என் மேகம் ???

Thursday, March 29, 2012

சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் (சிங்கப்பூர் பயணம் - நாள் 1)

முந்தைய பாகத்திற்கு ”இங்கே

இந்தியாவில் இரவு 12:45 விமானம். போய் சேரும் பொழுது கிட்டதட்ட சிங்கப்பூர் மணி 7:30. செக் அவுட் பண்ணி ஹோட்டலுக்கு டாக்ஸி பிடித்து செல்ல 9:00 மணி. முதல் நாள் என்பதால் சற்று சாகவாசமாக இருக்கலாம் என்று திட்டம். எனவே திட்டமிட்டிருந்தது சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் + ரிவர் க்ரூஸ். ஆனால் டக் டூரே தண்ணீரில் என்பதால் ரிவர் க்ரூஸைக் கட் செய்து விட்டோம். முதலில் சையத் அல்வி தெரு தெருவில் போகாததால, சாப்பாட்டுக்கு கொஞ்சம் தடுமாறிட்டு அப்புறம், காரைக்குடியைப் பிடிச்சு காலை உணவு முடிஞ்சது. அடுத்து பஸ் ஸ்டாப்பை தேடி சிங்கப்பூர் ப்ளையர் போற பஸ்ஸை பிடிச்சோம். வழியில் சிங்கப்பூரின் அழகை இரசிச்சுட்டே போனோம்.

இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் டிக்கட்டை வலையிலேயே நான் பதிவு செஞ்சுட்டேன். இந்த ”சுட்டியில் ” சிங்கப்பூர் ஃப்ளைட்-->சிங்கப்பூர் சிட்டி ஃப்ளையர் பாஸ் தேர்ந்தெடுத்தால், சிங்கப்பூர் ஃப்ளையர் + டக் டூர் போகலாம்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து ப்ளையர் போற வழியில் சிட்டி வியூ நல்லா இருக்கு. இது கேசினோ. அங்கே டூரிஸம் தான் வருமானம். இந்த கேசினோவுக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு நுழைவு இலவசம், சிங்கப்பூர்காரங்கனா 100$.சிங்கப்பூர் ப்ளையர் பார்க்க ஜயண்ட் வீல் மாதிரி இருக்கு. ஏ.சி செய்யப்பட்ட கேபின் கேபினா இருக்கு. ஒரு சுற்று வர 30 நிமிஷம் ஆகுது. ரொம்ப மெதுவா சுத்தறதே தெரியாமல் சுத்துது. இதுல போனால் சிங்கப்பூரை ஒரு சுத்து பாத்துடலாம். நல்ல வேளை 30 நிமிஷம் தான்... இல்லேனா கொஞ்சம் போரடிச்சிருக்கும். இந்த டிக்கட்டுக்கு ஒரு ”சிங்கப்பூர் ப்ளையர்” மாடல் கீ செயின், பர்ஸ்ல வச்சிகிற மாதிரி நம்ம போட்டோ, குட்டீஸ் டிக்கட்டுக்கு ஒரு சின்ன செட், அப்புறம் ஒரு டிக்கட்டுக்கு 5$ சாப்பாட்டு டோக்கன் கொடுக்கறாங்க. 5$ சாப்பாடு கிடைக்குமே, மதிய சாப்பாட்டுக்கு ஆச்சுனு புட் ட்ரைய்லுக்கு போனால், பிள்ளைங்க போன வேகத்தில வெளியே வந்துட்டு, “நோ எண்ட்ரி” சொல்றாங்க. அது சைனீஸ் ஸ்டைல் உணவு. அவங்களுக்கு வாடை பிடிக்கலை. நான் வெஜ்ஜா இருந்தாலுமே அந்த வாசனை பிடிக்கலை. அப்புறம் அதுல ஒரு கடையைக் கண்டு பிடிச்சு, 5 பேர் 25 டாலருக்கு தண்ணி பாட்டிலும் கூல் ட்ரிங்க்சும் வாங்கி குவிச்சோம். எப்படியும் இது தேவை தானே? நாளையில் இருந்து சாப்பாடு பேக் செய்யணும்னு சொல்லிகிட்டோம். சப்வே இருந்ததால் கொஞ்சம் சாப்பிட முடிஞ்சது.

இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் இருக்கிற காம்ப்ளக்ஸ்ல. “ஃபிஷ் ஸ்பா” இருந்தது. சிங்கப்பூர்ல அங்கங்க இந்த “ஃபிஷ் ஸ்பா” இருக்கும். டாக்டர் ஃபிஷ் (garra rufa) என்று ஒரு வகை மீன் வந்து நம்ம காலை மசாஜ் செஞ்சு நமக்கு புத்துணர்ச்சி கொடுக்குமாம். நம்ம ஊர் குளத்தில காலை வைக்கலாம்னு கமெண்ட் அடிச்சாலும், பிள்ளைகள் விருப்பம் தான் ஜெயிச்சுது. காலைக் கழுவி, ஏதோ ஸ்ப்ரே பண்ணி, டாங்க்ல காலை விட்டால், மீனெல்லாம் கொசகொசனு காலை சுத்தி உரச ஆரம்பிக்குது. தண்ணில கால் மணி நேரம் காலை விட்டால், மீனில்லாட்டியும் கால் சுத்தமாவும், நமக்கு புத்துணர்ச்சியாவும் தான் இருக்கும்னு தோணுச்சு...டக் டூர் என்பது நிலத்திலேயும், தண்ணிலயும் போகும் வண்டியில் பயணம். சிஙப்பூர் ப்ளையரில் ஆரம்பிச்சு, அங்கேயே முடியும். 30 நிமிஷம் நிலத்திலேயும், 30 நிமிஷம் தண்ணிலயும் போகுது. ஒரு கைடு, சிங்கப்பூ பத்தி சொல்லிட்டே வர்றார். சிங்கப்பூரின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு டாக்ஸியில் போனால் அதிகபட்சம் 30 நிமிஷம் தானாம். நிலத்தில் போய்கிட்டு இருந்த வண்டி, டபக்னு தண்ணில குதிச்சது. முன்னாடி இருக்கிறவங்க நனைவாங்கனு சொன்னாங்க... ஆனால் நனையலை.. அப்படியே தண்ணில ஒரு சுத்து... மெர்லயன் வாயில் இருந்து தண்ணி வர்றது கிட்ட வரை போய்ட்டு வந்தோம்.


திரும்ப பஸ்ல லிட்டில் இண்டியாவில் இறங்கினோம். அங்கே இருந்து ஹோட்டலுக்கு போக கொஞ்சம் தூரம்னும், மெட்ரோ இரயிலில் ஒரு ஸ்டாப்னும் சொன்னாங்க. மெட்ரோவில் போன பொழுது தான் புரிஞ்சது, அது எவ்வளவு ஈசியா இருக்குனு... இனி ரயிலில் தான் பயணம்னு முடிவு பண்ணிட்டோம். பயணம் முடிஞ்சு டிக்கட்டைத் திருப்பி கொடுத்துட்டால் 1$ திரும்ப கொடுக்குது டிக்கட் மெஷின். முஸ்தபாவில் சின்ன ரவுண்ட்-அப், சாப்பாட்டுக்கு சையத் அல்வி தெருவில் ஆனந்த பவன் என்று முதல் நாள் நலமாக முடிந்தது.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அழகாக விரிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். படங்களும் அருமை அமுதா. தொடருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

மெட்ரோவில் போன பொழுது தான் புரிஞ்சது, அது எவ்வளவு ஈசியா இருக்குனு... இனி ரயிலில் தான் பயணம்னு முடிவு பண்ணிட்டோம்

மெட்ரோ பயணம் எங்களுக்கும் மிகப்பிடித்தது..

அருமையான படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..

கீதமஞ்சரி said...

சிங்கப்பூருக்கு சுற்றுலா வர விரும்புபவர்களுக்கு ஒரு அருமையான கையேடு தயாராக உள்ளது இங்கு. ஒவ்வொரு தகவலையும் தெளிவாகத் தருவதற்கு நன்றி அமுதா.

துபாய் ராஜா said...

முதல்நாள் பயணம். முத்தான பயணம். படங்களும் அருமை.