என் மேகம் ???

Tuesday, March 24, 2009

மறந்த நாள்...

மெய்யோடு இருந்த பொழுது
நினைவுக்கு வந்ததில்லை
பிறந்த நாள்...

நினைவுகள் மட்டுமே மெய்யாகிப் போன
இந்த பொய்யான வாழ்க்கையில்...

மெய்யான பிறந்த நாளும்
பொய்யான பிறந்த நாளும்
மறவாமல் நினைவிற்கு வருகிறது

பிறந்த நாளும்
மறைந்த நாளும்
என்றும் மறவா நாளாக
இதயம் கனக்கிறது...

8 comments:

நட்புடன் ஜமால் said...

\\நினைவுகள் மட்டுமே மெய்யாகிப் போன
இந்த பொய்யான வாழ்க்கையில்...
\

அருமை ...

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

" உழவன் " " Uzhavan " said...

மெய், பொய்யினு போட்டு, அப்படியே வார்த்தைகளை வச்சி விளையாடிருக்கீங்க.. ஆனா நமக்குதான் ஒன்னுமே புரியல :-)

ஆயில்யன் said...

//பிறந்த நாளும்
மறைந்த நாளும்
என்றும் மறவா நாளாக
இதயம் கனக்கிறது//

உண்மைதான்! எனக்கு மாத மாதம் வரும் ஒரு தேதி கூட டக்கென்று என் பாட்டியின் இறந்த நாளினை நினைவுப்படுத்தும் :((

ராமலக்ஷ்மி said...

அழகாய் சொல்லிவிட்டீர்கள் அமுதா.

ஆதவா said...

நல்லா இருக்குங்க..

/////
பிறந்த நாளும்
மறைந்த நாளும்
என்றும் மறவா நாளாக
இதயம் கனக்கிறது...////

மறக்க முடிவதில்லை, சில நாட்களை!!

ஹேமா said...

சில நினைவின் நாட்கள் வராமலே போகலாம்.