என் மேகம் ???

Thursday, May 14, 2009

பனியுலகப் பயணம்

பனி பொழியும் இடத்திற்கு
அழைத்துச் செல்ல
ஆசைப்பட்டாள் சின்ன மகள்

மறுக்க மனமின்றி
மென்மையாகச் சிரித்து வைத்தேன்
மெளனம் சம்மதம் என
கற்பனையில் மிதந்தாள்

பனிநீரில் மீன் பிடிக்க
மண்புழு வாங்கி வந்தாள்

எழில்மிகு உருவங்கள்
பனிக்கட்டிகளில் உருவாகின
பனிச்சறுக்கு விளையாட்டில்
இருவரும் களித்திருந்தோம்

தாயாக உருமாறி
போர்வை தந்தாள்
பக்குவமாக சமைத்து
ருசியாகப் பரிமாறினாள்

பனிபிரதேசத்தின் பிரவேசத்தில்
களைத்து கண் மலர்ந்தாள்
பனிபூத்த மலர்போன்று
புன்னகையுடன் அவள்
மற்றொரு கற்பனை தேசத்தில்...

அவள் நிம்மதியின் தாக்கத்தில்
மனதில் அமைதி பூத்தது

பசியின் கொடுமையும்
யுத்தத்தின் கொடூரமும்
பிஞ்சுகளின் நிம்மதியை
பறிக்கும் நினைவு
மனதில் வலியை விதைத்தது

புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு
முடிந்ததது பனியுலகப் பயணம்

14 comments:

ஆயில்யன் said...

//பசியின் கொடுமையும்
யுத்தத்தின் கொடூரமும்
பிஞ்சுகளின் நிம்மதியை
பறிக்கும் நினைவு
மனதில் வலியை விதைத்தது
/

:(

ராமலக்ஷ்மி said...

அருமையான பயணம்.

//புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு//

இணைகிறோம் நாங்களும் இந்தப் பிரார்த்தனையில்.

ஆயில்யன் said...

//புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு
முடிந்ததது பனியுலகப் பயணம்//

பிரார்த்தனைகள் பலிக்கவேண்டும் என்பதே இப்பொழுது முக்கிய பிரார்த்தனையாக இருக்கிறது !


நம்பிக்கை கொள்வோம்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு//

ம்

சந்தனமுல்லை said...

நல்ல அனுபவம் அமுதா! :-) அழகிய கவிதை உங்களிடமிருந்து!

நட்புடன் ஜமால் said...

\\பசியின் கொடுமையும்
யுத்தத்தின் கொடூரமும்
பிஞ்சுகளின் நிம்மதியை
பறிக்கும் நினைவு
மனதில் வலியை விதைத்தது\\


வருத்தம் மேலிடுகிறது.

எங்கள் பிரார்த்தனையும் இனையட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் ப்ரார்த்தனைகள் பலிக்கட்டும்.. அமுதா..

எம்.எம்.அப்துல்லா said...

புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு

//

:)

அ.மு.செய்யது said...

கவிதை சில்லுன்னு இருக்குனு நினைச்சேன்.
//பசியின் கொடுமையும்
யுத்தத்தின் கொடூரமும்
பிஞ்சுகளின் நிம்மதியை
பறிக்கும் நினைவு
மனதில் வலியை விதைத்தது//

இந்த வரிகள் அதுல நெருப்ப கொட்டிடுச்சு..அருமை அமுதா !!!

ஆதவா said...

ரொம்ப அருமையான கவிதை... கரு!!!
வித்தியாசமாக செல்கிறது கவிதை. கடைசியில் வெயில் பட்டு உருகியதைப் போன்று வலித்து கன்ணீர் வழிகிறதூ!!

ஆ.சுதா said...

பனி அனுபவத்தை அருமையா கவிபடுத்திட்டீங்க, நல்லா இருக்கு.

மண்குதிரை said...

நல்ல கருத்து தோழி.

தமிழ் said...

அருமை

Dhiyana said...

அருமையான கவிதை அமுதா. சந்தோஷமா ஆரம்பித்து முடிக்கும் பொழுது கனக்க வைத்துவிட்டீர்கள்.