என் மேகம் ???

Tuesday, June 16, 2009

என்னத்த சொல்ல?

"அம்மா நீயும் அப்பாவும் எப்படி கல்யாணம் பண்ணிகிட்டீங்க" என்ற மகளின் கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. முன்பொரு முறை "எனக்கு எப்ப கல்யாணம் பண்ணுவீங்க" என்று கேட்ட பொழுது சிரித்தோம். ஏனெனில் அவள் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது திருமண மேடையில் கிடைக்கும் பரிசுகளுக்காக. இப்பொழுது வந்த கேள்வி "ஐ லவ் யூ" என்று கூறும் ஒரு விளம்பரத்தின் விளைவாக. இதற்கு முன்பும் வேறொரு விளம்பரத்தின் முடிவில் இதே கேள்வி துளிர்த்தது. இரண்டு நிமிட விளம்பரம் ஏதோ கேள்விகளைத் தூண்டுகிறது என்றால் , ஏதேதோ அபத்த விளம்பரங்களும் மற்ற நிகழ்ச்சிகளும் என்ன எண்ணங்களை விதைக்கிறதோ என்ற எண்ணம் தோன்றியது.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து அலுவலகத்திற்கு வந்தவரை தமிழ்ப்படத்திற்கு அழைத்துச் சென்றார்களாம். அவர் பார்த்து விட்டு "இது உங்கள் கலாச்சாரமா" என்று கேட்டாராம். "இல்லை" என்ற பதில் அவருக்கு என்ன புரிதலைத் தரும்? நிஜத்திற்கும் நிழலுக்கும் உள்ள முரண்களைக் குழந்தைகள் எவ்வளவு தூரம் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியே புரிந்து கொண்டாலும் அது வேறு சில நல்ல குணங்களை மாற்றி விடாதா?

உதாரணத்திற்கு நம்மூரில் இதெல்லாம் நடக்காது என்று சகித்துக் கொள்ளும் மனநிலை பல விஷயங்களில் உண்டு. நல்ல விஷயங்களைக் கூட முரணாக எடுத்துக் கொண்டு "நல்லவை" எல்லாம் நிழலில் நடக்கும் நிஜத்தில் அல்ல என்ற பிம்பம் உருவாகலாம். அழகை வைத்து மட்டுமே எடுக்கப்படும் விளம்பரங்கள் அவர்களுக்குள் அழகு மட்டுமே வாழ்க்கை போன்ற தவறான எண்ணங்களை ஊட்டலாம்.

ஏதும் செய்ய இயலாமல் , மனதுள் இது போல் தொடர்ந்து கொண்டே இருக்கும் கேள்விகள். ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் சிந்தித்து செயல்பட்டால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். ஆனால் ஊர் கூடி தேர் இழுப்பது எப்பொழுது? கல்லூரி முடிந்த பொழுது எங்கள் வகுப்பாச்சிரியர் எங்களிடம் சொன்னது , " உங்களிடம் நான் கூற விரும்புவது முடிந்தால் கன்ஸ்யூமரிசத்திற்கு அடிமை ஆகாதீர்கள். அதாவது ஒரு பொருள் வாங்கும் முன், அது நமக்கு தேவைதானா, அது இன்றி நம்மால் இருக்க முடியாதா என்று நன்கு யோசித்து பின் வாங்குங்கள்" என்றார். என்னால் அந்த அறிவுரையைப் பின் பற்ற முடியவில்லை. எல்லோரும் அப்படி இருந்தால் விளம்பரங்கள் பயன் அற்று போயிருக்குமோ? இப்படி சின்ன சின்ன விஷயங்களைக் கோட்டை விட்டு இன்று பொருள் சார்ந்த உலகில் நம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ?

12 comments:

நட்புடன் ஜமால் said...

இன்று பொருள் சார்ந்த உலகில் நம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ?

\\

ஆம்!

அளவிளா வருத்ததுடன் ...

Dhiyana said...

//பொருள் சார்ந்த உலகில் நம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ//

வருத்தத்துடன் ஆம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

எதுவும் சொல்வதற்கில்லைதான் :( !

அ.மு.செய்யது said...

க‌லாச்சார‌த்தை ப‌ற்றி எழுதியிருக்கிறீர்க‌ளா ??

இல்லை விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் போலித்த‌ன‌த்தை ப‌ற்றி எழுதியிருக்கிறீர்க‌ளா ??

அல்ல‌து ம‌னித‌ சுய அடையாள‌ங்க‌ளைத் தொலைத்த‌ல் குறித்து அல‌சியிருக்கிறீர்க‌ளா ??

திரும்ப‌ திரும்ப‌ ப‌டித்தும் ப‌திவின் மைய‌க் க‌ருவை என்னால் புரிந்து கொள்ள முடிய‌வில்லை.

புத‌செவி !!!!

அமுதா said...

/* அ.மு.செய்யது said...
க‌லாச்சார‌த்தை ப‌ற்றி எழுதியிருக்கிறீர்க‌ளா ??
இல்லை விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் போலித்த‌ன‌த்தை ப‌ற்றி எழுதியிருக்கிறீர்க‌ளா ??
அல்ல‌து ம‌னித‌ சுய அடையாள‌ங்க‌ளைத் தொலைத்த‌ல் குறித்து அல‌சியிருக்கிறீர்க‌ளா ??
திரும்ப‌ திரும்ப‌ ப‌டித்தும் ப‌திவின் மைய‌க் க‌ருவை என்னால் புரிந்து கொள்ள முடிய‌வில்லை.

புத‌செவி !!!!
*/
நல்ல கேள்வி. படங்களின்/ விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் போலித்த‌ன‌ம் கூட ம‌னித‌ சுய அடையாள‌ங்க‌ளைத் தொலைத்த‌தால் தானே?

அமுதா said...
This comment has been removed by the author.
சந்தனமுல்லை said...

:(

சந்தனமுல்லை said...

:(

"உழவன்" "Uzhavan" said...

//"இல்லை" என்ற பதில் அவருக்கு என்ன புரிதலைத் தரும்?//

சிந்திக்க வேண்டிய இடம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னத்த சொல்ல

நர்சிம் said...

//அதாவது ஒரு பொருள் வாங்கும் முன், அது நமக்கு தேவைதானா, அது இன்றி நம்மால் இருக்க முடியாதா என்று நன்கு யோசித்து பின் வாங்குங்கள்" //

If you buy something which you don't need, then you need to sell something which you really need.

- Someone.

தமிழ் அமுதன் said...

ஒன்னும் சொல்ல தோணல!!!