என் மேகம் ???

Thursday, January 28, 2010

இங்கிலீஷ் அமெரிக்கா

குட்டிப் பெண்ணுக்கு ஊருக்கு போவது முன்பெல்லாம் பிடிக்காது. இப்ப "மீ த ஃபர்ஸ்ட்". ஆனால் மேடம் அஞ்சு நாள் ஊருக்கு போகணும்னு கிளம்புவாங்க... அப்புறம் போன உடனே "வீட்டுக்கு போகலாம்னு" ஆரம்பிப்பாங்க... இப்ப அப்படி ஊருக்கு போகணும்னு சொன்னவங்க கிட்ட
"நீ ஊருக்கு போ...நான் அமெரிக்கா போறேன்..." என்றேன்.
"இங்கிலீஷ் அமெரிக்காவா தமிழ் அமெரிக்காவா?"
"ம்...இங்கிலீஷ் அமெரிக்கா"
"சரி போ"


*****************************

மேடம்க்கு லீவு... எனக்கு ஆபீஸ்... ஆனாலும் பெரியவங்களை தொந்தரவு படுத்தக் கூடாதே!! எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. "நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா?". ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனு புரியலை... அப்புறம் , "எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்

*****************************

ஆபிளில் இருந்து சீக்கிரம் வந்து பீச்சுக்கு அவளுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு காக்கை கூட்டம் இருந்தன. நம்ம குட்டீஸ்க்கு உடனே சந்தேகம் வருமே ... ஒரு புழுவைப் பார்த்தால் கூட அதோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டு ..எல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்ற வரை அது விளையாடும்னு சமாளித்தாலும் கேள்வி கேட்டு...
"இதெல்லாம் அம்மா காக்காவா அப்பா காக்காவா?"
"ரெண்டும் இருக்கு"
"எதெல்லாம் அம்மா காக்கா?"
"தெரியலை பார்க்கலாம்"
அப்பொழுது சில காக்கைகள் பறந்தன.
"அதெல்லாம் ஏன் சீக்கிரம் போகுது"
"ம்... அதெல்லாம் வீட்டுக்கு போகுது"
"ஓ!! அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா?"
"..."

***********************
ஃபைட்டர் ஃபிஷ் முட்டை போட்டிருந்தது. எனவே பெண் மீனைத் தனியாக போட்டோம்.
"மேல் ஃபிஷ் என்ன பண்ணும்?"
"மீன் குட்டியைப் பாதுகாக்கும்..."
ஏனோ அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.

மாலை அலுவலகத்திற்கு ஃபோன். "அம்மா... முட்டை எல்லாம் காணோம். இந்த மேல் பைட்டர் தின்னுடுச்சு போல... நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்"

************************

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு அமுதா:)!

//"எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்//

நல்ல பெண். வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது என்ன இங்கிலீஷ் அமரிக்கா.. ?

நாம தப்பு பண்ணிட்டோம்.. //
அடே நல்ல கூட்டணி வச்சிருக்கீங்க போல உங்க வீட்டுல.. பொம்பிளை பிள்ளைங்கறது சரியாத்தானே இருக்கு..:)

pudugaithendral said...

நெகிழ்வான தருணங்கள்

சந்தனமுல்லை said...

டிரெயினிங்?!! :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓ!! அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா?"
"..."

:)))))))))))))

நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்"

ஃபீமேல் பைட்டரை விடாதது எவ்ளோ பெரிய தப்பு, தெரிஞ்சே தப்பு செய்த உங்களை என்ன செய்யலாம் ;)

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பகிர்வு அமுதா....

மாதவராஜ் said...

இதென்ன இன்று குட்டீஸ் நாளா!
முல்லை, அமித்து அம்மா, நீங்க....
ரொம்மபவும் ரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

இங்கிலீஷ் அமெரிக்கா - நிறைய யோசிக்கனும் போலிருக்கே இத புரிஞ்சிக்க - சரி சரி நீங்களே சொல்லிடுங்க.

பெண் காக்கா - :)

நாம தப்பு பண்ணிட்டோம் - தாய்மை.

தமிழ் அமுதன் said...

நல்ல பகிர்வு ...!

பின்னோக்கி said...

குழந்தைகளின் மொழி அருமை.

அட பைட்டர் மீன்களில் கூட ஆண் மீன் வில்லன் ?. இதை வண்மையாக கண்டிக்கிறேன் :).

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பகிர்வு தாயும் சேயும் நலமுடன் வாழ்க..

http://niroodai.blogspot.com

Deepa said...

ரசித்தேன்! :-)

ஹுஸைனம்மா said...

//நாம தப்பு பண்ணிட்டோம். //

மீனைப் பிரித்தது நீங்க. ஆனாலும் உடன்நின்றதற்காக, தன்னையும் சேர்த்துக் கொள்கிறாள். பெருந்தன்மை!!

இங்லீஷ் - தமிழ் அமெரிக்கான்னா என்ன?

அமுதா said...

அனைவருக்கும் நன்றி...

"இங்கிலீஷ் அமெரிக்கா...."

ம்.. குழந்தைகள் ஊரும் உலகும் புரிந்து கொள்வதே வித்யாசம் அல்லவா. அமெரிக்கா என்பது தூர இடம் அவளைப் பொறுத்தவரை. இங்கிலீஷ் பேசும் அமெரிக்காவும் உண்டு. அவளுக்கு அங்கு வர விருப்பமில்லை... இங்கிலீஷில் பேச வேண்டும் என்பதால். தமிழில் பேசுவார்கள் என்றால் மேடம் நானும் வரேன் என்பார்கள் :-)

Dhiyana said...

சூப்பர் அமுதா :-))