிக்க
கலகலப்பாகும் வீடு என
கலகல என்று ஒலிக்கும்
பனை ஓலையில் செய்த
கிலுகிலுப்பை வாங்கி வந்தேன்
என் ஆசை மருமகனே!!!\\

அழகு...

நட்புடன் ஜமால் said...

\\நவ நாகரீகம் கோலோச்சும்
சிங்காரப் பட்டணத்தில்
இரட்டைப் பின்னல் ஆட
பட்டுப் பாவாடை சுற்ற
சின்ன கொலுசு ஒலிக்க
மல்லிச் சரம் சூடி
கோலாட்டம் நடக்குமா?\\

இழந்துவிட்ட பலவற்றில் இதுவும் ஒன்று ...

நட்புடன் ஜமால் said...

\\கலீடாஸ்கோப்\\

இப்பவும் கிடைக்குதுங்க ...

ஆனால் அந்த ஈர்ப்பு இதில் இல்லை

நட்புடன் ஜமால் said...

\வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம்\\

அழகான வரிகள் ...

(நாம் ஆட்டத்தை இழுக்க முடிந்து விட்டால் - அதுவும் விதியே)

அ.மு.செய்யது said...

//வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்
//

உண்மை..உண்மை..

அ.மு.செய்யது said...

பனைஓலையில் பின்னப் பட்ட கிலுகிலுப்பை வாசம் கூட ஒரு அழகு தான்.
அதெல்லாம் இப்ப எங்க போய் தேடுறது ???

குடுகுடுப்பை said...

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம்

//a\

அருமையா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

ஆசை மருமகனுக்கு கிலுகிலுப்பை
ஓசையுடன் இசைத்த பாடலும்,
பட்டுப் பாவாடைச் சிறுமியருக்குக்
கொடுத்த கோலாட்ட கவிதையும்,
வாழ்க்கையெனும் பரமபதம் புரிந்திட
உருட்டிய தாயமெனும் தத்துவமும்
அருமை அருமை அருமை.

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் சூப்பரூ!

கிலுகிலுப்பை & தாயக்கட்டை நான் இப்ப சமீபத்தில வெளையாண்ட நாட்கள் ஞாபகம் வந்திடுச்சு :)))))

KarthigaVasudevan said...

//வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம் //

அழகான வரிகள் அருமையா இருக்கு இந்த கடைசி வரிகள்.

தமிழ் said...

எதை விட அத்தனையும் அருமை

வாழ்த்துகள்

தமிழ் தோழி said...

///கலகல என நீ சிரிக்க
கலகலப்பாகும் வீடு என
கலகல என்று ஒலிக்கும்
பனை ஓலையில் செய்த
கிலுகிலுப்பை வாங்கி வந்தேன்
என் ஆசை மருமகனே!!!///

அருமை அமுதா.

தமிழ் தோழி said...

///வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம்///

இந்த வரிகள் எனக்கு பிடித்து உள்ளது.