என் மேகம் ???

Monday, December 29, 2008

உங்களுக்குத் தெரியுமா?

இந்த பதிவில் நான் சொல்லும் விஷயம் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். என்றாலும், சிலருக்குப் புதிதாகத் தெரிந்து ஒரு சிறு எண்ணம் தோன்றலாம் என்றே இப்பதிவு.

கிருஸ்துமஸுக்காக அலுவலகத்தில் வசூலித்த சிறு நன்கொடை தொகையை ஓர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்கச் சென்றிருந்தோம். அவர்கள் தாய் தந்தை அற்றவர் என்று மட்டுமல்லாது, பெற்றோர், உற்றோர் இருந்தும் இல்லாதவர்கள். கிட்டதட்ட 50 பேர் கொண்ட அவ்வில்லத்திற்கு ஒரு நாள் உணவுக்கான தொகை 1500 ருபாய்கள். எனக்கு ஒரு 365 பேர் ஒரு நாள் உணவுச் செலவை ஏற்றுக் கொள்ளக் கிடைத்தால், இக்குழந்தைகளுக்கான ஒரு வருட சாப்பாட்டு பிரச்னை தீர்ந்து விடும் என்று அவ்வில்லத் தலைவி ஒரு brochure கொடுத்தார்கள். இது போக துணிமணி, படிப்பு என்று அவர்கள் செலவுகளைக் கவனிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த இன்னோர் ஆதரவற்றோர் இல்லத்திலும், ஒரு குழந்தையைப் பேண ஒரு வருடத்திற்கு அவர்களுக்குத் தேவைப்படும் தொகை 5000 (அ) 6000 என்று இருக்கும். அதாவது 500 ரூபாய் கொடுத்தால், ஒரு குழந்தைக்கு ஒரு மாதச் செலவு கிடைத்துவிடும். உங்கள் அருகில் இருக்கும் இது போன்ற ஆதரவற்றோர் இல்லம் இருந்தால், வருடத்தில் ஒரு நாளாவது இது போன்ற உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த ஊக்கம் மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு தர உறுதுணையாக இருக்கும்.

11 comments:

அதிரை ஜமால் said...

\\"உங்களுக்குத் தெரியுமா?"\\

சொன்னதானே தெரியும்.

அ.மு.செய்யது said...

பார்ட்டி கூத்து என்று புத்தாண்டு இரவில் கும்மாளம் அடிப்பதை விட, இது போன்று நற்காரியங்கள் செய்து புத்தாண்டை வரவேற்பது சாலச் சிறந்தது.
நல்ல பதிவு அமுதா !!!!!!!

அதிரை ஜமால் said...

அருமையான முயற்சி.

ஜீவன் said...

நல்ல செயல்! நாங்களும் இதுபோல முயற்சி பண்ணுறோம்!

குப்பன்_யாஹூ said...

எங்களுக்கு தெரியும் என்றாலும், சரியான தருணத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள்.

குப்பன்_யாஹூ

சுமி said...

தகவலுக்கு நன்றி ......

சந்தனமுல்லை said...

// அதிரை ஜமால் said...

அருமையான முயற்சி.//

ரிப்பீட்டு!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு அமுதா. எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில் சாப்பாடு நாமே செய்து எடுத்துப் போக விடுவார்கள். விரும்புவர்களை பரிமாறவும் அனுமதிப்பார்கள். சாப்பாடை விடவும் உதவ நினைப்பவர்களை அந்தந்த சீசன் பழங்களை நிறைவா வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்துவார்கள் இல்லத் தலைவி. ஸ்வீட் போன்றவறை தவிர்க்கச் சொல்லுவார்கள். பழைய நோட்டுகள், உடைகளை சந்தோஷமாய் வாங்கிக் கொள்வார்கள். இன்னொரு இல்லத்திலோ பழைய உடைகள் பொருட்கள் எதுவும் வாங்க மாட்டார்கள். ஸ்வீட் சாப்பாடு எதுவானாலும் குழந்தைகளுக்கு நேரடியாகக் கொடுக்க அனுமதி கிடையாது. உதவ விரும்புபவர்களை பணமாக மட்டுமே கொடுக்கச் சொல்லுவார்கள். அது போக பள்ளி நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே வாங்கிக் கொடுக்க அனுமதி. உதவி பெறுவதில் ஏன் இப்படி சட்டதிட்டம் எனக் கருதாமல் அந்தந்த இல்லங்கள் கடைப் பிடிக்கும் முறைகளை நாமும் மதித்து நடந்து அவர்களுக்கு உதவுதல் அவசியம்.

அமுதா said...

/*ஏன் இப்படி சட்டதிட்டம் எனக் கருதாமல் அந்தந்த இல்லங்கள் கடைப் பிடிக்கும் முறைகளை நாமும் மதித்து நடந்து அவர்களுக்கு உதவுதல் அவசியம்.*/
உண்மை மேடம்...

Rithu`s Dad said...

நல்ல பதிவு. முடிந்தால் அவர்களுடைய முகவரி தரவும், உதவ முயற்சிக்கிறோம். மேலும், இது போல சிறிய சுயவிளம்பரம் செய்யாத உண்மையான இல்லங்களுக்கே உதவ விரும்புகிறோம். விளம்பரம் செய்து உலகெங்கிலிருந்தும் பணம் வசுலிப்பவர்களின் நிலை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே அல்லவா..

chikku said...

வணக்கம் ,

தோழி ஒருவர் தனது பிறந்தநாளை ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் செலவிட
விரும்புகிறார் .
சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு இல்லத்தின் முகவரி தேவை...

மாற்று திறன் கொண்டோர் , வயதானவர்கள் இல்லம் , ஆதரவற்றோர் இல்லம் இப்படி
ஏதேனும் ஒன்று பற்றி கூறுங்களேன்...

நன்றி
நவீன்.சோ