சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்லப்பட
பயணம் கொண்டது
உழைத்துக் கொண்டிருந்தோருக்கு
கதை சொல்லவோ கேட்கவோ
நேரமில்லை
உறங்கிக் கொண்டிருந்தோருக்கு
கனவில்கூட கதைக்கு
இடமில்லை
தொலைக்காட்சியில் கட்டுண்டோருக்கு
இந்த கதை கேட்க
விருப்பமில்லை
படித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு
கதை கேட்கவோ சொல்லவோ
அனுமதியில்லை
பயணித்துக் களைத்த கதையை
அம்மா அழைத்து
குழந்தைக்கு சொன்னாள்
எங்கோ...
சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்லப்பட
பயணம் கொண்டது
7 comments:
நல்லாருக்கு!
அருமை அமுதா. சொல்லப்படாத கதைகள் ஆயிரமாயிரமே. அதில் பயணம் கொண்ட ஒருகதையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆம் உலகின் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படாத கதை இருக்கலாம்
ஏன் ஒவ்வோர் மனிதனும் ஒரு சொல்லப்படாத கதை வைத்திருப்பான்...
கவிதை வெகு சிறப்புங்க..
அருமையான கவிதை. படித்த உடன் சிறிது நேரம் யோசிக்கவைத்தது.
நன்றி அருணா
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி வசந்த்
நன்றி பின்னோக்கி
நல்லா இருக்கு அமுதா..:)
Post a Comment