என் மேகம் ???

Tuesday, December 8, 2009

நினைவுகள்

மார்கழி குளிரில்
கம்பளியின் கதகதப்பில்
அம்மாவின் அணைப்பு
மனதை இதமாக்கும்

சுட்டெரிக்கும் வெயிலில்
மரத்தின் குளிர் நிழலில்
அப்பாவின் அரவணைப்பு
தென்றலாக மனதைத் தீண்டும்

பெருமழையில் தெறித்த
மழைத்துளி ஒன்று
உன் முத்தத்தின் நினைவில்
மனதைக் கரைக்கும்

பூங்காற்றின் தீண்டலில்
மழலையின் ஸ்பரிசம்
மனம் தொட்டு
மீண்டும் மீண்டும் தழுவும்

பெருங்கூட்டத்தில் ஒட்டாமல்
தனித்து நிற்கையில்
உறவுகளின் நினைவுகள்
உறங்காமல் உடன் வரும்

வாடிச் சருகாக
எரியக் காத்திருக்கும் வேளையில்
உயிரோட்டமாக நினைவுகள்
உயிர் துடிக்க வைக்கும்...

14 comments:

ராமலக்ஷ்மி said...

உறங்காமல் உடன்வரும் உறவுகளின் நினைவுகளை சொல்லியிருக்கும் விதம் அருமை அமுதா.

புதுகைத் தென்றல் said...

அருமை அமுதா.

உறவுகளின் நினைவுகள் பத்தி இப்பத்தான் பதிவு போட்டேன்.

ஜீவன் said...

//சுட்டெரிக்கும் வெயிலில்
மரத்தின் குளிர் நிழலில்///

அருமை ...!

அடுத்து நானும் எழுதுகிறேன் ..!
மார்கழி நினைவுகளை...!
மேட்டர் கொடுத்ததுக்கு நன்றி...;;)

பூங்குன்றன்.வே said...

//பூங்காற்றின் தீண்டலில்
மழலையின் ஸ்பரிசம்
மனம் தொட்டு
மீண்டும் மீண்டும் தழுவும்//

மிகவும் ரசித்த வரிகள்.நல்லா இருக்கு !!!

நட்புடன் ஜமால் said...

பூங்காற்றின் தீண்டலில்
மழலையின் ஸ்பரிசம்
மனம் தொட்டு
மீண்டும் மீண்டும் தழுவும்]]

அழகு நினைவு.

-------------------

வடிகால் தேடுகையில் இது போன்ற பதிவுகளின் ‘நினைவுகள்’ இதமாய் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெருங்கூட்டத்தில் ஒட்டாமல்
தனித்து நிற்கையில்
உறவுகளின் நினைவுகள்
உறங்காமல் உடன் வரும்//
எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு அமுதா

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெருங்கூட்டத்தில் ஒட்டாமல்
தனித்து நிற்கையில்
உறவுகளின் நினைவுகள்
உறங்காமல் உடன் வரும்//
எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு அமுதா///


நான் இங்க அபபடியே ஸ்ட்ரக் ஆகி நிக்கிறேன்!

Sangkavi said...

//வாடிச் சருகாக
எரியக் காத்திருக்கும் வேளையில்
உயிரோட்டமாக நினைவுகள்
உயிர் துடிக்க வைக்கும்... //

உறவுகளைப்பற்றிய அழகான கவிதை அமுதா...........

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு

பின்னோக்கி said...

வழக்கம் போல அருமையான கவிதை.

" உழவன் " " Uzhavan " said...

நினைவுகள்தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. நல்லாருக்கு.

திகழ் said...

அருமை

அ.மு.செய்யது said...

அழகிய நினைவுகள்...கடைசி வரிகள் எதார்த்தம்.

Angamuthu Gurunathan said...

Nencham thotta ninaivugal