என் மேகம் ???

Tuesday, January 20, 2009

காலத்தினால் செய்த நன்றி

குறிப்பு: "குறள் கதை எழுதணும்னு ஆசை. கொஞ்சம் முயற்சி பண்ணினேன். நல்லா இல்லைனா ரொம்ப திட்டாதீங்க... "


"சாமுவேல் வந்திருக்காரு", மனைவியின் எரிச்சலான குரல் கேட்டு நிமிர்ந்தான் முருகன். மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன், அவளைச் சற்றே கெஞ்சலுடன் பார்க்க, அவள் சின்ன பெண் கயல் பிய்த்து போட்டிருந்த பொம்மையைக் காட்டி "இது கூட நூறு ருபாய்க்கு வாங்கினது தான்", என்றாள் அலட்சியமாக. "சரி நான் வரேன்", ரோட்டில் சாமுவேல் நின்று கொண்டிருப்பான் என்று எண்ணியவாறு கிளம்பினான்.

ஞாயிறு...

"அப்பா, எங்க தமிழ் மிஸ் திருக்குறள் பற்றி பேசச் சொல்லி இருக்காங்க" என்றாள் பெரியவள் சுடர்.
"ஓ... மனப்பாடமா சொல்லணுமா?"
"இல்லைப்பா, ஒரு குறளுக்கு எடுத்துக்காட்டா ஏதாவது சின்ன நிகழ்ச்சி சொல்லணுமாம். ஏதாவ்து சுவாரசியமா சொல்லுங்கப்பா. "
"அப்பா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன், என்ன குறள் சரியா வரும்னு நீயே சொல்லு, சரியா?"
"சரிப்பா"
"இப்ப இவ்ளோ பெரிய வீடு, காருனு இருக்கேன்னா அதுக்கு ஒரு நூறு ரூபா தான் காரணம் தெரியுமா? பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு கடை எல்லாம் கிடையாது. கைல துணியை எடுத்துட்டு வீடு வீடா போகணும். அப்ப தான் ஒரு சின்ன கடையை நடத்த வாய்ப்பு வந்தது. எப்படியோ பணம் புரட்டிட்டேன், ஆனால் நூறு ரூபாய் பத்தலை. அது இருந்தால் தான் கடை கைக்கு வரும்னு நிலைமை. அதைக் கடனா கேட்க எனக்கு அப்போ யாருமில்லை, ஒரு ஃபிரண்டைத் தவிர. ஆனால் அவரும் என்னை மாதிரி தான், அதனால் கேட்க முடியலை. ஆனால் என் ஃபிரண்ட் எனக்கு அவரோட பொருளை அடமானமா வச்சு நூறு ரூபாய் கொடுத்தாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு திருப்பம் வந்துச்சு. அங்க பாரு கயல் பிச்சு போட்ட பொம்மை. அது மதிப்பு கூட நூறு ரூபாய் தான். அதுவும் இதுவும் ஒண்ணாகுமா?", கடைசி வரியில் விரக்தி தெரிந்தது பேச்சில்.

"ஆகாதுப்பா " என்ற சுடரை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
"எங்க மிஸ் சொல்லி இருக்காங்கப்பா , ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ஏன்னா,
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"


முருகன், அன்புடன் மகளை அணைத்துக் கொண்டான்.
"என்னங்க சாமுவேல் வந்திருக்கிறாரு. ஹால்ல உட்காரச் சொன்னேன். பலகாரம் எடுத்துட்டு வரேன் , சாப்பிட்டு கிளம்புங்க", என்ற மனைவியின் குரலில் மாற்றம் தெரிந்தது. "சில சமயம் சொல்றவங்க சொன்னால் தான் மண்டைக்குள்ள ஏறுது", என்றாள் அவள் புன்னகையுடன்.

20 comments:

நட்புடன் ஜமால் said...

குறள் விலக்கமா ...

நட்புடன் ஜமால் said...

\\நல்லா இல்லைனா ரொம்ப திட்டாதீங்க...\\

கொஞ்சமா ...

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்! :)))

ஆயில்யன் said...

//ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ///

சிம்பிளா சொல்லிட்டீங்க எவ்ளோ பெரிய விசயத்தை!

நல்லா இருக்கு கதை குறளுக்கு பொருத்தமாய்....!

நட்புடன் ஜமால் said...

புதிய முயற்சி - வெற்றி.

அமுதா said...

நன்றி ஜமால்.
நன்றி ஆயில்யன்.
அப்பாடா கும்மி அடிக்காமல் தப்பிச்சுட்டேனா... அப்ப ஓகே தான் போல :-)

அ.மு.செய்யது said...

சூப்பர்ங்க..புதுசா இருக்கு..ஆனா நல்லா இருக்கு

ஸ்ரீதர்கண்ணன் said...

Superunga... Good One.

அமுதா said...

நன்றி அ.மு.செய்யது
நன்றி ஸ்ரீதர்கண்ணன்

ராமலக்ஷ்மி said...

நன்றி மறப்பது நன்றன்று.

அருமை அமுதா. இதை பேரண்ட்ஸ் க்ளப் குறள் கதை வங்கியில் சேர்த்திடலாமா சொல்லுங்கள்!

அமுதா said...

நன்றி மேடம்.

/*இதை பேரண்ட்ஸ் க்ளப் குறள் கதை வங்கியில் சேர்த்திடலாமா சொல்லுங்கள்!*/
புதுகை தென்றலிடம் கருத்து கேட்டுள்ளேன்.

S.A. நவாஸுதீன் said...

நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் எழுத்துலக பயணம்.

S.A. நவாஸுதீன் said...

நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் எழுத்துலக பயணம்.

pudugaithendral said...

பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி.//

அருமையான வரிகள்.

பாராட்டுக்கள். கதை நல்லாயிருக்கு. திருக்குறள் கதைகள் லிஸ்டில் சேத்திடலாமா?

அமுதா said...

நன்றி சையத்.

/*பாராட்டுக்கள். கதை நல்லாயிருக்கு. திருக்குறள் கதைகள் லிஸ்டில் சேத்திடலாமா?*/
நன்றி புதுகை தென்றல். கண்டிப்பா சேர்த்துடுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ///

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க
அமுதா....

வாழ்த்துக்கள் இது போன்ற முயற்சி மேலும் தொடர........,,

குடந்தை அன்புமணி said...

1330 கதைகள் எழுதலாம் போலிருக்கே...வாழ்த்துகள் சகோதரி!

Kavinaya said...

ரொம்ப எளிமையாவும் அழகாவும் சொல்லிட்டீங்க.

Govindaraj said...

நல்லா இருக்கு கதை. Good to continue

Anonymous said...

கதையை வாசித்து முடிக்கையில் கண்ணீர் எட்டிப்பார்த்தது...நன்றி.

மட்டகளப்பிலிருந்து சதீஸ்...