என் மேகம் ???

Thursday, December 21, 2006

என் நட்சத்திரங்கள்

என் நிலவுகளின் ஒளியில் துளிர்த்த நட்சத்திரங்கள்...

பூக்களின் அழகை இரசித்தேன்
மென்மையை ஸ்பரிசித்தேன்
வாசத்தை சுவாசித்தேன்
மலர்ச்சியை அதிசயித்தேன்
இவற்றை மிஞ்சியது இல்லை என்றெண்ணினேன்
நீ என் மடியில் பூக்கும் வரை...

கடவுளுக்கு நான் படைத்த மலர்களை
பூமாலையாக்கி எனக்கே தந்தார்...
நீ பிறந்தாய்...

விண்ணில் உலவும் நிலவை
எட்டிப் பிடிக்க னினைத்தேன்
என் வாழ்வின் நிலவாக
நீ வ்ந்தாய்,,,

பூக்களின் வாசத்தில் மயங்கிய காலம் கடந்து விட்டது
உன் உச்சி முகர்ந்து முத்தமிடுவது தான் நிஜம்...

உலகில் ஏழு அதிசயங்களாம்...
ஒரு குழந்தையின் செயல்களை விடவா?

அதிகாலை பனித்துளி போல்
தூய்மையாக நீ துளிர்த்த பின் தான்
ஆதவனைக் கண்ட மலரின் மலர்ச்சி என்னிடம்...

தோட்டத்தில் வேடிக்கை காட்ட
பூவைப் போல் உனை சுமந்து
ஒரு இளமாலைப் பொழுதில்
புல்வெளியில் கால் பதித்தேன்
ரோஜா மலரை நீ தொட்டாய்
கையின் மென்மையை உணர்ந்த ரோஜா
வெட்கி தோற்று உதிர்ந்து கொண்டது
செவ்வந்தியைக் கண்டு நீ சிரித்தாய்
செங்கதிரோன் வெட்கி மறையத் தலைப்பட்டான்
குயிலும் கிளியும் பாட மறந்து
உன் மழலையில் திளைத்தன
தென்றல் நிற்கவே இல்லை
உனைத் தொட்டு தொட்டு சிலிர்த்தது
நிலவென்று எண்ணி உனை மேகம் கவர்ந்திடுமன
உள்ளே செல்லத் திரும்பினேன்
அனைத்து உயிர்களும் கேட்டன
பூந்தோட்டத்தை ஏன் சுமந்து செல்கிறாய் என...

பூக்கள் மென்மை என்றிருந்தேன்
உனைத் தொடும் வரை...
இசை இனிமை என்றிருந்தேன்
உன் மழலை கேட்கும் வ்ரை...
நடனத்தை இரசித்துக் கொண்டிருந்தேன்
உன் அசைவுகளைக் காணும் வரை...

5 comments:

சேதுக்கரசி said...

அழகான கருத்துக்கள். கொஞ்சம் செதுக்கி, செறிவான வடிவமாக்கலாம்.

கமெண்ட் மாடரேஷன் செய்து, தமிழ்மண உதவிப் பக்கம் சென்று மறுமொழி நிலவரம் தெரியச் செய்யலாமே.

Anonymous said...

//உலகில் ஏழு அதிசயங்களாம்...
ஒரு குழந்தையின் செயல்களை விடவா?//

ரொம்ப நல்லாருக்கு அமுதா..ரொம்ப ரசிச்சி எழுதறீங்க!!

வாழ்த்துக்கள்!

-முல்லை

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் உங்க பதிவு வந்துடுச்சுன்னு பார்த்தேன். வாழ்த்துக்கள். மறுமொழி நிலவரம் தெரியவும் செஞ்சிட்டீங்கன்னா முடிஞ்சது வேலை.

ராமலக்ஷ்மி said...

//பூக்கள் மென்மை என்றிருந்தேன்
உனைத் தொடும் வரை...
இசை இனிமை என்றிருந்தேன்
உன் மழலை கேட்கும் வ்ரை...
நடனத்தை இரசித்துக் கொண்டிருந்தேன்
உன் அசைவுகளைக் காணும் வரை...//

அற்புதம்.

தமிழ் said...

/உலகில் ஏழு அதிசயங்களாம்...
ஒரு குழந்தையின் செயல்களை விடவா?/

இன்று தான் படித்தேன்

அருமையான வரிகள்