என் மேகம் ???

Monday, December 15, 2008

வண்ண வண்ண பொம்மைதான்...




குட்டிப் பெண்ணுக்கு இப்பொழுது விவரம் தெரிவதால், பல விஷயங்களை நான் காரணத்தோடு மறுக்கிறேன். பொம்மை (பார்பி ரொம்ப காஸ்ட்லி, வேண்டாம்), டி.வி (முதலில் ஸ்கூலுக்கு ரெடியான பின் என்பது இப்பொழுது ஸ்கூல் விட்டு வந்த பின்) என்று விதிமுறைகள் போட்டாச்சு. முதலில் பயங்கர எதிர்ப்பு (முன்பெல்லாம் அழுகையை நிறுத்த முடியாது) கிளம்பினாலும், நான் அசைந்து கொடுக்காததால், மேடம் பின்பற்றுகிறார்கள். நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல விஷயம்.

கையில் ஒரு "கிஃட் வவுச்சர்" கிடைத்தது என்று ஒரு பொம்மைக் கடையுள் நுழைந்தோம். உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் பார்பி பொம்மைகளை விரும்பினார்கள். உண்மையில் எதை எடுப்பது எதை விடுவது என்று தோன்றும் அழகழகான பொம்மைகள். பெரியவள் திணறினாள். அது/இது என்று ரொம்ப குழம்பி, ஒரு வழியாக ஒன்றை எடுத்தாள். நான் அவளிடம், "இந்த பார்பி பொம்மை வைத்து எவ்வளவு நேரம் விளையாடுவாய்? அவளும் அது தான் எடுக்கப் போகிறாள். நீ கொடுக்கும் அந்த காசுக்கு அந்த மென்பொம்மைகள் எடுத்தால் பெரிதாகவும் இருக்கும், ரொம்ப நாள் விளையாடலாம்", என்றேன். அவள் கொஞ்சம் யோசித்து, சரி என்று ஒரு பிங்க் டெடி எடுத்து மிக சந்தோஷமானாள்.

சின்னவள் செய்தது தான் ஹைலட். மேடம் பார்பி பொம்மைகளை ஒரே ஒரு பார்வை பார்த்தார்கள், டக்கென்று முடிவு செய்தார்கள். மற்றொன்று இன்னும் அழகாகத் தோன்ற, அதைக் காட்டினேன். "இல்ல, அது காஸ்ட்லி" என்றாள். (எல்லாம் ஒரே விலை தான்). வேறு எந்த பொம்மைக்கும் அவள் தாவவில்லை. எடுத்த முடிவு எடுத்தது தான் என்பது போல், "ம் , கிளம்பலாம்" என்றாள். அவள் கசின்களுக்குத் தேர்வு செய்யும் பொழுதெல்லாம், இம்மியும் சலனப்படாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.

15 comments:

நட்புடன் ஜமால் said...

\\நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல விஷயம். \\

ம்ம்ம் ... நல்ல ஆரோக்கியம்.

நட்புடன் ஜமால் said...

\\இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.\\

உங்கள் செல்வங்களின் செயல் எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

pudugaithendral said...

இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //
இதுதாங்க உண்மையான பரிசு.

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.

பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம், பீரோவுக்குள்ள புதுசு தூங்கினாலும்.
ஆனா, உங்க சின்னப்பொண்ணு பொம்மைகளுக்கு சலனப் படவேண்டிய வயசு, ஆனா.........

ம்ஹீம் கத்துக்கனுங்க நாமெல்லாம் இந்தத் தலைமுறையிடமிருந்து நெறைய. நாம என்னவோ நெனச்சுக்குறோம் அவங்களுக்கு சொல்லிக் கொடுப்பதாய்.

தமிழ் அமுதன் said...

இருவரின் செயலும் ''பாராட்டுக்குரியதாக இருந்ததால்'' பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.

சூப்பர்!


//பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம்//

;;;;))))

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.
///

அ.அம்மா.அக்கா போறப்ப என்னியம் கூட்டிக்கிட்டு போகணும்

மீ டூ ஆசை டூ மீட் :)))

அமுதா said...

/*உங்க சின்ன பொண்ணை இப்பவே பார்க்கனும் போல இருக்கு*/
வாங்க வாங்க... ஒரு பதிவர் சந்திப்பு குட்டீஸோட பண்ணிறலாம் :-)

Dhiyana said...

//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //

இருவரின் செயலும் பாராட்டுத்தற்குரியது தான்.

குடுகுடுப்பை said...

பாராட்டுக்கள்.அடிக்கடி குழந்தைகள் செயவதை பகிருங்கள்

குடுகுடுப்பை said...

//பெரியவங்க நாம புடவை கடைக்கு போனாலே திணருவோம்,/

சமீபத்தில நான் சென்னை வந்தப்போ, மோக்சாவில் 15 நிமிடத்தில் இரண்டு புடவை எடுத்தேன்(தங்கமணி வரவில்லை என்பதை கவனத்திக் கொள்க)

சென்ஷி said...

//புதுகைத் தென்றல் said...
இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. //
இதுதாங்க உண்மையான பரிசு.

வாழ்த்துக்கள்
//

ரிப்பீட்டே :-)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எங்க அப்பாட்ட ஒண்ணாங்கிளாஸ்லருந்து கார் [உண்மையான] வேணும் கேட்டுட்டே இருந்தேன்..


நாலு அஞ்சு படிக்கும்போது டிவிஎஸ் கேட்டேன்

முடியாது சொல்லிட்டே இருந்தார் ஒன்பது படிக்கும்போது சைக்கிள்கேட்டேன்

உடனே வாங்கி கொடுத்தார்

Anonymous said...

குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திரும்ப வாழ்வது போல. நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. பாடமும் கற்றுக் கொள்ளலாம்.

ராமலக்ஷ்மி said...

//இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால்//

ஆமாம்:), இருவர் செயலையும் ரசித்தேன்.

ரிதன்யா said...

//குழந்தைகளை வளர்ப்பதென்பது நம் பால்யத்தை நாமே திரும்ப வாழ்வது போல. நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. பாடமும் கற்றுக் கொள்ளலாம்.//


அட எப்படிங்க இப்படியெல்லாம்!