என் மேகம் ???

Wednesday, July 27, 2011

தமிழ் படும் பாடு

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தால் பல சுவாரசியங்கள் நிகழும். கணக்கில் கூட்டல் கழித்தல் சொல்லிவிடலாம், ஆனால் தமிழில் என்ன ல்,ர,ன என்று மட்டுமா... அ ஆ இ ஈ....சொல்லிக் கொடுப்பதற்குள்.... அம்மம்மா....

க்+உ என்ன...
”கு ”
வெரிகுட்...”மாடு” --- எதுல முடியுது....
“உ”
வாவ் சூப்பர். பத்து ---- எதுல முடியுது .... “எ”
அடடா.... பத்தூஉ ... சொல்லு...எப்படி...
ஊ....
ம் அப்படி தான்... எதுல முடியுது...”எ”
”எ” எழுது...
“அ”

அடுத்து “எ” எது “அ” எது என்ற பாடத்தில் நமக்கு “உ” மறந்து போனதோடு... ”அ” “எ” மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகமும் வந்துவிடும்.

நாய் எழுது
“நாய்”
சூப்பர்... தாய் எழுது...
“த இ”
“இ... முதல்ல தானே வரும்”
“த ஈ”
“ஈ இங்க வராதுமா.... முதல்ல தான் வரும்...எழுது..”
“ஈத”
இங்க பாருடா... இந்த “ய்” தான் நடுவில், கடைசில வரும்... “இ” “ஈ’ எல்லாம் முதல்ல வரும்...ஓ.கே...எழுது
“தாய்”
அம்மாடி....”இரண்டு” எழுது
“யிரந்து”

தமிழ் பாடம் போதும்... தாய் எழுதினது போதாதா இந்த தாய்க்கு...

சின்னவங்க இந்த கூத்துனால்... பெரிய்வங்க வந்து தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க... அவங்ககிட்ட...

முதல்ல நான் சொல்றதை நீ படி... அப்புறம் சொல்லிக் கொடுக்கலாம்.
சரிம்மா...
இதை படி
“நதியின்...”
“நதினா என்ன?”
ரிவர்
ம்... படி
“பிலையன்று...”
பிலையில்லை... பிழை....
எனக்கு “ள” வராது...
அதென்ன வராது... கவனி.. நாக்கை இங்க வச்சா... ல, அப்புறம் ள...அப்புறம்...
போம்மா... நான் இங்கிலீஷே படிச்சுக்கிறேன்.
தப்பு... தாய்மொழி தெரியாமல் இருக்கலாமா...
எனக்கு தான் பேசத் தெரியுமே
இல்லைடா...(சாரி ரெண்டு பேருமே எஸ்கேப் ஆனதால்... அன்னிக்கு தமிழ் எஸ்கேப் ஆச்சு)

”அ” ”உ” “எ” இடம் மாற
”ல” “ள” “ழ” தடம் மாற
“ன” “ண” “ந” தடுமாற
மழலையிடம்
தமிழ் தவிக்கிறதா?
தமிழிடம்
மழலை தவிக்கிறதா?

5 comments:

அன்புடன் நான் said...

”அ” ”உ” “எ” இடம் மாற
”ல” “ள” “ழ” தடம் மாற
“ன” “ண” “ந” தடுமாற
மழலையிடம்
தமிழ் தவிக்கிறதா?
தமிழிடம்
மழலை தவிக்கிறதா//

எங்கே எதுவும் தவிக்க வில்லைங்க நாம்தான் மழலையையையும் மொழிழையும் பாடாடுத்துறோம்.

உங்க பகிர்வு சிறப்பா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

மழைலைகள் தாம் தமிழ்நாட்டில் மாட்டி கொண்டு தவிக்கின்றனர்

இராஜராஜேஸ்வரி said...

மழலையிடம்
தமிழ் தவிக்கிறதா?
தமிழிடம்
மழலை தவிக்கிறதா?//

பகிர்வு சிந்திக்கவைக்கிறது.

தமிழ் அமுதன் said...

இது பத்தி நானும் ஒரு பதிவு போடனும்னு இருந்தேன்..!

ராமலக்ஷ்மி said...

//தாய் எழுதினது போதாதா இந்த தாய்க்கு...//

:))!

ஆனாலும் அமுதா, நம் காலத்தில் இத்தனை சிரமம் இல்லாமல் இலகுவாகக் கற்றுக் கொண்டு விட்டோமென்றே தோன்றுகிறது.