என் மேகம் ???

Wednesday, December 2, 2009

புத்தம் புது கவிதைகள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

வாசமாக வீட்டினுள் பரவியது
கணநேரம் மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்
வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்

சமைத்துக் கொண்டிருந்தேன் நான்
படித்துக் கொண்டிருந்தார் கணவர்
விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்
புத்தம் புது கவிதைகளை...

17 comments:

சந்தனமுல்லை said...

:-) ரசித்தேன்!

அப்புறம், கவிதைக்காக உங்களையும், கணவரையும் இடம் மாற்றியிருக்கிற உங்கள் குறும்பை மிகவும் ரசித்தேன்!! ;-)))

பூங்குன்றன்.வே said...

புது வித கற்பனை.மகள் மீது வைத்திருக்கும் பாசமும் புரிகிறது.
நல்ல கவிதை.

திகழ் said...

அருமை

/

கத்துக் குட்டியாய்க்
கவிதையில் கை வைத்தேன் !

பொங்கிய‌ பால்
போன‌ புகை...
கொதித்த‌ உலை...
வெடித்த‌ க‌டுகென‌...
க‌ண்ட‌தெல்லாம் க‌விதையான‌து !

க‌விதையின்ப‌ம‌றியாது இருந்திட்டோமே
இதுகாறுமென‌...
மாய்ந்து மருகியது ம‌ன‌ம் !
அடுப்பிலோ
பிடித்துக் க‌ருகிய‌ ம‌ண‌ம் !

படித்ததில் பிடித்த‌து...
வ‌டித்த‌தில் பிடித்த‌து என்று
க‌விதை ம‌ன‌ம் அசைபோட‌

- ‍‍‍ம‌ல‌ர்விழி இள‌ங்கோவ‌ன் க‌விதை

/

Mrs.Dev said...

//வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்//

குட்டி குட்டியா சுட்டிப் பாப்பாக்கள் சுத்தி வர மாதிரி கற்பனை பண்ணா சூப்பரா இருக்கு அமுதா இந்த வரிகள் .
:)

பின்னோக்கி said...

உங்களின் ஒரு கவிதை பறித்து வந்தது பல கவிதை :)

மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்

உங்களின் ட்ரேடுமார்க் வார்த்தை விளையாட்டு சூப்பர்.

MAHA said...

kavithai arumai

Sangkavi said...

//மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்//

படித்தேன், ரசித்தேன்.........

நல்ல கவிதை........

அரங்கப்பெருமாள் said...

குழந்தைகள்தான் நம் உலகம்.

அருமையானக் கவிதை. mrs.Dev சொன்னதையே நானும் சொல்ல விரும்புகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...
:-) ரசித்தேன்!

அப்புறம், கவிதைக்காக உங்களையும், கணவரையும் இடம் மாற்றியிருக்கிற உங்கள் குறும்பை மிகவும் ரசித்தேன்!! ;-)))

:))))))))))))))

ரசிக்கும்படியான கவிதை.

ராமலக்ஷ்மி said...

//ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று//

கவனிக்காமல் கடக்க முடியாது. நல்ல கவிதை அமுதா.

முல்லையின் கமெண்ட் இன்னொரு குட்டிக் கவிதை:))!

Deepa (#07420021555503028936) said...

அழகான கவிதை!
ராமலக்‌ஷ்மியை அப்படியே வழிமொழிகிறேன்.
;-)

கமலேஷ் said...

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்...

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

ரங்கன் said...

அழகான வரிகள்..
அன்பான அம்மா,
அழகு மகள்..

நல்ல கவிதை..!!

சக்தி த வேல்..! said...

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்

naan appavagum pothu naanum eluthuven ithaipol, aanal ithanai alaggaga? mudiumaa paarpom..!

Subbu Lr said...

migavum Arumaiyana varigal.

subbu

Subbu Lr said...

Azhagana varigal.. maranthuvitten iru nimidam uzhagathai...