எல்லா முத்துக்களும்
முத்துமாலைக்கு செல்வதில்லை
பவழத்தோடு சேர்ந்து
பளபளத்துக் கொண்டிருக்கலாம்
வைரத்தோடு சேர்ந்து
நிறம் மங்கி தெரியலாம்
சரத்திலிருந்து அவிழ்ந்து
காணாமல் இருக்கலாம்
எடுக்கப்படாத முத்துக்கள்
கோர்க்கப்படாத முத்துக்கள்
என்று பார்வை மறுபாடுகள்
நம் கண்களுக்குத்தான்
எங்கே இருந்தாலும் முத்துக்கள்
முத்தான தனித்தன்மையுடன் தான் உள்ளன...
நிராகரிக்கப்பட்ட படாத
கவிதைகள் போலவே!!!!
11 comments:
//பவழத்தோடு சேர்ந்து
பளபளத்துக் கொண்டிருக்கலாம்//
இதோ 'என் வானத்தோடு' சேர்ந்து பளபளத்துக் கொண்டிருக்கும் இக்கவிதையினைப் போல..
கவிதையும் முடித்திருக்கும் விதமும் மனதைத் தொட்டன. அருமை அமுதா.
அழகு தமிழில் அழகாய் தொடுக்கப்பட்ட கவிதை அமுதா...
நல்லா இருக்கு....
முத்து முத்தான வார்த்தைகள்..அழகு.
அமுதா சுகம்தானே.நிறைய நாட்களாகக் காணோம்.
உங்கள் கவிதை இயல்பு.இயல்பும் இயற்கையும் என்றும் மாறாது.
பச்சோந்தி மனிதர்கள் போல இல்லை அவைகள்.
நவரத்ன கவிதை
அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
அருமை
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி கோபி
நன்றி பின்னோக்கி
நன்றி ஹேமா (நலமே!!! கொஞ்சம் வேலைப்பளு)
நன்றி விஜய்
நன்றி திகழ்
எங்கே இருந்தாலும் முத்துக்கள்
முத்தான தனித்தன்மையுடன் தான் உள்ளன... //
அழகா சொல்லியிருக்கீங்க!
அருமை .! பணிச்சுமை நீங்கி பார்முக்கு வந்துடீங்க போல ;;)
http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html
Please accept this gift from me with deep appreciation for your blog.
-vidhya
உங்களுக்கு ஓர் அழைப்பு
http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html
Post a Comment