குதித்து குதூகலிக்க
மகிழ்ந்து சிரிக்க
மனம் காரணங்கள்
தேடி அலையும்...
ஏக்கம் கொள்ளவும்
கோபம் கொள்ளவும்
உடன் கிடைக்கின்றன
மனதிற்குக் காரணங்கள்!!!
யோசித்ததில்லை நான்
ஏன் இந்த முரண் என்று...
கொய்த மலரை எனக்களித்து
காரணங்கள் ஏதுமின்றி
கட்டி அணைத்து மகிழ்ந்தாள்
செல்ல மகள்
மதிய உணவு எளிதாக
தயிர் சாதம் வைத்தனுப்ப
மகிழ்ந்து முத்தமிட்டாள்
எனதருமை மகள்
சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!
11 comments:
மிகச் சரியாகச் சொன்னீர்கள். அருமை அமுதா.
//கொய்த மலரை எனக்களித்து
காரணங்கள் ஏதுமின்றி
கட்டி அணைத்து மகிழ்ந்தாள்
செல்ல மகள்///
பகிர்ந்து கொள்தலே பல விதமான மன குதூகலங்களும் காரணமாகிறது :))
சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!\\
அருமை ...
ஆம்! கா-ரணங்கள் தேவையில்லை
exactly amudha
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
உண்மை தான்
மிகச் சரியாகச் சொன்னீர்கள். அருமை அமுதா.//
ரிப்பீட்டிக்கறேன்.
///குதித்து குதூகலிக்க
மகிழ்ந்து சிரிக்க
மனம் காரணங்கள்
தேடி அலையும்...
ஏக்கம் கொள்ளவும்
கோபம் கொள்ளவும்
உடன் கிடைக்கின்றன
மனதிற்குக் காரணங்கள்!!!
யோசித்ததில்லை நான்
ஏன் இந்த முரண் என்று...///
சந்தோஷ பட வேண்டிய விசயங்களை வெளியே தேடி,
கஷ்ட படும் விசயங்களை நமக்குள்ளேயே வைத்திருகின்றோமோ?
//கொய்த மலரை எனக்களித்து
காரணங்கள் ஏதுமின்றி
கட்டி அணைத்து மகிழ்ந்தாள்
செல்ல மகள்//
.................அழகு
//மதிய உணவு எளிதாக
தயிர் சாதம் வைத்தனுப்ப
மகிழ்ந்து முத்தமிட்டாள்
எனதருமை மகள்///
நல்ல வேளை வேற ஏதும் கொடுக்கலன்னு இருக்குமோ ?;))
///சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!//
....இது மிக அழகு!!
உண்மை அமுதா. ஆம்.. மனம் மகிழ்ந்திருக்க இனி காரணங்கள் தேவையில்லை.
கவிதை வெகுவாக ரசித்தேன் அமுதா.
தீபாவளி,பொங்கல்,புதுப்படம் ரிலீஸ்,பிறந்த நாள்,சொந்த வீடு,திருமணம் என்று நம் சந்தோஷங்களை தள்ளிப்போட காரணங்களை அடுக்கி கொண்டிருக்கிறோம்.
மழைநேர தேநீராக இருக்கட்டும்,முடி கலைக்கும் பேருந்து காற்றாக இருக்கட்டும்,
அனைத்தையும் சிலாகித்து ரசித்து மகிழும் மனப்பக்குவம் வேண்டும்.
எனக்கென்றே சொன்னதுபோல் உள்ளது.. சில சமயங்களில் நானும் இப்படித்தான்.. இனி சுற்றி இருக்கும் சுகங்களை மட்டும் தேடுவோமாக.. அருமை
//"ஏக்கம் கொள்ளவும்
கோபம் கொள்ளவும்
உடன் கிடைக்கின்றன
மனதிற்குக் காரணங்கள்!!!"//
உண்மையான உண்னை.
//"மதிய உணவு எளிதாக
தயிர் சாதம் வைத்தனுப்ப
மகிழ்ந்து முத்தமிட்டாள்
எனதருமை மகள்"//
மனித மனம் எளிமையையே என்றும் விரும்புகிறது.
//"சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!"//
ஆம்.காரணங்கள் தேவையில்லை.
Post a Comment