என் மேகம் ???

Tuesday, December 2, 2008

ஆராரோ ஆரிராரோ...

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... தாலாட்டு. நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... அதைக் கேட்டுத் துயிலும் உயிரைக் கண்டு மனம் நெகிழும். உண்மையில் "இது தூங்கும் நேரம்", என்று ஒரு பழக்கம் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது.

என் தாய் "பூஞ்சிட்டு கன்னங்கள்..." என்று பாட ஆரம்பித்ததில் நான் மிகவும் கவரப்பட்டு, அதன் பிறகு பல பாடல்கள் பாடித் தாலாட்டியுள்ளேன்.

"ஆராரோ ஆரிராரோ...
என் கண்ணே ஆரடிச்சா..."

என்று என்றோ தமிழ் பாடத்தில் படித்த தாலாட்டு பாடல் முதற்கொண்டு ...

"மானே கண்ணுறங்கு...மயிலே கண்ணுறங்கு" என்ற பாடல்களில் என் கற்பனைக்கேற்ப பல கொஞ்சல்களைச் சேர்த்து...

"ஆயர் பாடி மாளிகையில்..." என்று தாலேலோ பாடி

முடிவில் தஞ்சமடைந்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். "பூஞ்சிட்டு கன்னங்கள்..." (இன்றும் என் பெண்களின் நேயர் விருப்பம் இதுதான்), "பச்ச மலை பூவு..", "தென்னையில் தொட்டில் கட்டி..." , "தேனே தென்பாண்டி மீனே...", "தென்பாண்டி சீமையிலே..." என்று பல பாடல்கள் இதில் அடக்கம்.

வருடங்கள் கடந்து விட்டாலும், என் மனதை விட்டகலாது மனதை நெகிழ/மகிழ வைத்த தாலாட்டு நிகழ்வுகள்:

நெகிழ்ச்சி
நந்தினி காது வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுது "ஆயர்பாடி மாளிகையில்" இரவு வெகுநேரம் பாடினேன். நிறுத்தினால் வலியில் துடிப்பதால் பல முறை பாட வேண்டி இருந்தது. மருந்து கொடுத்தும் காது மிகவும் வலித்ததால் "சாமிட்ட வேண்டிக்கோ, சரியாகிடும் என்றேன்". சற்று நேரம் கழித்து "வேண்டிட்டேனே...ஏன் சரியாகலை" என்ற கேள்விக்கு விடை கூற இயலாது தாலாட்டைத் தொடர்ந்தேன்.

மகிழ்ச்சி

தூங்காது தொல்லை கொடுத்த குட்டிப் பெண்ணைத் தாலாட்டிப் படுக்க வைக்க முடியவில்லை என்று, காரில் ஏற்றி (ஊர் சுற்றினால் காற்றுக்கு சில சமயம் நன்கு தூக்கம் வரும்), கொஞ்ச நேரம் வேடிக்கை காட்டிவிட்டு, "நீ சும்மா அம்மா மேல சாஞ்சுக்கோ", என்று கூறி மெல்லத் தாலாட்ட ஆரம்பித்தேன். சட்டென்று அவள் எழுந்து, என் வாயை மூடினாள். "நான் தூங்க மாட்டேன்" என்று கூறினாள். அந்த செய்கை சிரிக்க வைத்தது. என்றாலும் சமயம் பார்த்து தாலாட்டித் தூங்க வைத்தேன்.

இப்பொழுதும் வாய்ப்பு கிடைத்தால் தாலாட்டு பாடாமல் இருப்பதில்லை. வெகுநாட்களுக்குப் பின்பு, சகோதரன் குழந்தையைத் தாலாட்டு பாடித் தூங்க வைத்த பொழுது, மிகவும் நிறைவாக இருந்தது.

தாலாட்டு பற்றி விக்கிபீடியாவில் இங்கு காணலாம்.
சில தாலாட்டுப் பாடல்களை இங்கு காணலாம்.

21 comments:

பாபு said...

நல்ல ஒரு பதிவு ,அதுவும் குண்டு,துப்பாக்கி என்று எல்லா பதிவுகளும் பேசும் நேரத்தில்
என் பொண்ண எப்படி தூங்க வைத்தேன், பாருங்க

http://nallananban-babu.blogspot.com/2008/11/blog-post_24.html

அமுதா said...

தங்கள் (முதல்) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாபு. (ம்... உங்க பெண்ணை நல்லா தாலாட்டு ஆடி தூங்க வச்சிருக்கீங்க :-) )

ராமலக்ஷ்மி said...

புகழ்ச்சிக்கு சொல்ல வில்லை அமுதா. நெகிழ்சியும் மகிழ்ச்சியும் எங்களுக்கும் ஏற்பட்டது பதிவைப் படிக்கையில்.

// நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... //

:))! ஆமாம் சரியாகச் சொன்னீர்கள்!

ஆயில்யன் said...

//பச்ச மலை பூவு..", "தென்னையில் தொட்டில் கட்டி..." , "தேனே தென்பாண்டி மீனே...", "தென்பாண்டி சீமையிலே//

கலக்கலான செலக்‌ஷன்ஸ் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நினைவுகளை கிளறச்செய்த ஒரு பதிவு

ம்,

சந்தனமுல்லை said...

சுவாரசியம். நெகிழ்வான நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாயிருந்தது!!

Raghav said...

அப்புடியே நீங்க பாடின ஒரு தாலாட்டை பதிஞ்சுருந்தா நாங்க கேட்டுக்கிட்டே தூங்கிருப்போம்ல.இப்போ தான் முதல் வருகை.. மத்த பதிவுகள பொறுமையா படிச்சு பாக்குறேன்.. உங்கள் அருமைக் குழந்தைகளை பத்தி நிறைய சொல்லிருக்கீங்களோ ??

ஆயர்பாடி மாளிகையில் பாட்டு என்றும் மறக்க முடியாதது... இப்பவும் தூக்கம் வரலன்னா, ஆயர்பாடி மாளிகை பாட்டு தான் தூக்கம் வரவைக்கும்.. பாலு சார் அப்புடியே உருகியிருப்பார்.. கொஞ்ச நாள் (வருஷம்) முந்தி பாத்த இந்த பதிவிலுள்ள பாடலை பாருங்க.. அட்டகாசமா இருக்கும்..

http://pillaitamil.blogspot.com/2006/11/blog-post_29.html

நன்றி.
ராகவன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது கடல் பாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கழித்து "வேண்டிட்டேனே...ஏன் சரியாகலை"





சிறப்பு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான் தூங்க மாட்டேன்"





.............

அமுதா said...

நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி ஆயில்யன்
நன்றி முல்லை
நன்றி அமித்து அம்மா

அமுதா said...

தங்கள் (முதல்) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராகவ்
தங்கள் (முதல்) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்

தமிழ் அமுதன் said...

குழந்தைகளை பற்றிய உங்கள் பதிவுகள்
எல்லாமே இனிமைதான்!

தாலாட்டு என்றவுடன் இன்னும் மனம் லயிக்கிறது!


எங்க வீட்டு சின்ன குட்டி ''முகுந்தா முகுந்தா''
பாடினாதான் தூங்குது!

சென்ஷி said...

மிக அருமையான பதிவு.. படித்து முடித்தப்பின் மனம் நெகிழ்கிறது.. தாலாட்டு பாடாத தாய் எங்கும் இருந்ததில்லை போலும்.

எனக்கு பிடித்த பாடலாக இருந்த "ஆயர்பாடி மாளிகையில்" உண்மையில் அருமையான தாலாட்டும் பாடல்..

பின்னிணைப்பாக சில குரல் பதிவுகளையும் இட்டிருக்கலாம்..

அமுதா said...

நன்றி ஜீவன். "முகுந்தா முகுந்தா" இனிமையான பாடல்.

நன்றி சென்ஷி.
/*பின்னிணைப்பாக சில குரல் பதிவுகளையும் இட்டிருக்கலாம்..*/
மக்கள் என் பதிவைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இதை நான் செய்யவில்லை :-)

குடுகுடுப்பை said...

எங்க வீட்டில நான் கூட தாலாட்டு பாடுவேன்.
ஹரிணி பிறந்தால் மனக்கவலைகள் ...
தென்பாண்டிசீமையிலே இப்படி..

ஹரிணிக்கு 5 வயசு இப்போ திருவாசகமெல்லாம் கேக்கிரா.

அமுதா said...

/*ஹரிணிக்கு 5 வயசு இப்போ திருவாசகமெல்லாம் கேக்கிரா*/
ஓ... நல்ல விஷயம்.

வனம் said...

வணக்கம்


எனக்கு(ம் ) தாலாட்டு ரோம்ப பிடிக்கும், என் அம்மாவுக்கு தாலாட்டு தெரியாது என்றாலும்

ஒரு சந்தேகம்,

ஏன் தாலாட்டு எப்போதுமே உறங்கவைத்தலின் (தூங்க வைக்கவே )பொருட்டு பாடப்படுகின்றது

உங்களுக்கு தெறிந்தால் தெரியத்தரவும்

நன்றி
இராஜராஜன்

அமுதா said...

வருகைக்கு நன்றி இராஜராஜன். உறங்க வைக்க பாடப்படும் பாடல் தாலாட்டு என பெயர் பெற்றது என எண்ணுகிறேன். பதிவில் விக்கிபீடியா சுட்டி கொடுத்துள்ளேன். அதில் பாருங்களேன், பல விவரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு
/* "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர்"*/

Bharath said...

நம்ம சாய்ஸ் “கண்ணே கலைமானே”.. நல்ல போஸ்ட்..

//நந்தினி காது வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுது "ஆயர்பாடி மாளிகையில்" இரவு வெகுநேரம் பாடினேன். //

Order மாறின மாதிரி இருக்கே?? :)

இக்பால் said...

இப்பெல்லாம் தாலாட்ட மருந்துக்கூட கேட்க முடியரதில்லை. ஏன் சினிமாவில்கூட தாலாட்ட பாட்ட கேட்க முடியவில்லை.
ம்ம்.. என்ன பழைய நினைவுக்கு கொண்டு போய்ட்டிங்க.