என் மேகம் ???
Tuesday, March 31, 2009
தித்திக்கும் முத்தம்...
மழலை பொழிந்தது முத்தமழை
மனதுள் உருவானது பனிமலை
உன் பறக்கும் முத்தத்தில்
நிறமிழந்தது வண்ணத்துப் பூச்சி
உன் முத்தத்தின் ஈரத்தில்
வறண்டது மனதின் வறட்சி
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
பாரதியின் வரிகள் உயிர் பெறுகின்றன
உன் முத்தத்தின் குளிர்ச்சியில்
ஐஸ்க்ரீமாக உருகியது மனம்
தித்திக்கும் முத்தத்தின் இனிப்பில்
தித்திப்பை இழந்தது குலாப்ஜாமூன்
உன் முத்தம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
உன்மத்தம் ஆகிறது மனம்
ரோஜாவிற்கு மழலை முத்தம்
மலர்களுக்குள் இப்பொழுது யுத்தம்
நூறுமுறை கிடைத்தாலும்
போதும் என்று கூறிடாது மனம்
மீண்டும் உன்னை சீண்டுகிறேன்...
மன்னிப்பாக நீ கேட்பது முத்தமல்லவா?
அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பெற்றாலும்
அடங்கவில்லை ஆசை
உன் முத்தத்தின் இதத்தில்
மறந்து போனது மனக்கவலை
உன் முத்தத்தின் குளிர்ச்சியில்
மனப்பூக்கள் பூக்கின்றன
தென்றலாக உன் முத்தம்
பூவானது என் மனம்
அன்பாக ஆசையாக
வெற்றியின் பரிசாக
தவறுக்கு மன்னிப்பாக
கோபத்திற்கு தண்மையாக
வலிக்கு இதமாக
என எந்த காரணத்திற்கு
கொடுத்தாலும் பெற்றாலும்
தித்திக்கும் மழலை முத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கவிதையும் தித்திக்கிறது அமுதா.
வாழ்த்துக்கள்.
\\உன் முத்தம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
உன்மத்தம் ஆகிறது மனம்\\
அருமை.
குழந்தை ந்னாலே ஒரே குஷிதான் அதுவும் முத்தத்தின் ஆழம்
அருமையான வரிகள்
ஆகா..தித்திக்கும் கவிதை!
//மீண்டும் உன்னை சீண்டுகிறேன்...
மன்னிப்பாக நீ கேட்பது முத்தமல்லவா?//
வெகு அழகு...
//அன்பாக ஆசையாக
வெற்றியின் பரிசாக
தவறுக்கு மன்னிப்பாக
கோபத்திற்கு தண்மையாக
வலிக்கு இதமாக
என எந்த காரணத்திற்கு
கொடுத்தாலும் பெற்றாலும்//
அழகா டிபைன் பண்ணிட்டீங்க!
//உன் முத்தத்தின் ஈரத்தில்
வறண்டது மனதின் வறட்சி//
..............அருமை!
உன் எச்சில் பட்ட நேரங்களெல்லாம் நான் எங்கிருந்தேனென்று எனக்கே தெரியவில்லை!!!! இப்படிக்கு அம்மா!!!!
கண்ணிகளாக கவிதை.... அழகானது!!! !! அம்மா கவிஞர் என்றே உங்களை அழைக்கலாம் போல இருக்கே!!! உங்கள் குழந்தை கொடுத்து வைத்தவர்!!!!
வாழ்த்துகள்!
/
நூறுமுறை கிடைத்தாலும்
போதும் என்று கூறிடாது மனம்
மீண்டும் உன்னை சீண்டுகிறேன்...
மன்னிப்பாக நீ கேட்பது முத்தமல்லவா?
அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பெற்றாலும்
அடங்கவில்லை ஆசை
உன் முத்தத்தின் இதத்தில்
மறந்து போனது மனக்கவலை
உன் முத்தத்தின் குளிர்ச்சியில்
மனப்பூக்கள் பூக்கின்றன
தென்றலாக உன் முத்தம்
பூவானது என் மனம்
/
அருமை
வாழ்த்துகள்
ரசித்து ரசித்து பெற்ற முத்தத்தை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது.
Post a Comment