என் மேகம் ???

Wednesday, June 17, 2009

இயற்கைக்கு என்ன விலை?





மு.கு


- உலகம் தோன்றிய பொழுது சுற்றுசூழலில் ஆக்ஸிஜன் கிடையாது


- கிட்டதட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுற்றுசூழலில் 0.01% ஆக்ஸிஜன் இருந்தது. 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் 0.1% ஆக உயர்ந்தது.

- மனிதன் உயிர் வாழ சுற்றுசூழலில் 7% ஆக்ஸிஜன் என்பது குறைந்தபட்ச தேவை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 17-18% ஆக்ஸிஜன் தேவை

- ஒரு காலத்தில் 36-38% வரை ஆக்ஸிஜன் இருந்துள்ளது. இந்த உயர்ச்சிக்கு காரணம் தாவரங்கள். தற்பொழுது சுற்றுசூழலில் 20-21% ஆக்ஸிஜன் உள்ளது. அதாவது நாம் கிட்டதட்ட 50% சதவீதம் ஆக்ஸிஜனை அழித்துள்ளோம். சில நகரங்களில் சில தொழிற்சாலை இடங்களில் இது 9% சதவீதமாகக் கூட உள்ளது

- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 53லிட்டர் ஆக்ஸிஜன் சுவாசிப்பின் மூலம் தேவைப்படுகிறது. சராசரியாக ஓர் இலையால் 5மில்லி ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்

- நன்கு விளைந்த இரண்டு மரங்களால் நான்கு உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு ஓராண்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொடுக்க முடியும்

- 26000 மைல் ஓடும் கார் கக்கும் கார்பனை ஒரு மரத்தால் ஒரு வருடத்தில் உறிஞ்சிக்கொள்ள முடியும்

(மேற் கூறிய தகவல்கள் : இணையம்)



நீர், உணவு, காற்று நமது அத்தியாவசிய தேவைகள்; இயற்கை நமக்கு அள்ளிக் கொடுக்கும் விலைமதிக்க முடியாத செல்வங்கள். இப்பொழுது பார்த்தால் நாம் ஒவ்வொன்றுக்கும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நீர்
நகரங்களில் ஏற்கனவே குடிநீர் என்றால் மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. வீட்டிற்கொரு மினரல் வாட்டர் கேனோ, அல்லது மினரல் வாட்டராக்கும் சாதனமோ இருக்கின்றது. அதாவது இயற்கையாக சுத்தமான குடிதண்ணீர் காசு கொடுத்தாலும் கிடைக்குமா என்று தெரியவில்லை.

உணவு
இயற்கை உரத்துடன் மட்டுமே வரும் விளைச்சல்களை "ஆர்கானிக்" என்று விற்கிறார்கள். இதன் விலை சாதாரண விளைபொருட்களை விட மூன்று மடங்கு. ஆக நல்ல இயற்கை உணவு வேண்டுமென்றால் நிறைய காசு கொடுக்க வேண்டும்

காற்று
காற்றை நாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் கேட்ட செய்தி நல்ல "ஆக்ஸிஜன்" சுவாசிக்க வேண்டுமெனில் ஆக்ஸிஜன் பார்லர் உண்டு. நீங்கள் கொடுக்கும் காசைப் பொறுத்து சில மணி நேரம் ஆக்ஸிஜனை விரும்பும் மணத்துடன் சுவாசிக்கலாம். அப்படி எனில் நல்ல சுவாசிப்பும் இப்பொழுது காசுக்கு கிடைக்கிறது.


நம் முன்னோர்கள் நமக்கு உணவு பயிரிட நிலமும், பயன் தரும் நல்ல மரங்களும், நல்ல நீர்நிலைகளும் விட்டுச் சென்றார்கள். நாம் எல்லாவற்றையும் அழித்து ஃப்ளாட்டாக்கி காசாக்கி விட்டு, காசு கொடுத்து இயற்கையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.


ஒரு மரமாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள். கொஞ்சமேனும் நல்ல காற்றை சுவாசிக்க முயல்வோம்.

15 comments:

ஆயில்யன் said...

//ஒரு மரமாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள். கொஞ்சமேனும் நல்ல காற்றை சுவாசிக்க முயல்வோம்.///


நாம் நம் தலைமுறைகளுக்கும் நமக்கு அடுத்து வருகின்ற தலைமுறைகளுக்கும் கட்டாயம் வற்புறுத்தி செய்ய சொல்லவேண்டிய பணிகளில் முதன்மையானது !
மரம் நடுதல் !

Dhiyana said...

மிகவும் பயனுள்ள பதிவு அமுதா.

//உலகம் தோன்றிய பொழுது சுற்றுசூழலில் ஆக்ஸிஜன் கிடையாது//

புதிதாக தெரிந்து கொண்டேன்.

நட்புடன் ஜமால் said...

பச்சை நிறமே, பச்சை நிறமே


நல்ல விடயங்கள் தாங்கள் சொல்லியிருப்பது.

மரம் நடுவோம் ...

அ.மு.செய்யது said...

//நீங்கள் கொடுக்கும் காசைப் பொறுத்து சில மணி நேரம் ஆக்ஸிஜனை விரும்பும் மணத்துடன் சுவாசிக்கலாம். //

குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையைப் போல,
சுவாசிக்கும் காற்றுக்கும் காசு என்ற நிலை வருங்காலத்தில் மிகச் சாதாரணமாகி விடும்
அபாயத்தில் தான் நாமனைவரும் இருக்கிறோம் என்ற நிதர்சனத்தை எடுத்துரைக்கும் பதிவு.

pudugaithendral said...

//ஒரு மரமாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள். கொஞ்சமேனும் நல்ல காற்றை சுவாசிக்க முயல்வோம்.///

அழகாச்சொல்லியிருக்கீங்க. கண்டிப்பா செய்வோம்.

தொடர்பதிவு போட்டு கூப்பிடறோமே அதுமாதிரி ஆளுக்கொரு செடி தொட்டியிலே நட்டு அதைபடம்பிடிச்சு பதிவிடுங்கன்னு தொடர்பதிவு போட்டா, பதிவு போடலாம், பதியம்போட்டு செடியும் நடலாம்ல.

(என்னவோ தோணிச்சு சொன்னேன்)

அமுதா said...

ஆயில்யன் said...
/*நாம் நம் தலைமுறைகளுக்கும் நமக்கு அடுத்து வருகின்ற தலைமுறைகளுக்கும் கட்டாயம் வற்புறுத்தி செய்ய சொல்லவேண்டிய பணிகளில் முதன்மையானது !
மரம் நடுதல் !*/
ஆமாம் ஆயில்யன். எங்கம்மா நந்து, யாழ் பிறந்த பொழுது அவர்கள் நினைவாக மரம் நடச் செய்தார்கள்.

நன்றி தியானா
நன்றி ஜமால்
நன்றி செய்யது

அமுதா said...

புதுகைத் தென்றல் said...
/அழகாச்சொல்லியிருக்கீங்க. கண்டிப்பா செய்வோம்.

தொடர்பதிவு போட்டு கூப்பிடறோமே அதுமாதிரி ஆளுக்கொரு செடி தொட்டியிலே நட்டு அதைபடம்பிடிச்சு பதிவிடுங்கன்னு தொடர்பதிவு போட்டா, பதிவு போடலாம், பதியம்போட்டு செடியும் நடலாம்ல.

(என்னவோ தோணிச்சு சொன்னேன்)*/
நல்ல கருத்து புதுகை தென்றல். முத்துலட்சுமி கூட தோட்டம் பற்றி ஒரு பதிவு போட்டு, தோட்டம் இருக்கிறவங்க போடுங்கனு சொன்னாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஒரு மரமாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள்.

எங்க வீட்டுல மரமும் இருக்கு, செடியும் இருக்கு.
அமித்து மேடம், அவங்க தாத்தா குட போய் செடிக்கு தண்ணி ஊத்துவாங்க.
:)-

சந்தனமுல்லை said...

மிகவும் பயனுள்ள பதிவு அமுதா!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான தகவல்கள் மட்டுமல்ல.. எச்சரிக்கையூட்டும் பதிவு.
எப்போதோ எழுதியவைகளில் நாலு வரிதான் இப்பொது ஞாபகத்திற்கு வருகிறது.

காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு

அன்புடன்
உழவன்

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு கருத்துனாலும்

ஒரொ ஆயிரம் கோடி கருத்துகளுக்கு சமம்

வாழ்த்துக்கள் அமுதா

ஆனந்தன் said...

அருமையான தகவல்கள் இயற்கையை காப்பது நமது தலையாய கடமை .

மரம், செடி, கொடிகள் மற்றும் காடுகள் பற்றிய புதிய வலைப்பூ விரைவில்..,

http://pasumaiulagam.blogspot.com/


எனது மற்றொரு தளம்
http://tamiloodagam.blogspot.com/

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள். //
இல்லைன்னா வால் பேப்பர்/ஸ்கீன்சேவராவாது செட் பண்ணுங்கப்பா. எப்படியோ மழை பெய்ஞ்ச சரி..

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு! ''சூரிய ஒளி'' ''நிலவொளி'' ஏதும் விற்பனைக்கு வராமல் இருந்தால் சரி!