என் மேகம் ???

Monday, August 17, 2009

ஒரு திங்கட்கிழமை காலை

ஸ்வைன் ப்ளுவிற்க்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை. விடுமுறையை மிக இனிமையாகக் கொண்டாடினார்கள் குழந்தைகள். எல்லா அன்புச் சகோதரிகளும் என்று எங்கள் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். நடுவில் எங்கள் டார்ச்சரையும் நாங்கள் விடவில்லை... நேரத்திற்கு எழுப்பி எப்பொழுதும் போல் பல் தேய்த்தல், குளியல், காலை உணவைக் கொடுத்துவிட்டு "என்னவோ செய்ங்க" என்று ஆபீஸ் கிளம்பினோம். முத்தாய்ப்பாக சனிக்கிழமை நந்தினியின் பிறந்த நாள் கொண்டாட்டம். எல்லா குட்டீஸும் எஞ்சாய் தான்....

நேற்றுவரை ஆறு மணிக்கு எழுந்தவர்களுக்கு இன்று தான் தூக்கம் தூக்கமாக வருகிறது. பள்ளிக்கு பிறந்த நாள் உடை போட வேண்டும் என்ற நினைவூட்டியவுடன் துள்ளி எழுந்து நந்தினி எட்டு மணி வேனுக்கு ஏழரைக்குத் தயார். யாழினி "எனக்கு தூக்கமா வருது... ராத்திரி சரியாவே தூங்கலை" என்ற வழக்கமான பள்ளி செல்லும் நாளுக்கான மனதுடன் விழித்தாள்.

எனக்கு மனதுள் ஸ்வைன் ப்ளூ உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் சின்னப் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்று கவலை.

"டாய்லெட் எல்லாம் போனால் கையை நல்லா கழுவணும். சரியா"
"இது நாங்க எப்பவும் செய்யறது தான் அம்மா..."
"சாப்பிடறதுக்கு முன்னாடி நல்லா கை கழுவணும். சரியா?"
மெலிதான புன்னகை. "எப்பவும் அப்படி தான் அம்மா..."
"தும்மினால் கர்ச்சீப்ல நல்லா மூக்கையும் வாயையும் மூடிக்கணும்..."
இப்பொழுது மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"மத்தவங்க தும்மினாலும், மூக்கை மூடிடு"
இப்பொழுதும் மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"உன் மூக்கை, தும்மினவங்க மூக்கை இல்லை" என்ற அவள் தந்தையின் குறும்பில் வாய் விட்டு சிரித்தாள்.

ம்... மெலிதான கவலை இருக்கின்றது. ஆனால் , பாதுகாப்பு முறைகளைச் சொல்லித் தருவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இன்று என்று வானமும் பொத்துக் கொண்டு கொட்டுகிறது!!!

இறைவா.... ஸ்வைன் ப்ளூ மேலும் பரவாமல் பார்த்துக்கொள்!!!!

14 comments:

Anonymous said...

அடிக்கடி கை கழுவுவது, வெளியே போய் வந்தால் கை கால் கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் இருந்தாலே ஸ்வைன் புளூ பரவுவது பெருமளவு குறையும்.

அமுதா said...

நன்றி சின்ன அம்மிணி.

/*அடிப்படை சுத்தம் இருந்தாலே ஸ்வைன் புளூ பரவுவது பெருமளவு குறையும்.
*/
உண்மை தான்.

யாசவி said...

transmit by contact on mouth and nose and if u wash properly ur hands b4 touching mouth and nose will do

அமுதா said...

நன்றி யாசவி. "கையை வாயில், மூக்கில , கண்ணில வைக்கக்கூடது என்றும் சொல்லி அனுப்பினேன்"

சந்தனமுல்லை said...

:-)

நட்புடன் ஜமால் said...

பள்ளிக்கு பிறந்த நாள் உடை போட வேண்டும் என்ற நினைவூட்டியவுடன் துள்ளி எழுந்து நந்தினி எட்டு மணி வேனுக்கு ஏழரைக்குத் தயார்]]

எனது பள்ளி நாட்களையும் நினைவூட்டுகின்றது ...

-----------

இறைவா இந்த நோய் மேலும் பரவாமல் காப்பாற்று.

ஆயில்யன் said...

நீங்க சொன்ன மாதிரி கரீக்டா நடந்துப்பாங்க :)

டோண்ட்ட் ஒர்ர்ரீ பீ ஹாப்பி!!!!!!

அ.மு.செய்யது said...

N95 போன்ற உயர்தர மாஸ்க்குகளை பயன்படுத்த பழக்குங்கள்.

நம்மூரில் தான் இது போன்ற மாஸ்க் களை அணிய கூச்சப்படுகிறார்கள்.
வருமுன் காப்பது நலம் தானே.

அது தவிர "ஸ்டெரில்லியம்" "டெட்டால்" போன்ற சானிடைஸர்களை உங்கள் வீட்டு
வாஸ் பேஷினில் வைத்து அடிக்கடி குழந்தைகளை கைகழுவ செய்யவும்.

அமுதா said...

நன்றி ஜமால்
நன்றி ஆயில்யன்
நன்றி செய்யது...
/*அது தவிர "ஸ்டெரில்லியம்" "டெட்டால்" போன்ற சானிடைஸர்களை உங்கள் வீட்டு
வாஸ் பேஷினில் வைத்து அடிக்கடி குழந்தைகளை கைகழுவ செய்யவும்*/
வீட்டில் வைத்திருக்கிறேன். நல்ல டிமாண்ட்.. கிடைக்கவில்லை. அலுவலகம் வழியாகத் தான் வாங்கினேன்.

/*நம்மூரில் தான் இது போன்ற மாஸ்க் களை அணிய கூச்சப்படுகிறார்கள்.
வருமுன் காப்பது நலம் தானே*/
ஒன்று வாங்கினேன். நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் வித்யாசமாக உணர்வார்களோ என்று போடவில்லை. அடுத்தது அவர்கள் போடுவார்களா என்றும் தெரியவில்லை கர்ச்சீப் எடுத்து செல்லவே ஆயிரம் பிகு பண்ணுகிறார்கள்:-). என்றாலும் முயல்கிறேன். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று என்று வானமும் பொத்துக் கொண்டு கொட்டுகிறது!!! //

வழக்கமா மழை வந்தா சந்தோஷமா இருக்கும், இன்று ஏனோ அது மிஸ்ஸிங்க். எல்லாம் ஸ்வைன் ப்ஃளூ பயம்தான் :(

இறைவா.... ஸ்வைன் ப்ளூ மேலும் பரவாமல் பார்த்துக்கொள்!!!!

அதே வேண்டுதல்தான் இங்கேயும்

ஹேமா said...

உலகத்தை அழிக்கத் தொடங்கியிருக்கிற மனிதர்களால்தான் இத்தனை அபாயங்கள் அமுதா.பன்றிக்காயச்சலின் அடிப்படை பார்த்தால் குற்றவாளி மனிதனேதான்.விதைத்தவன் அறுக்கத்தானே வேணும்.

ஹேமா said...

என்னதான் நாங்கள் சுத்தமாக இருந்தாலும் பலபேருடன் பழகும்போது பயமாகத்தான் இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

வேண்டுவதைத் தவிர நாம் என்ன செய்யமுடியும் :-(
அக்கறையான பதிவு.

Deepa said...

:-) அழகான பதிவு. உங்கள் கவலை நன்றாகப் புரிகிறது. பயப்படாதீர்கள்.

//உன் மூக்கை, தும்மினவங்க மூக்கை இல்லை" என்ற அவள் தந்தையின் குறும்பில் வாய் விட்டு சிரித்தாள்.//

:-))