என் மேகம் ???

Tuesday, December 2, 2008

நீயின்றி....
காதைக் கிழிக்கும் அமைதியுடன்
காலை மலர்ந்தது...

முத்தமில்லா கணங்கள்
சத்தமின்றி ஊர்ந்தன...

இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு

விடுமுறை முடியும் முன்
விரைந்து வா மகளே!!

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.

15 comments:

சந்தனமுல்லை said...

:-) பேக் பண்ணி அனுப்பிட்டு ப்லீங்ஸா!!

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா.

//இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்//

வீட்டுக்கு களை எது என்பதை மட்டும் அல்ல வாழ்க்கையில் சந்தோஷம் எது என்பதையும் அவை இல்லாத போகையில்தான் உணர்கிறோம்.

ஜீவன் said...

//''காதைக் கிழிக்கும் அமைதியுடன்''//

பெரும்பாலும் உங்கள் கவிதைகளை
படிக்கும் போது

சில வரிகளை மீண்டும் ..மீண்டும் படித்து

ரசித்துவிட்டுதான் அடுத்த வரிகளை

படிக்க தோன்றுகிறது

இதுவும் அப்படித்தான்... அருமை!

அமுதா said...

/*பேக் பண்ணி அனுப்பிட்டு ப்லீங்ஸா!!*/
ஆமாம் முல்லை. மனசென்னவோ ஓயாமல் அடிச்சுக்குது...

அமுதா said...

/*வீட்டுக்கு களை எது என்பதை மட்டும் அல்ல வாழ்க்கையில் சந்தோஷம் எது என்பதையும் அவை இல்லாத போகையில்தான் உணர்கிறோம் */
ஆமாம் மேடம். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

அமுதா said...

பாராட்டுக்களுக்கு நன்றி ஜீவன்.

அதிரை ஜமால் said...

\\காதைக் கிழிக்கும் அமைதியுடன்
காலை மலர்ந்தது...\\

ஜீவன் அண்ணா சொன்னது போல், மீண்டும் மீண்டும் படித்தேன் இவ்வரிகளை.
ஒரு நல்ல கதாசரியரின் வர்னனைப்போல் இருந்தது.

\\முத்தமில்லா கணங்கள்
சத்தமின்றி ஊர்ந்தன...\\
:)

\\இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என களையிழந்து உள்ளது வீடு

விடுமுறை முடியும் முன்
விரைந்து வா மகளே!!

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.\\

மிக அருமைங்க.
பிரிவின் துயரங்களை எத்தனையோ விதங்களில் படித்துள்ளேன், பார்த்துள்ளேன் - ஏன் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறேன்.

குட்டிப்பாப்பாவை (அதுவும் பேக் பண்ணி) அனுப்பிவிட்டு - புலம்பும் விதம் அருமை.

குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழும் பல ரங்கமனிகள் இப்படித்தான். என்ன ஒரு வித்தியாசம், நாங்கள் வீட்டிலே பெற்றோறை(இதப்பார்ரா), மனைவியை, குழந்தையை விட்டு வரும் போது கூட அவ்வளவு கஷ்டம் தெரியாதுங்க(தங்கமனிய கேட்டு பாருடா என் டுபுக்கு).
நம்முடன் வந்து சில காலம் தங்கி, அவர்களை (பேக் பண்ணி) அனுப்பிவிட்டு வீட்டினுள் வந்து பார்த்தால் ஒரு வெறுமை வருமே ...
சொல்லி மாளாதுங்க.

புதுகைத் தென்றல் said...

ம்ம். நல்லா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையா சொல்லி மனசுல
பாரத்தை ஏத்தி வச்சுட்டீங்க.

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.

:)))))))


// வீட்டுக்கு களை எது என்பதை மட்டும் அல்ல வாழ்க்கையில் சந்தோஷம் எது என்பதையும் அவை இல்லாத போகையில்தான் உணர்கிறோம்.//

ஆமாம் ராம் மேடம், நீங்க சொல்வது உண்மைதான்.

அமுதா said...

/*நம்முடன் வந்து சில காலம் தங்கி, அவர்களை (பேக் பண்ணி) அனுப்பிவிட்டு வீட்டினுள் வந்து பார்த்தால் ஒரு வெறுமை வருமே ...
சொல்லி மாளாதுங்க.*/
புரிகிறது ஜமால் உங்கள் தவிப்பு. சீக்கிரமே உங்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்க, கடவுள் அருள் புரியட்டும்.

அமுதா said...

வாங்க புதுகைத் தென்றல். நன்றி

அமுதா said...

கருத்துக்கு நன்றி அமித்து அம்மா.

PoornimaSaran said...

//இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு
//

ஆஹா வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சைப் பிழிகிறது..

RAMYA said...

//
விடுமுறை முடியும் முன்
விரைந்து வா மகளே!!

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.
//

பாரமாகி போன என் உள்ளத்து உணர்வுகளை என்னெவென்று சொல்வேன் தோழி.

மனதை உருக்கி விட்டது மேலே உள்ள வரிகள்.

நன்றாக எழுதி இருக்கீங்க அமுதா.

தீஷு said...

கலக்கலா எழுதிரீங்க அமுதா. அனுபவத் தாக்கல்.