என் மேகம் ???

Tuesday, May 18, 2021

அன்புள்ள அப்பா

அப்பா..அப்பாபேரன்பு
கொஞ்சம் கோபம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இன்னும் என்ன சொல்ல‌...

என்ன தவம் செய்தேனோ
உங்கள் மகளாக நான் வரவே
சுடுசொல் சொன்னதுண்டு
ஆனால்
அரவணைப்பு தான்
 நினைவில் உள்ளது...

நினைவுகள் மங்கினாலும்
நீங்கவில்லை
அன்பும் சிரிப்பும் விகடமும்

கடுமையான காலம்தான்
என்றாலும்  இத்தனை நாள்
உங்கள் அன்பை 
வரமாய் தந்த
 கடவுளுக்கு நன்றி

என்றும் பெருமைதான்
பிள்ளைகளைக் கண்டு உங்களுக்கு
எங்களுக்கும் பெருமை தான்
வரமாக வாழும் பெற்றோரால்

எங்கள் ஒவ்வொரு மேம்பாடும்
உங்கள் எண்ணத்தின் விதைகளே
நீங்களின்றி நாங்கள் இல்லை

சரியாக கொடுக்க இயலாவிட்டாலும்
பிரியாவிடை தான்
என்றும் எப்போதும்
 எங்களோடு நீங்கள் இருப்பீர்கள்
அன்புள்ள அப்பா

6 comments:

தமிழ் அமுதன் said...

இரங்கல்கள்

தமிழ் அமுதன் said...

இரங்கல்கள்

cvemommy said...

Beaultiful poem Amudha.... Your appa must be very proud of you.
Appas can never stop taking care of their girls. He will continue to watch
you from heaven.

RAMG75 said...

Rest In Peace. I am sure he is proud to have you as a daughter. God gives you strength to cross this difficult time.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல். தங்கள் அப்பாவின் ஆன்ம சாந்திக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் என் பிரார்த்தனைகள்.

Rajesh Ganesh said...

ஆழ்ந்த இரங்கல்கள் அமுதா...இழப்பிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் தைரியத்தையும் மன வலிமையும் அளிக்கட்டும். தங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்.