என் மேகம் ???

Wednesday, July 1, 2009

என்னோட ராசி என்ன ராசி?

காலையில் வானொலியில் இராசி பலன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ நந்தினி வந்து அவள் இராசி என்ன என்று கேட்டாள். எங்க வீட்டு இராசி பலன் காமெடி:

நந்தினி : நான் என்ன இராசி?
நான் : லியோ
நந்தினி : அப்படீனா?
நான் : சிங்கம்
நந்தினி: உர்.... நான் சிங்கம்.
நான்: தமிழ்ல வேற இராசி வரும். தராசுனு நினைக்கிறேன்
நந்தினி: தராசுனா என்ன மிருகம்?
நான்: ???

யாழினி: நான் என்ன இராசி?
நான்: ஏரிஸ் - ஆடு
யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
நான்: ??? (விவேக்கோட காக்கா பிரியாணி காமெடி நினைவுக்கு வந்தது)

இதில் சிங்கம் ஆட்டை வெல்லும் என்று வேறு ஒரு சண்டை. நான் சொன்னேன் "இது மலை ஆடு, சிங்கத்துக்கு ஈடு கொடுத்து சண்டை போடும் தெரியுமா?". வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா?

14 comments:

தமிழ் said...

/யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
நான்: ??? (விவேக்கோட காக்கா பிரியாணி காமெடி நினைவுக்கு வந்தது)/


எனக்கும் தான்

:))))))))))))))))))))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா ...

"உழவன்" "Uzhavan" said...

:-))))

அ.மு.செய்யது said...

அட இங்கேயும் ராசி பலனா ??

கியூட் அப்ச‌ர்வேஷ‌ன்ஸ்.

pudugaithendral said...

:))))))))))

தமிழ் அமுதன் said...

//நந்தினி : நான் என்ன இராசி?
நான் : லியோ
நந்தினி : அப்படீனா?
நான் : சிங்கம்//

எனக்கு ''தூள்'' படத்துல ''பறவை முனியம்மா'' காமடிதான் நினைவுக்கு வந்தது!

ப்ரியமுடன் வசந்த் said...

:-)

ராமலக்ஷ்மி said...

//வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா?//

கண்டிப்பா:))))!

ஊர்சுற்றி said...

//யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...//

நல்ல தமாசு போங்கள்..... :)

Deepa said...

//நந்தினி: தராசுனா என்ன மிருகம்?//

//யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
//

:-))) ரொம்ப ரசித்தேன்!

Vidhya Chandrasekaran said...

யாழினி யோசித்து யோசித்து ராகத்துடன் பாடியது இன்னும் நினைவிலிருக்கு அமுதா. நந்தினியின் பொறுப்பும் பிரமிக்க வைத்தது. ரியலி க்யூட். சுத்திப் போடுங்க இராஜகுமாரிகளுக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட அட அட யாழ் !!!

அதுவும் யாழை மனசுல கொண்டு வந்து அந்த டயலாக் படிச்சோம்னா, இன்னும் இனிக்கிறது.

க்யூட் யாழ், குட் நந்தினி. :)-

Admin said...

அருமை, அருமை......

நம்ம வலைப்பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...

kanagu said...

/*வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா? */

ஹா ஹா ஹா.. உண்மையிலேயே கஷ்டம் தான் :)