என் மேகம் ???

Tuesday, December 9, 2008

விடுகதை

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என் குட்டிப் பெண்ணின் டாப் 1 இது)

2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.

3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு

4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.

6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

7. மழையில் பூக்கும் பூ

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்

10. வெள்ளிக் கிணத்துல தண்ணி


விடைகள்
தென்னை மரம், வானம் - நட்சத்திரம், முட்டை, ஆட்டுக்கல், கண், கொசு, குடை, செருப்பு, வாய், தேங்காய்

12 comments:

சந்தனமுல்லை said...

:-)

//ஆட்டுக்கல்//

ஆட்டுக்கால்-ன்ற மாதிரி இருந்துச்சு!

அமுதா said...

மேடம், ஆம்பூர் பிரியாணியை ரொம்ப மிஸ் பண்றீங்களோ>

சென்ஷி said...

ம்
சரி

நானும் யோசிச்சு நிறைய்ய எழுதி மறுபடி வந்து கமெண்டு போடுறேன்.

ஜீவன் said...

எங்க வீட்டு கிணத்துல வெள்ளி கிண்ணம்
மிதக்குது -நிலா

ஆயிரம் தச்சர் கூடி அமைந்த மண்டபம்
ஒருவர் கண்பட்டு உடைந்தது -தேன் கூடு

கருப்பு சட்டை காரன் காவலுக்கு கெட்டி
காரன்-பூட்டு

கெணத்த சுத்தி அகத்தி கீரை -கண்

ஆயில்யன் said...

//அமுதா said...
மேடம், ஆம்பூர் பிரியாணியை ரொம்ப மிஸ் பண்றீங்களோ>
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

தீஷு said...

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது

- பட்டாசு

அதிரை ஜமால் said...

கேள்வியும் நானே பதிலும் நானே ...

விடுகதை-ய போட்டுட்டு விடையும் சொல்லிட்டீங்க ...

அப்புறம்

Blogger சந்தனமுல்லை said...

:-)

//ஆட்டுக்கல்//

ஆட்டுக்கால்-ன்ற மாதிரி இருந்துச்சு!\\ உண்மையிலேயே சிரிச்சிட்டேன்...

Anonymous said...

ques : Blog site mattum irukum, blog irukaadhu, adhu yenga ?
ans : inga.

verum mokkai thaan irukum.

பிரேம்குமார் said...

//அதிரை ஜமால் said...
கேள்வியும் நானே பதிலும் நானே ...

விடுகதை-ய போட்டுட்டு விடையும் சொல்லிட்டீங்க ...
//

அதானே.... பதில் சொல்லலாம்னு ஓடோடி வந்தா, எல்லா பதில்களையும் நீங்களே போட்டுட்டீங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...
மேடம், ஆம்பூர் பிரியாணியை ரொம்ப மிஸ் பண்றீங்களோ>

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுக்கூட ஒரு கொசுவத்தி பதிவு மாதிரிதான் இருக்கு, மறந்தத ஞாபகப்படுத்துது.

Anonymous said...

mela moodi keela moodi naduvula melugu thiri yerithu amaithu athu yenna ?