அப்பா..அப்பா
பேரன்பு
கொஞ்சம் கோபம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இன்னும் என்ன சொல்ல...
என்ன தவம் செய்தேனோ
உங்கள் மகளாக நான் வரவே
சுடுசொல் சொன்னதுண்டு
ஆனால்
அரவணைப்பு தான்
நினைவில் உள்ளது...
நினைவுகள் மங்கினாலும்
நீங்கவில்லை
அன்பும் சிரிப்பும் விகடமும்
கடுமையான காலம்தான்
என்றாலும் இத்தனை நாள்
உங்கள் அன்பை
வரமாய் தந்த
கடவுளுக்கு நன்றி
என்றும் பெருமைதான்
பிள்ளைகளைக் கண்டு உங்களுக்கு
எங்களுக்கும் பெருமை தான்
வரமாக வாழும் பெற்றோரால்
எங்கள் ஒவ்வொரு மேம்பாடும்
உங்கள் எண்ணத்தின் விதைகளே
நீங்களின்றி நாங்கள் இல்லை
சரியாக கொடுக்க இயலாவிட்டாலும்
பிரியாவிடை தான்
என்றும் எப்போதும்
எங்களோடு நீங்கள் இருப்பீர்கள்
அன்புள்ள அப்பா