என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள ரெண்டு பேர் ஆவலா இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தாமதத்திற்கு ஜீவனும், தியானாவும் மன்னித்து விடுங்கள்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வீட்டில் வைத்ததால்! எனது முழு பெயர் அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சென்றவாரம் கொடைக்கானல் சென்றிருந்த பொழுது என் கணவர் "அப்பா இருந்திருந்தால்..." என்று கூறியபொழுது மனம் அழுதது
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்!
4. பிடித்த மதிய உணவு என்ன?
நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வெயில் காலத்தில் தயிர் சாதத்துடன் கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய்...
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பாக...
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்....
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பழகும் விதம்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : தன்னம்பிக்கை
பிடிக்காத விஷயம் : கோபம், உணர்ச்சிவயப்படுதல்
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் : அன்பு, பொறுமை
பிடிக்காத விஷயம் : பொறுமை... பொறுமை...பொறுமை...
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
சென்ற வருடம் மறைந்துவிட்ட மாமா ... வந்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறது மனம்
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு வெள்ளை சுடிதார்
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணினி திரை... கேட்டுக் கொண்டிருப்பது ... ஒரு பாதி எழுதும்பொழுது இரவின் நிசப்தம், மறு பாதிக்கு "டக் டக்" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தங்க நிறம் (அப்படியாவது ஜொலிப்போமே!!!). பேனா என்றால் தான் இந்த நிறம். நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.
14. பிடித்த மணம்?
குழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம், கற்பூரத்தின் மணம், மண்வாசனை
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ரொம்ப லேட்டா எழுதறேன். நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனால் நான் யாரை அழைப்பது என்றே யோசிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
"கண்ணாடி" ஜீவன் - ரொம்ப யதார்த்தமா எழுதுவார். அவரது எல்லா பதிவுகளுமே பிடிக்கும்.
"நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி? என்று உண்மையாக அவர் பதிவிட்டிருப்பார்
"மிளகாய்ச் செடி" என்று "(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )" என்று உணர்ச்சியோடு எழுதி இருப்பார்
"சுகமாய் ஒரு பிரசவம்" மிக அருமை
"பூந்தளிர்" தீஷு - குழந்தைகளுக்காக அம்மாக்கள் எவ்வளவு நேரம் செலவிடறாங்க , எப்படி எல்லாம் யோசிக்கறாங்கனு இவங்க பதிவுகள் ஒரு உதாரணம். இவங்க பதிவுகள்ல இட்லி பாத்திரம், பருப்பு வகைகள், சடை மாட்டி என்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும்.
17. பிடித்த விளையாட்டு?
கல்லாட்டம், தாயம், பல்லாங்குழி, இறகுபந்து.
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
கவலை மறந்து சிரிக்க வைக்கும் படங்கள்
20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க...
21. பிடித்த பருவ காலம் எது?
இதமான வெயில், சில்லென்று தென்றல் வீசும் காலம் (இதெல்லாம் சென்னையில் வருவது அபூர்வம். அதனால் என்ன சொல்லிக்க வேண்டியது தான்)
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நீல. பத்மநாபனின் "உறவுகள்"
இந்திரா பார்த்தசாரதியின் "வேதபுரத்து வியாபாரிகள்"
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
குட்டீஸ் வைத்து நல்ல படம் ஏதாவது என் கணினிக்குள் நுழைந்தால்...
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : குழந்தையின் சிரிப்பு
பிடிக்காத சத்தம் : உராயும் சத்தங்கள்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அலுவல் விஷயமாக அமெரிக்கா
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கைவேலைகள் எனக்கு பிடிக்கும்... முடியும் பொழுதெல்லாம் கற்றுக்கொள்வேன்
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வாக்கு கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி மீறுவது, நல்லவர் போல பழகிவிட்டு மற்றவரிடம் நம்மை விமர்சிப்பது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இயற்கை கொஞ்சும் அமைதியான இடங்கள் - சீசன் முடியும் வேளையில் (அப்ப தான் கூட்டம் இருக்காது) ஊட்டி, கொடைக்கானல், மூணார், குற்றாலம்...
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இன்னும் கொஞ்சம் தைரியமாக...
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சென்னை சாலைகளில் வாகனம் ஓட்டுதல் (எனக்கு ரொம்ப பயம்... எனவே இன்று வரை இது நிறைவேறவில்லை)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.
35 comments:
///என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்
//
:-)))
/என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள ரெண்டு பேர் ஆவலா இருக்காங்க./
எல்லாரும் தாங்க
/15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ரொம்ப லேட்டா எழுதறேன். நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனால் நான் யாரை அழைப்பது என்றே யோசிக்க முடியவில்லை. மன்னிக்கவும். /
அப்பாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
தப்பித்தேன்
/32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்./
அருமை
தங்க நிறம் (அப்படியாவது ஜொலிப்போமே!!!)\\
நல்லாருக்கே!
கல்லாட்டம் - கள்ளாட்டம் இல்லையே
\\இறகுபந்து\\ இது யமக்கும்.
நல்லவர் போல பழகிவிட்டு மற்றவரிடம் நம்மை விமர்சிப்பது.\\
ம்ம்ம் ... :(
நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.\\
லவ்லி :)
வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.
எவ்ளோ பெருமையா இருக்கு :)-
நன்றி முல்லை.
நன்றி திகழ். உங்களைத் தான் அழைக்க எண்ணினேன். நீங்கள் எழுதிவிட்டீர்களா என்று பார்க்க வந்து உங்கள் 50வது பதிவில் சற்று குழம்பிவிட்டேன். நீங்கள் தொடருங்களேன். எனக்கு பிடித்தது தமிழின் சுவையை உணர்த்தும் உங்கள் பதிவுகள்
நன்றி ஜமால்
நன்றி அமித்து அம்மா. நம் பதிவுகளில் நீங்கள் இன்னும் இரண்டு ஒற்றுமைகளைக் காணலாம்.
//அமிர்தவர்ஷினி அம்மா said...
ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.
எவ்ளோ பெருமையா இருக்கு :)-///
அமுதாக்கா மனசு:-
எவ்ளோஓஓஓஓ விசயம் சொல்லியிருக்கேன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.
எவ்ளோ பெருமையா இருக்கு :)-//
நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்!
எவ்ளோ பெருமையா இருக்கு :)-
//அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்///
இந்த வல்லி - வள்ளி பிரச்சனை எல்லா வல்லி - வள்ளிங்களுக்கும் இருக்கும்போல எங்கம்மாவும் ஸேம் பீலிங்க்ஸ் வைச்சிருக்காங்க :))
// சந்தனமுல்லை said...
//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.
எவ்ளோ பெருமையா இருக்கு :)-//
நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்!
எவ்ளோ பெருமையா இருக்கு :)-///
நானும் கூட இந்த கமெண்ட்டை அமுதாக்கா பிளாக்ல இருக்கிற கமெண்ட் பாக்ஸ்ல தான் டைப்பு பண்றேன் எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓ பெருமையா இருக்கு !!!!!!!!!!!
//அமுதா said...
நன்றி முல்லை.
நன்றி திகழ். உங்களைத் தான் அழைக்க எண்ணினேன். நீங்கள் எழுதிவிட்டீர்களா என்று பார்க்க வந்து உங்கள் 50வது பதிவில் சற்று குழம்பிவிட்டேன். நீங்கள் தொடருங்களேன். எனக்கு பிடித்தது தமிழின் சுவையை உணர்த்தும் உங்கள் பதிவுகள்//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
ஆஹா.... எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெருமையா இருக்கு
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா. வாழ்வு பற்றிய வரிகள் இதம்.
//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///
யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....???
:)
//6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்.... ///
சில சமயம் கல்லு வந்து வுழும்!
நன்றி ராமலஷ்மி மேடம்
ஆயில்யன் said...
/*யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....??? */
நாங்க ஸ்ஸ்ஸ்ஸ்னு ஜொள்ளு விட்டுட்டு சாப்பிட்ட பிறகு தான் யேவ்வ்வ்வ்வ்வ்...
//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.
எவ்ளோ பெருமையா இருக்கு :)-//
நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்!
எவ்ளோ பெருமையா இருக்கு :)-
:-))
/*ஆயில்யன் said...
சில சமயம் கல்லு வந்து வுழும்!
நல்லவங்களுக்கு ஆண்டவன் கல்லைக் காண்பிப்பான் ஆனால் விழச் செய்ய மாட்டான்... மீதியை நீங்களே முடித்துக் கொள்ளவும்.
//"டக் டக்" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்//
ஐ திங்க் ஆச்சி டிஸ்டர்பிங்க யூ !!!
(ஆச்சி கேன் யூ ஸ்டாப் கொஞ்ச நேரம்!
//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்///
ஆஹா! இன்னுமொரு டெரரார் அக்கா மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!
பதில்கள் நல்லா இருக்கு.
ஹா ஹா என் கமெண்ட்ட வெச்சு கும்மு கும்ம்ன்னு கும்முன ஆச்சியையும், ஆயில்ஸையும் நெனச்சா எனக்கு
எனக்கு
எவ்ளோ எவ்ளோ எவ்ளோ
பெருமையா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்கு
ஆயில்யன் said...
//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///
யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....???
:)
அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்
எங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-
இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்!
அப்டியா ஆச்சி,
சொல்லவே இல்ல. நான் கொஸ்டினை ஆயில்ஸ் படிச்சாரு, நீங்க ஆன்ஸர்ஸ் எழுதினீங்கன்னு நெனச்சேன். :)-
/*அமிர்தவர்ஷினி அம்மா said...
அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்
எங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-
*/
அப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்!!!
//அமுதா said...
/*அமிர்தவர்ஷினி அம்மா said...
அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்
எங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-
*/
அப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்!!!
//
அட்டாக் பண்ணியாச்சுல்ல
ரைட்டு!
(அ.அ.அக்கா உங்க பதிவுல அட்டாக் பண்றேன்னு சொன்னீங்க பண்ணவே இல்லை!)
//நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.
//
இதே ஆசை தாங்க எனக்கும்..ஐயோ...என்ன பண்றது..???
நல்ல பதில்கள்
நன்றி செய்யது
நன்றி முத்துராமலிங்கம்
அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி அமுதா. பதில்கள் அருமை.
//குழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம்//
இது சூப்பர் மணம். எனக்கும் இது பிடிக்கும்.
முல்லை, ஆயில்யன், அமித்து அம்மா கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர்..
//வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.//
நல்லா சொல்லிருக்கீங்க.
நல்ல பதில்கள்!! நல்ல ஜாலியான பின்னுட்டங்கள்!
அதோட என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொன்னதுக்கும் நன்றி!!;))
Post a Comment