என் மேகம் ???

Saturday, March 21, 2009

தீராத ஏக்கங்கள்



கொடுக்காத முத்தங்கள்
மிச்சம் இருக்கின்றன

ஆடாத விளையாட்டுக்கள்
நிறைய இருக்கின்றன

தேவதை கதைகள்
இன்னும் கேட்க இருக்கின்றன

பால்யத்தைக் கவர்ந்து
சென்றது காலம்



சிந்தாத சிரிப்புகள்
சிதறிக் கிடக்கின்றன

காணாத கனவுகள்
கண்ணுள் நிற்கின்றன

சொல்லாத இரகசியங்கள்
பூட்டிக் கிடக்கின்றன

இளமையைக் கவர்ந்து
சென்றது காலம்




கேட்காத கேள்விகள்
மனதுள் சுழல்கின்றன

புரியாத நிகழ்வுகள்
நிறைய இருக்கின்றன

ஆறாத காயங்கள்
இரணமாக உள்ளன

வாழ்க்கையைக் கவர்ந்து
சென்றது காலம்



வாழாத தருணங்களை எண்ணி
வாழ்ந்த வாழ்க்கையை மறந்த
தீராத ஏக்கதோடு நோக்கினேன்
முடிந்து போன வாழ்க்கையை...

(படங்கள்: இணையம்)

8 comments:

ஆ.சுதா said...

கவிதையில் ஏக்கம் உள்ளது

//கொடுக்காத முத்தங்கள்
மிச்சம் இருக்கின்றன//

//சொல்லாத இரகசியங்கள்
பூட்டிக் கிடக்கின்றன//

இவ்விரு வரிகளும் நல்லாருக்கு

நட்புடன் ஜமால் said...

ஏக்கங்கள் தீருவதில்லை
தீர்ந்ததுமில்லை

தமிழ் அமுதன் said...

ஏக்கங்கள்! இயலாமையில் ஏற்படுமா ?
போனது போகட்டும்,எதிர்காலத்தில் எந்த ஏக்கத்தையும்
மிச்சம் வைக்காமல்,வர இருக்கும் காலங்களை முழுமையாக
ஆட்கொள்ளலாம்!!!

ராமலக்ஷ்மி said...

தீராத ஏக்கங்கள்தான் எத்தனை எத்தனை. அருமை அமுதா, குறிப்பாக இந்த வரிகள்:
//வாழாத தருணங்களை எண்ணி
வாழ்ந்த வாழ்க்கையை மறந்த
தீராத ஏக்கதோடு நோக்கினேன்
முடிந்து போன வாழ்க்கையை...//

அமுதா said...

நன்றி முத்துராமலிங்கம்

/*நட்புடன் ஜமால் said...
ஏக்கங்கள் தீருவதில்லை
தீர்ந்ததுமில்லை*/
நன்றி ஜமால்... உண்மைதான், ஆனால் ஏக்கங்கள் மட்டுமே இருக்கக்கூடாது.



/* ஜீவன் said... போனது போகட்டும்,எதிர்காலத்தில் எந்த ஏக்கத்தையும்
மிச்சம் வைக்காமல்,வர இருக்கும் காலங்களை முழுமையாக
ஆட்கொள்ளலாம்!!!*/
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நன்றி

/*ராமலக்ஷ்மி said...
அருமை அமுதா, குறிப்பாக இந்த வரிகள்:...*/
நன்றி மேடம். தீராத ஏக்கங்கள் பற்றி மட்டுமே நாம் நினைத்தால் வாழ்வு முடிந்த பிறகும் தீராத ஏக்கம் தான் மிஞ்சும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கேட்காத கேள்விகள்
மனதுள் சுழல்கின்றன

புரியாத நிகழ்வுகள்
நிறைய இருக்கின்றன

ஆறாத காயங்கள்
இரணமாக உள்ளன

வாழ்க்கையைக் கவர்ந்து
சென்றது காலம்

அருமை அமுதா

முடிவில் ஒரு பெரிய பெரூமூச்சுதான் வெளிப்படும்.

நமக்கான குறைந்த பட்ச வாழ்க்கை நமக்கு பிடித்த வாசிப்பிலும், அவ்வப்போது எழுதுவதிலுமே இறுதியாக தொக்கி நிற்கிறது.

ஹேமா said...

அமுதா,எங்களுக்காகக் காலம் காத்திருப்பதே இல்லை.எந்த விஷயத்தையும் தாமதிக்காமல் உடனே செய்துவிடுவது நல்லது.அதைச் சொன்ன விதம் அழகு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:}
:)