என் மேகம் ???

Tuesday, August 12, 2008

என்ன பெயர் வைக்கலாம்...

இது என் சின்ன பெண்ணிற்கு பெயர் சூட்டிய பொழுது நடந்த விஷயம். எனக்கு மூன்றே மூன்று கண்டிஷன்:
1. என் பெண் நந்தினி என்ற பெயருடன் இயைந்து ஒலிப்பதாக இருக்க வேண்டும்
2. தூய தமிழ் பெயராக இருக்க வேண்டும்
3. பெயர் கொஞ்சம் மாடர்னாக இருக்க வேண்டும்.

வலையிலும் அகராதியிலும் தேடி "யாழினி" என்று பெயர் சூட்டினோம். இன்று, அப்பெயரைச் சொல்லும் பொழுது எல்லோரும் "இனிமையாக" உள்ளது என்று கூறிக் கொண்டே அதை பற்றிக் கூறும் விமர்சனங்கள்:
1. அட்டவணையில் கடைசியாக வரும் (தூங்கி விடக் கூடாது...)
2. கடைசியாக கேள்வி கேட்கப்படும் (கொஞ்ச நேரம் தூங்கலாம்...)
3. மெடிக்கல் சீட் மிஸ் ஆகி விடப் போகிறது (அப்பாடா ... இப்ப எலலாம் டை பிரேக்கர் பிறந்த தேதி தானாம்...இது "Not Applicable" )
4. வெளிநாட்டிற்குச் சென்றால் உச்சரிப்பது சிரமமாக இருக்கும் (லோக்கலில் மட்டும் எனன "யாளினி" தான் கேட்கிறது...)

நல்ல வேளை... இந்த கருத்தெல்லாம் நான் கேட்கும் முன்னே பெயர் சூட்டிவிட்டேன்.இன்னொருவர் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க கூறிய காரணம் முழுமையாக கூப்பிட வேண்டும் என்று பூஜா என்று வைத்ததாகக் கூறினார். யாரும் சுருக்காமல் கூப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை...

5 comments:

Aravinthan said...

தமிழன் தனது அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கு தூய தமிழில் பெயர் வைத்தல் வேண்டும். யாழினி இனிமையான அழகான தமிழ்ப் பெயர்.

ச.பிரேம்குமார் said...

நல்ல தமிழ் பெயர் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள்

anujanya said...

யாழினி ! அழகிய பெயர். வாழ்த்துக்கள் இந்த பெயர் கண்டுபிடித்து வைத்ததற்கு. நந்தினி என்ற பெயருடன் இயைந்து ஒலிக்க வேண்டுமா? நந்தினி? பொன்னியின் செல்வன்?

அனுஜன்யா

Shankar Thanushkodi said...

yalini

Anonymous said...

யாழினி ! அழகிய பெயர்.