என் மேகம் ???

Thursday, February 12, 2009

கற்றுக்கொடுங்கள்... கற்றுக்கொள்ளுங்கள்...

குழந்தைகளின் குணநலன்கள் அமைவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. என்னை யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

யோசிப்போமா பெற்றோர்களே...?
என் மகள் என்னிடம் அவள் தோழி அடிக்கடி தன் ஆசிரியருக்கு ஒன்றும் தெரியாது என்றோ, கோபமானவர் என்றோ கிண்டலாகக் கூறுவதாகக் கூறினாள். ஓரிருமுறை அவள் தாயார் ஆசிரியர் பற்றி அவள் முன்னே விமர்சிப்பதைக் கவனித்துள்ளேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருந்தால் தானே கற்றல் முழுமையாகும்? ஆசிரியர்களும் மனிதர்கள் தான், குறைகள் இருக்கலாம். அதைக் குழந்தைகள் முன் கிண்டலாக விமர்சித்தால், குழந்தைகள் எப்படி மரியாதை கற்றுக் கொள்வர்? குறை களைய என்ன வழி என்று யோசிப்பதே நல்வழி, குழந்தைகள் முன் விமர்சிப்பது அல்ல. ஆசிரியர் என்று அல்ல மரியாதை கொடுக்கப்பட வேண்டிய எவருக்குமே இது தகும். யோசிப்போமா?

கொஞ்சம் தனியாக சுவாசிக்கட்டுமே?
எல்.கே.ஜி செல்லும் என் மகள் பள்ளியில், பல நாட்களாகப் பெற்றோர் வகுப்பறை வரை அனுமதிக்கப்படுவர். இதனால் ஏற்பட்ட ஒரு சில குழப்பங்களைத் தவிர்க்க, குழந்தைகளை வாசலில் விட்டுச் செல்லக் கூறினர். வாசலில் இருந்து பத்தடி தூரத்தில் வகுப்பறைகள் ஆரம்பித்து விடும். பள்ளியில் தான் நாம் குழந்தைகளின் விரலை விட்டு கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுவோம். எனவே இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளை வழி நடத்த ஆசிரியர்களும், ஆயாக்களும் நின்று கொண்டுதான் இருக்ககின்றனர். என்றாலும் சிலர் வந்து போடும் கூச்சல் இருக்கின்றதே!!!! ஒவ்வொரு குழந்தையையும் விரல் பிடித்து வகுப்பறையில் விட வேண்டும் என்றால், என்று தான் அவர்களை சுவாசிக்க விடப்போகிறோம்?

விதிகளை மதிப்போமா?
என் பெண்ணிற்கு அப்பொழுத் எட்டு வயது. பூங்கா சென்றிருந்தோம். சில பெரியவர்கள் தங்கள் சின்ன புத்தியால் குழந்தைகளின் ஊஞ்சலில் ஆடுவார்கள். அதுவும் சிலர், அருகே ஏக்கத்துடன் நிற்கும் குழந்தைகளைக் கூட கவனியாது, கூறினாலும் கேட்காது ஆடுவார்கள். அப்படி ஒரு பூங்காவில், ஒரு சிறிய இராட்டினம் "6 வயதுக்குட்பட்டோர் மட்டும்" என்ற அறிவிப்புடன் இருந்தது. அவளுக்கு மிகவும் ஆசை, ஆனால் அறிவிப்பைக் கண்டவுடன் அவள் விலகி விட்டாள். "உனக்கு 2 வயது தான் அதிகம், தெரியாது ஏறிக் கொள்", என்றேன். அவள் மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு என்னை யோசிக்க வைத்தது. அறிவிப்பைக் காட்டி விதிகளை மதிக்க அவளுக்குப் புரிய வைக்க வேண்டிய நானே விதிகளை மிதிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயமா? ஊஞ்சலில் ஆடுவோரைக் குறை கூறும் தகுதி கூட இழந்து விடுகிறேன். இது போன்ற விஷயங்களிலும் சற்று கவனம் செலுத்தினால், நற்குணங்கள் என்றும் அவ்ர்களிடம் இருக்கும். அவளைப் பாராட்டினேன் விதிகளை மதித்ததற்கு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...
"வெயிலில் ஆடாது, கருத்து போய்டுவ...", இது என் குழந்தைகளிடம் எப்பொழுதாவது நான் கூறும் சொற்கள். இவை எனக்குத் தவறாகத் தெரியவில்லை, எனது தோழி கூறும்வரை. அவளது பிள்ளை நல்ல நிறம். வெயிலில் ஆடியதால் கருத்தாலும், "நீ கருத்துவிடுவாய்" என்று கூற அவள் விழையவில்லை. காரணம்... கருப்பு நல்ல நிறம் அல்ல என்ற எண்ணம் அவனுக்கு உருவாகக்கூடாது என்பதால். எனவே "நீ களைத்து விடுவாய்" என்பாளாம். ஆனால் அவள் பையன் அவளை மிஞ்சி விட்டான். "கருப்பா கூட ஆகுது... ஆனால் என்ன கருப்பும் நல்ல நிறம் தானே!!" என்றானாம். நிறம் பற்றிய தவறான எண்ணங்கள் உருவாகுவதைத் தவிருங்கள்.

19 comments:

அபுஅஃப்ஸர் said...

நல்ல பயனுள்ள பதிவு

அபுஅஃப்ஸர் said...

எல்லா பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டிய பதிவு..

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க‌

வாழ்த்துக்கள் அமுதா

அபுஅஃப்ஸர் said...

என் வலைப்பக்கம் வந்து பாருங்கள் ஒரு புதுவித முயற்சி மற்றும் வியப்புடன்

ஆதவா said...

சகோதரி, இன்றைய குழந்தைகளுக்கு நாம் பாடம் சொல்லித் தருவதைக் காட்டிலும், அவர்கள் நமக்கு பாடம் சொல்லித் தருகிற சூழ்நிலை இன்றூ உருவாகி வருகிறது.

அவர்கள் இன்று நிறைய யோசிக்கிறார்கள். நாம் இன்னும் குழந்தைகளை ஒன்றும் அறீயாத குழந்தைகளாகவே நினைத்துக் கொள்கிறோம்..

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு சிறுகதையில் ஒரு குழந்தை, தன் அன்னையின் தங்கையும் அப்பாவும் சேர்ந்திருப்பதைக் கண்டு, அடுத்த நாள் சொல்லுவாள், " நான் இன்னும் குழந்தை இல்ல' என்று.... அது மாதிரிதான்....

இது குறித்து நாம் நிறைய விவாதிக்கலாம்... நேரம் அமையும் பொழுது...

குழந்தைகள் குறித்து ஒரு கட்டுரையே போடலாம்.... (குழந்தைகளின் உலகம் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். விரைவில் எனது வலையில்..)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

தாரணி பிரியா said...

நல்ல பதிவுங்க் அமுதா

எல்லாமே கண்டிப்பா பின்பற்றபட வேண்டியவை :)

பாலராஜன்கீதா said...

இன்னும் இதுபோன்ற பல இடுகைகளை வரவேற்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

"கற்றுக்கொடுங்கள்... கற்றுக்கொள்ளுங்கள்..."\\

செய்துடுவோம் ...

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளின் குணநலன்கள் அமைவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது.\\

சரியான விடயம்

நட்புடன் ஜமால் said...

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருந்தால் தானே கற்றல் முழுமையாகும்?\\

ஆமாம்

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் தனியாக சுவாசிக்கட்டுமே?\\

யோசிக்க வேண்டிய விடயம்.

நட்புடன் ஜமால் said...

\\அவளைப் பாராட்டினேன் விதிகளை மதித்ததற்கு\\

இது கற்று தரும் பல விடயங்களை.

நட்புடன் ஜமால் said...

\\கருப்பா கூட ஆகுது... ஆனால் என்ன கருப்பும் நல்ல நிறம் தானே!!\\

சந்தோஷமாயிருக்கு ...

ஆரோக்கியம்.

ராமலக்ஷ்மி said...

இப்பதிவை பேரண்ட்ஸ் க்ளப்புக்கு அவசியம் அனுப்புங்கள் அமுதா.

ஊஞ்சல் பற்றி எனக்கும் இதே கருத்து. ஆடும் பெரியவர்கள் சுற்றி இருக்கும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் என்பது ஒரு பாயிண்ட். இடத்தைப் பிடித்து தன் குழந்தைக்கு கொடுத்து விட்ட பெருமிதத்தில் பல பெற்றோர் சுற்றி ஏக்கப் பார்வையுடன் காத்திருக்கும் பல குழந்தைகளைக் கண்டு கொள்வதேயில்லை. ‘கொஞ்ச நேரம் ஆடி விட்டு அடுத்தவர்களுக்கு சான்ஸ் கொடுத்திடணும்’ என தம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினால் அவர்கள் கேட்க மாட்டார்ங்களா என்ன?

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு!

அ.மு.செய்யது said...

புள்ள குட்டிய படிக்க வையுங்கனு நான் சொன்னதுக்கு
சரின்னு கிளம்புனீங்க...

போன வேகத்துல போட்ட பதிவாங்க இது ??

பயனுள்ள பதிவு தான் அமுதா...

Yaro said...

பெற்றோர்கள் மன அமைதி, மன தெளிவு மிகவும் அவசியம்.

நமக்கு தெரிந்ததும் நாம் சொல்லி கொடுப்பதும் சரியானதா என்பதை
தெரிந்து இருக்க வேண்டும்.

குழந்தைகளை அவர்கள் வழி விடுவது நல்லது என்பது என் கருத்து.

நமது ஆசையை அவர்கள் மேல் தினிக்காமல் இருக்க வேண்டும்.

முதல் ரேன்க் வாங்க வேண்டும் என்று அவர்கள் நிம்மதியை கெடுக்க கூடாது.

வடுவூர் குமார் said...

அருமை அருமை.
இளம் பெற்றோர்களுக்கு நிறைய சொல்லியுள்ளீர்கள்.

ஜீவன் said...

நன்கு கவனித்து படித்தேன் எல்லாம் நல்ல
தகவல்கள் மிக்க நன்றி!!!