கடந்த சில பதிவுகளை கிடைத்த நேரத்தில் அடித்து வைத்தேன். நன்றி சொல்வதை நிதானமாக எழுத வேண்டும் என்று எண்ணினேன். எனவே இந்த தாமதம். ஆனால், கடவுளுக்கு அவசரமாக நன்றி சொல்லும் நேரம் ஒன்று வந்த பொழுது, சொல்லாமல் வைத்துள்ள நன்றிகளை உடனே சொல்லத் தோன்றியது.
மீண்டும் மீண்டும் என்றாலும் எவர் மனதையும் மலரச் செய்வது அங்கீகாரம். இம்முறை மூன்று பேரிடம் இருந்து கிடைத்துள்ள வெவ்வேறு அங்கீகாரத்திற்கு நன்றிகள். எனக்கு விருது கொடுத்து ஆச்சர்யம் அளித்துள்ளார் ஜீவன்.
நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் கிருஷ்ணப்பிரபு, சற்றும் எதிர்பாரா நேரத்தில் எனது "சுட்டி உலகம்" வலைப்பதிவிற்கு அதே விருதை அளித்துள்ளார்.
சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் புதுகைத்தென்றல் "நட்புக்கு மரியாதை" கொடுத்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் அனைவருமே எனக்கு வலைப்பூ வழி அறிமுகம் ஆனவர்களே என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. சமீபத்தில் வாரமலரில் கதை ஒன்று படித்தேன். உதவிக்கு பிரதிபலனாக தேவைப்படுவோருக்கு உதவுமாறு ஒருவர் கூற, அந்த உதவி சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த விருது கொடுக்கும் மகிழ்ச்சியும் அப்படியே!!! கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள்.
சுவாரசியப் பதிவர் விருது 6 பேருக்குக் கொடுக்கவேண்டுமாம்.
இதோ...
புதுகைத்தென்றல் - பல வகை சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
பூந்தளிர் - தீஷுவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்கு சுவாரசியமாக கற்றுக்கொடுக்க உதவும் முறைகளும் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
நினைவின் விளிம்பில் - கவிநயா அவர்களின் எளிமையான இயல்பான எழுத்துக்கள் என்னை எப்பொழுதும் ஈர்க்கும்.
தமிழ் - தமிழின் சுவையை சுவாரசியமாக இவ்வலைத்தளத்தில் பதிவு செய்வார்
அரும்புகள் - சுட்டிகளுக்கான ஒரு சுவாரசியமான வலைதளம்
சிதறல்கள் தீபாவின் எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடிக்கும். மிகத் தெளிவாக அழகாக இருக்கும் இவரது பதிவுகள்
இனி "நட்புக்கு மரியாதை"
சந்தனமுல்லை - பதிவர் என்பதற்கு முன்பிருந்தே எனது தோழி
இராமலஷ்மி மேடம் - மின்னஞ்சல் வழியே மட்டுமே தொடர்புண்டு. அன்புடன் அவர் எனக்கு பல விதங்களில் ஊக்கம் அளித்துள்ளார்.
ஜீவன் - ஒவ்வொரு விருதும் இவரிடம் இருந்து பெறுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி.
அமிர்தவர்ஷினி அம்மா - வலை வழியாக மட்டுமே அறிந்து இப்பொழுது நன்கு அறிமுகமான நல்ல தோழி
அ.மு செய்யது - இவரது பின்னுட்டங்கள் நேரில் கூறுவது போல் இருக்கும். பின்னூட்டங்கள் வழி மட்டுமே அறிமுகம்.
நட்புடன் ஜமால் - யாருக்கு தான் இவர் நண்பர் இல்லை?
ஆதவா - சகோதரி என்று அழைத்து இவர் தனது விமர்சனங்களுடன் இவர் இடும் பின்னூட்டம் வழி மட்டுமே அறிமுகம். இந்தவார வலைச்சர ஆசிரியராக இருப்பதில் மகிழ்ச்சி.
ஆயில்யன் - அவ்வப்பொழுது வந்து கும்மி அடித்து கலகலப்பாக்குவதுடன் அடிக்கடி ப்ளாக்கர் பிரச்னைகளுக்கு எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து உதவுவார்.
"பூந்தளிர்" தியானாவும், "சிதறல்கள்" தீபாவும் வலை வழி அறிமுகமான நல்ல தோழிகள்
புதுகைத் தென்றலின் பதிவிலிருந்து :
"ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:
முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.
இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.
மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.
இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.
இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :
1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.
நீங்களும் உங்கள் நண்பருக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்"
16 comments:
இன்னுமா!.... கலக்குங்க
விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!! அமுதா !!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விருது(கள்) பெற்றமைக்கு வாழ்த்துகள்.
[[உதவிக்கு பிரதிபலனாக தேவைப்படுவோருக்கு உதவுமாறு ஒருவர் கூற, அந்த உதவி சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த விருது கொடுக்கும் மகிழ்ச்சியும் அப்படியே!!!]]
சிறப்பாக சொன்னீங்க.
விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
எம்மையும் இணைத்துள்ளீர்கள், நீங்கள் கொடுத்த விளக்கம் இன்னும் சந்தோஷத்தை தருகின்றது. நன்றிகள்
வாழ்த்துகள் சகோதரி குடுத்தவருக்கும்,பெற்றவர்களுக்கும்
:)
நன்றி அமுதா!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
நன்றி அமுதா..:-)
வாழ்த்துகள் விருது பெற்ற அனைவருக்கும்!!
விருது பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள்
நன்றி தோழி
தங்களின் அன்பிற்கு
அன்புடன்
திகழ்
விளையாட்டு தொடருதா!!
வாழ்த்துக்கள்!!
மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
aaha viruthu koduthirukeenga.
nandri
விருதுகளுக்கு வாழ்த்துகளுடன் அன்புக்கு மிக்க நன்றியும், அமுதா!
வாந்த்துக்கள்
விருதுக்கு நன்றி அமுதா
நட்புடன் தந்திருக்கும் விருதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அமுதா!
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இன்ப அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் சேர்ந்த கலவையாக இருக்கிறேன்.
:-(((
இவ்வளவு அன்பான பதிவையும் விருதையும் இவ்வளவு நாள் பார்க்காம இருந்துட்டேனே...
:-(
தோழீ!
நன்றி...நன்றி...நன்றி!
Post a Comment