வணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் பதிவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
தோழியின் மகள் கூறியுள்ளாள், "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது". சின்னவள் சொன்னாள் "அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்."
Jokes apart...
வீட்டிற்கு வந்தால், நந்தினியும் "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.
12 comments:
நல்ல விழிப்புணர்வு
குழந்தைகளுக்கும் வந்தது ரொம்ப சந்தோஷம் ...
இந்தப் புறக்கணிப்புதான் விழிப்புணர்வைக் கொண்டு வர முடியும்.
சின்னக் கைகளென்பது என்னவென சின்னவளுக்கு புரிய வைத்திருப்பீர்கள் இப்போது:)!
பாராட்டுக்கள்!!!
இனித்திருக்கட்டும் இனிய தீபாவளி திருநாள் :)
//வணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் பதிவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//
தோழமைக்கு வணக்கம்.. நலம் நலம் அறிய ஆவல்... நீங்கள் வராதது எங்களுக்கு ஏமாற்றமே... பல பதிவுகள் படிப்பதற்கு க்யூவில் உள்ளது... தயவு செய்து படியுங்கள்.. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
//தோழியின் மகள் கூறியுள்ளாள், "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது". சின்னவள் சொன்னாள் "அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்."//
நல்ல உயரிய சிந்தனை அந்த பிஞ்சு குழந்தைக்கு... அதை கவுண்டர் அட்டாக் பண்ணிய குட்டீஸ் டயலாக்கும் பளீச்...
//Jokes apart...
வீட்டிற்கு வந்தால், நந்தினியும் "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.//
அதே அதே... ஆனாலும் இன்னொன்று இருக்கு... யாருமே வாங்கவில்லை என்ற நிலையில், உற்பத்தி பாதித்து, அந்த வேலையும் போனால், அவர்களுக்கு அந்த காசும் கிடைக்காது, பின் சாப்பாட்டுக்கு என் செய்வார்கள்? இந்த கேள்வியும் எழுகிறது..
வாழ்த்துக்கள் அமுதா....
கிடைத்த இடைவெளியில் கொஞ்சமாக எழுதினாலும்,லேசாக கனக்க வைத்து விட்டீர்கள்.
"சின்ன கைகள்"......வருத்தங்களுடன் தீபாவளி நல்வாழ்த்துகள் !!!
நன்றி அமுதா..
//"அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய?//
:-)))
தங்களுக்கும் குட்டிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...
இவ்வளவு சின்ன வயதில் பெரிய சிந்தனைதான்.
கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தலாமென நினைக்கிறேன்.
great!!!
உங்களுக்கு விருது இங்கே!
http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html
அமுதா ரொம்ப நாட்களாகக் காணொம்.சுகம்தானே தோழி.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
குழந்தைகள் தாங்களாகவே முன்வந்து இப்படியான விஷ்யங்களை ஒதுக்குவதென்னபது பராட்டுக்குரியதே.
குழந்தைகளைப்போல பெரியவங்களும் விழித்துக்கொள்ளவேண்டும்???
nanri nanbarhale... konjam velai palu athikam... enave innum pathivulakam varavillai. ungkal anbukku nanrikal
Post a Comment