என் மேகம் ???

Wednesday, February 18, 2009

நமக்கான நேரம் ...



காலை நேரத்து பரபரப்பில்
காணாமல் போனதோ?

அலுவல்களின் தீவிரத்தில்
அமிழ்ந்து போனதோ?

மாலை நேரத்து அலுப்பில்
மறைந்து போனதோ?

பொழுது முடிந்த அயற்சியில்
பொய்த்துப் போனதோ?

வாழ்க்கையின் சலிப்போ?
வருடங்கள் தந்த அலுப்போ?

என்று எண்ணங்களின் நடுவே
வந்தது ஒரு நாள் பிரிவு

நம் இருப்பை மட்டுமே
யாசித்த இதயங்கள்
பறைசாற்றின நம் காதலை...

நமக்கான நேரம் பத்திரமாய்...
நம் நெஞ்சோடு உள்ளது
எங்கும் போகவில்லை
என்ற புரிதலோடு

மீண்டும் தொடங்கியது
சுறுசுறுப்பான காலை

14 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறது கவிதை.
வாழ்த்துக்கள் அமுதா.

அ.மு.செய்யது said...

//நமக்கான நேரம் பத்திரமாய்...
நம் நெஞ்சோடு உள்ளது
எங்கும் போகவில்லை
என்ற புரிதலோடு//

அருமைங்க‌....ர‌சித்தேன் இவ்வ‌ரிக‌ளை..

அப்துல்மாலிக் said...

வரிகள் அழகு
யதார்த்தம்

ஆதவா said...

அடடே!!!! இது ஒரு நல்ல கோணம்.. கவிதை நல்லா இருக்குங்க.... இப்ப ஓட்டு போட்டுட்டு போறேன்.. விமர்சனம் நாளைக்கு!!

நட்புடன் ஜமால் said...

\\நம் இருப்பை மட்டுமே
யாசித்த இதயங்கள்
பறைசாற்றின நம் காதலை...\\

இரசித்தேன் ...

pudugaithendral said...

அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறது கவிதை.
வாழ்த்துக்கள் அமுதா.//

ரிப்பீட்டுக்களுடன்

மனமார்ந்த பாராட்டுக்கள் அமுதா.

பாச மலர் / Paasa Malar said...

கிட்டத்தட்ட இந்த மாதிர் யோசிச்சிட்டிருந்தேன்..அதே நேரம் உங்க கவிதை படிக்க நேர்ந்தது..ஒரு தைரியமும் வந்து..நல்லா இருக்குங்க.

ஆதவா said...

பிரிவுக்குப் பிறகு, பிரிவின் பிரிவு!! (ஓவரா குழப்பறேனா?)

நாட்கள் கழிந்தாலும், காதலில் மட்டும் அது கழிவதே இல்லை.... அதனால்தான் நமக்கான நேரம் பத்திரமாய்  எங்கும் போகாமல் இருக்கிறது,

கவிதை பாராட்டும்படி எக்குறையுமின்றி இருக்கிறது சகோதரி.... தொடர்ந்து எழுதுங்கள்

தமிழ் அமுதன் said...

எதார்த்த வாழ்க்கையின் பரபரப்பில், நீங்கள் இப்படி நுட்பமாகவும்,நுணுக்கமாகவும்
யோசிப்பது! உங்கள் மீது ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது!!

தமிழ் said...

/காலை நேரத்து பரபரப்பில்
காணாமல் போனதோ?

அலுவல்களின் தீவிரத்தில்
அமிழ்ந்து போனதோ?/

கவிதையைப் படிக்கையில் ஒரு
கலவரம் ஏற்பட்டது.

/நமக்கான நேரம் பத்திரமாய்...
நம் நெஞ்சோடு உள்ளது
எங்கும் போகவில்லை
என்ற புரிதலோடு

மீண்டும் தொடங்கியது
சுறுசுறுப்பான காலை/

படித்து முடிக்கையில் ஒரு
புரிதல் தெரிந்தது

அருமையான வரிகள்

வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நமக்கான நேரம் பத்திரமாய்...
நம் நெஞ்சோடு உள்ளது
எங்கும் போகவில்லை
என்ற புரிதலோடு//

ரொம்ப ஆழமான உண்மை அமுதா

ஹேமா said...

அமுதா,பிரிவின்போதுதான் காதலின் இருப்பு அழுத்தமாய் அதிகமாய்த் தெரியும்.அனுபவ உண்மை.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்

"உழவன்" "Uzhavan" said...

அருமை! வாழ்த்துக்கள்!!

//வந்தது ஒரு நாள் பிரிவு//

மீண்டும் சேர்ந்தார்களா? இல்லை நினைவுகளோடுதான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறதா?

உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com