இளம்வெயிலை அனுப்பி
புன்னகை பரப்பினான்
காலை இளஞ்சூரியன்
மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு
மென்மையாகக் கடந்தது
மெல்லிய இளங்காற்று
ஆனந்தத்தைத் தெளித்து
அள்ளச் சொன்னது
குழந்தையின் சிரிப்பு
எதையும் கவனிக்காமல்
இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்!!!
10 comments:
//எதையும் கவனிக்காமல்//
இதை இதை இதையேதான் நானும் அடிக்கடி வலியுறுத்தியபடி என் கவிதைகளில்..
//இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்//
அருமையான வரிகள்.
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்..இளஞ்சூரியன்றீங்களே அத நீங்க பார்த்திருக்கீங்களா ?? உண்மைய சொல்லனும் :)
மத்தபடி வழக்கம் போல கவிதை சூப்பர்.
ஆம் நீங்கள் சொல்வது உண்மை.
நெஞ்சை அள்ளும் சிரிப்போடு அள்ளத்தான் சொல்லும் குழந்தையின் சிரிப்பு.
கவிதை அருமை.
நல்ல வரிகள்...
வாழ்த்துக்கள்..
nice
உண்மை... வாழ்க்கை இப்படியேப் போகுதே...
எவ்வளவு உண்மை.
அருமை அருமை!
:)
அருமை
கவிதை நன்றாக இருந்தது
கையில வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையுற மாதிரியா.. நல்ல கருத்து
Post a Comment